- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் பிரச்சினை தீர்க்கும் ஜூலை மாதம் மைத்ரேய முகூர்த்தம்

கடன் பிரச்சினை தீர்க்கும் ஜூலை மாதம் மைத்ரேய முகூர்த்தம்

- Advertisement -

கடன் தொடர்பான பிரச்சனை தீர வேண்டும் என்று பல விதங்களில் வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் நாம் செய்வது உண்டு. அப்படி செய்வதோடு மட்டுமல்லாமல் கடனை தீர்ப்பதற்குரிய வழியையும் மேற்கொள்வோம். மேலும் அந்த கடன் திரும்பவும் நம்மிடம் வரக்கூடாது என்பதற்காக ஒரு சூட்சுமான வழிமுறையை பின்பற்றி அந்த நேரத்தில் கடனை அடைப்போம். அப்படி அடைக்கக்கூடிய நேரங்களில் மிகவும் முக்கியமான ஒரு நேரமாக கருதப்படுவதுதான் மைத்ரேய முகூர்த்த நேரம். அந்த நேரத்தில் செய்ய வேண்டிய ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஜூலை மாதம் மைத்ரேய முகூர்த்தம் வழிபாடு

ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு முறை வரக்கூடியது தான் மைத்ரேய முகூர்த்தம். இது லக்னம் மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் கணிக்கக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. அந்த வகையில் ஜூலை மாதம் ஏழாம் தேதி திங்கட்கிழமை அன்று ஜூலை மாதத்திற்குரிய முதல் மைத்ரேய முகூர்த்தம் வருகிறது. அன்றிய நாளில் பலரும் அந்த குறிப்பிட்ட மைத்ரேய முகூர்த்த நேரத்தில் வாங்கிய கடனிலிருந்து சிறிதளவு திருப்பிக் கொடுக்க முயற்சி செய்வார்கள். அப்படி செய்வதன் மூலம் அவர்களுடைய கடன் விரைவிலேயே தீரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படி கடனை திருப்பி தருவதோடு ஒரு சூட்சுமான பரிகாரத்தையும் நாம் செய்தோம் என்றால் விரைவிலேயே கடன் பிரச்சினை தீருவதற்குரிய வழிகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் பலவிதமான பரிகாரங்களை கடன் பிரச்சனை தீர்வதற்காக நாம் மேற்கொள்வதுண்டு. அதேபோல் தான் இந்த பரிகாரத்தையும் நாம் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்காக நாம் எந்த பொருளையும் வாங்க வேண்டும் என்று அவசியம் இல்லை. எந்த வழிபாட்டையும் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரே ஒரு பேனா இருந்தால் போதும் இந்த பரிகாரத்தை நம்மால் செய்து விட முடியும்.

இந்த பரிகாரத்தை சரியாக ஜூலை மாதம் ஏழாம் தேதி மாலை 4 43 மணியிலிருந்து 6:54 மணிக்குள் எழுத வேண்டும். இதுதான் மைத்ரேய முகூர்த்த நேரம் என்பதால் இந்த நேரத்தில் நாம் செய்யும் பொழுது நமக்கு அளவில்லா பலன் உண்டாகும். இந்த நேரத்தில் நீலம், பச்சை, சிவப்பு இந்த மூன்று நிறங்களில் ஏதாவது ஒரு நிற பேனாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதை எடுத்து உங்களுடைய இடது கையின் சுக்கிர மேடு என்று அழைக்கக்கூடிய கட்ட விரலுக்கு கீழ் இருக்கக்கூடிய மேடான பகுதியில் இந்த ஒரு குறிப்பிட்ட எண்ணை எழுத வேண்டும்.

- Advertisement -

இந்த எண்ணை எழுதி முடித்த பிறகு அந்த எண்ணையே குறைந்தபட்சம் இரண்டு நிமிடமாவது உற்றுப் பார்க்க வேண்டும். பிறகு நம்முடைய அன்றாட வேலைகளை நாம் செய்து கொள்ளலாம். இப்படி மைத்ரேய முகூர்த்த நேரத்தில் இந்த எண்ணை நம்முடைய கையில் எழுதுவதன் மூலம் நமக்கு கடன் பிரச்சினை தீருவதற்குரியுவதற்காக நாம் கடன் பிரச்சினை தீர்வதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும் என்றும் கடனை தீர்ப்பதற்குரிய வழிகள் நமக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த என் தான் 9649130. இந்த எண்ணை எழுதி முடித்த பிறகு அதை நாமே அழிக்கக்கூடாது. அதுவே தானாக அழிவதால் எந்த தவறும் கிடையாது.

இது ஒரு தாந்திரீக பரிகாரம் என்பதால் இந்த பரிகாரத்தை செய்வதற்கு எந்தவித தடைகளும் கிடையாது. யார் வேண்டுமானாலும் செய்யலாம். தங்களுடைய கடன் பிரச்சனை தீர்வதற்காக தாங்கள் மட்டுமே இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்றும் பிறருக்காக நாம் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

இதையும் படிக்கலாமே: வாழ்வில் சீக்கிரம் ஜெயிக்க சொல்ல வேண்டிய சிவ மந்திரம்

கடன் பிரச்சினை தீர வேண்டும் என்பதற்காக கடனை வாங்கி பரிகாரம் செய்வதை விட இப்படி சூட்சுமமான முறையில் பிரபஞ்சத்தின் மேல் முழு நம்பிக்கை வைத்து இந்த ஒரு பரிகாரத்தை செய்வதன் மூலம் விரைவிலேயே கடன் பிரச்சினை தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்