நமக்கு இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைக்கு காரணமாக திகழக் கூடியது பணம்தான். பணம் நம்மிடம் எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு பிரச்சனைகள் அற்ற நிம்மதியான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். அதனால்தான் பலரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பணத்தை சம்பாதிக்க முயற்சி செய்கிறார்கள். அப்படி முயற்சி செய்தும் பலருக்கும் பணப்பிரச்சினை என்பது இருக்கத்தான் செய்கிறது. இந்த பண பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றால் பண வசியம் உண்டாக வேண்டும். பண வசியம் ஏற்பட வேண்டும் என்றால் மகாலட்சுமி நம் வீட்டிற்குள் வரவேண்டும். பண வசியத்தை ஏற்படுத்தவும் மகாலட்சுமி நம் வீட்டிற்குள் வரவும் அமாவாசை தினத்தில் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
மகாலட்சுமி எந்த இடத்திலும் நிரந்தரமாக இருக்க மாட்டாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அதனால் தான் அடிக்கடி நாம் மகாலட்சுமியை வழிபாடு செய்து நம் வீட்டிற்கு அழைக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமை அன்று சுக்கிரக்கோரையில் பலவிதமான மகாலட்சுமி வழிபாடுகளை நாம் மேற்கொள்கிறோம். எந்த அளவிற்கு வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த கிழமையாக திகழ்கிறதோ அதேபோல்தான் பௌர்ணமி, அமாவாசை போன்ற சந்திர ஆதிக்கம் அதிகமாக இருக்கக்கூடிய நாட்களிலும் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருளை நம்மால் பெற முடியும்.
அந்த வகையில் ஜூன் மாதம் 25ஆம் தேதி ஆனி மாதத்தின் அமாவாசை வருகிறது. அன்றைய தினம் முழுவதும் அமாவாசை இருக்கிறது என்பதால் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை அன்றைய தினத்தில் காலையிலேயே நாம் செய்து விட வேண்டும். மேலும் இந்த முறை அமாவாசை என்பது புதன்கிழமையோடு சேர்ந்து வருகிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். புதன் பகவானுக்குரிய அதிதேவதையாக திகழக் கூடியவர் பெருமாள் என்பதால் இன்றைய நாளில் நம் மகாலட்சுமி வழிபாடு செய்யும்பொழுது விரைவிலேயே மகாலட்சுமியின் அருளை நம்மால் பெற முடியும்.
இதற்கு மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய ஒரு பொருள் ஒன்று வேண்டும். அதுதான் பட்டை. இது சாதாரண பட்டையாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். சுருள்பட்டையாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு சிறிய துண்டு பட்டை இருந்தால் போதும். அந்த பட்டையில் பச்சை, சிவப்பு இந்த இரண்டு நிறங்களில் ஏதாவது ஒரு நிறத்தில் இருக்கக்கூடிய ஸ்கெட்ச் எடுத்து அதில் ஸ்ரீம் என்ற மகாலட்சுமியின் பீஜ மந்திரத்தை எழுத வேண்டும். எழுதிய இந்த பட்டையை ஒரு சிறிய தட்டிலோ அல்லது அகல் விளக்கிலோ வைத்து வீட்டு நிலை வாசலில் வைத்து விடுங்கள்.
இவ்வாறு வைத்து முடித்த பிறகு எப்பொழுதும் போல் தீபம் ஏற்றி நம்முடைய வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் பகல் முழுவதும் இந்த பட்டை வீட்டு நிலை வாசலுக்கு வெளியிலேயே இருக்கட்டும். அன்று மாலை தீபம் ஏற்றி வழிபாடு செய்யும்பொழுது வெளியில் இருக்கக்கூடிய அந்த பட்டையை வீட்டிற்குள் எடுத்து வந்து மகாலட்சுமி தாயாரின் பாதத்திற்கு கீழ் வைத்து விட வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் வீட்டிற்கு வெளியே இருக்கக்கூடிய மகாலட்சுமியை நாம் வீட்டிற்குள் அழைத்து வருவது போல் பொருள்படும். இந்த பட்டைக்கு தினமும் வழிபாடு செய்யும்பொழுது ஊதுபத்தி, சாம்பிராணி தூபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும். ஒரு மாதம் நிறைவடைந்த பிறகு இந்த பட்டையை கால்படாத இடத்திலோ அல்லது தண்ணீரிலோ போட்டுவிட்டு புதிதாக ஒரு பட்டையை நிலைவாசலில் வைத்து எடுத்து உள்ளே கொண்டு வந்து வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் மகாலட்சுமியை நம் வீட்டிற்குள் அழைத்து வருவதாக பொருள்படும். அதன் மூலம் நமக்கு பணவசியமும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: மனம் தெளிவு பெற பச்சரிசி பரிகாரம்
மிகவும் எளிமையான மகாலட்சுமியை வசியம் செய்யக்கூடிய பரிகாரத்தை முழுமனதோடு புதன்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய அமாவாசை தினத்தில் செய்பவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று பண வசியம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.