ராஜ வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் ஒருவருக்கு கை நிறைய பணம் இருக்க வேண்டும். அந்த ராஜ வாழ்க்கையை கொடுக்கும் பணத்திற்கே நீங்கள் ராஜாவாக வாழ வேண்டும் என்றால் முருகனுடைய பக்தனாக நீங்கள் இருந்தால் மட்டும் போதும். ஆடம்பரம் அழகு அறிவு திறமை அனைத்திற்கும் சொந்தக்காரர், முருகப்பெருமான். அந்த முருக பெருமானை வேண்டி இன்றைய தினம் செய்ய வேண்டிய அதிசக்தி வாய்ந்த ஆன்மீகம் சார்ந்த ஒரு வழி பாட்டை பற்றி தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
இன்று ஜூலை மாதத்தின் முதல் தேதி. செவ்வாய்க்கிழமை, இன்று மதியம் 1:49 மணி வரை சஷ்டி திதி இருக்கிறது. இன்று மதியம் 1 டு 2 செவ்வாய் ஹோரையும் இருக்கிறது. செவ்வாய்க்கிழமையோடு சஷ்டி திதி சேர்ந்து வந்திருப்பது அதிசிறப்பு. அதுவும் வளர்பிறையில் வந்திருக்கும் சஷ்டி திதி, இந்த நாளில் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் உத்திரம் நட்சத்திரமும் இருக்கிறது.
ஆக இந்த 1 மணி நேரத்தில் எவர் ஒருவர் முருகப்பெருமானை வேண்டி இந்த வழிபாட்டை செய்து, இந்த மந்திரத்தை சொல்கிறீர்களோ, உங்களுக்கான பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். வருமானம் பெருகும். நல்ல வேலை கிடைக்கும். வீட்டில் பொருளாதார நிலை உயரும். எல்லா நன்மைகளும் உங்களை வந்து அடையும். அந்த முருகர் மந்திரம் என்ன. இன்று வழிபாட்டை எப்படி மேற்கொள்வது. பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
சஷ்டி முருகர் வழிபாடு
இன்று வழிபாட்டிற்கு உரிய நேரம் என்றால் மதியம் 1 டு 2. அதிலும் குறிப்பாக மதியம் 1 டு 1:48 இந்த 48 நிமிடங்கள் அதிசக்தி வாய்ந்தவது. இந்த 48 நிமிடத்திற்குள் தான் அத்தனை நேர்மறை ஆற்றலும் அடங்கியிருக்கிறது. இந்த நேரத்தில் பூஜையறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.
முருகப்பெருமானுக்கு முன்பு நெய் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்களால் முடிந்த இரண்டு வாழைப்பழம் பிரசாதமாக வைத்துவிட்டு, உங்களுடைய கோரிக்கைகளை மனமுருகி முருகப்பெருமானின் சொல்லி, வேண்டிய வரங்களை கேளுங்கள். இந்த 1 மணி நேரத்தில் என்ன வரம் கேட்டாலும் நிச்சயம் அது உங்களுக்கு கிடைக்கும். திதி முடியும் தருவாயில், அந்த திதியானது யாருக்கேனும் நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்குமாம்.
இன்று சஷ்டி திதியானது முடியும் தருணத்தில் சரியாக முருகப்பெருமானின் பாதத்தைப் பற்றிக் கொண்டால், நமக்கு தோல்விகள் இல்லை. வேண்டிய வரங்களை கேட்டுவிட்டு, “ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்” என்று சொல்லி முருகப்பெருமானை வழிபடுங்கள். இந்த மந்திரம் உங்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய பிரம்மாண்ட வெற்றியை கொடுக்கும்.
இதையும் படிக்கலாமே: கடன் பிரச்சினையை தீர்க்கும் எமகண்ட நேரம்
தினம் தினம் இந்த மந்திரத்தை உச்சரித்தாலும் தவறு கிடையாது. இன்று வந்திருக்கும் வளர்பிறை சஷ்டியில் இந்த மந்திரத்தை எவர் ஒருவர் 27 முறை உச்சரிக்கிறீர்களோ, உங்களுடைய வாழ்க்கையில் இனிமேல் எல்லாமே ஏறு முகமாகத்தான் அமையும். நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல் மிக நல்ல பலன்களை தரும் என்ற நம்பிக்கையில் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.