- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநினைத்ததை நடத்திக் காட்டும் காமாட்சி வழிபாடு

நினைத்ததை நடத்திக் காட்டும் காமாட்சி வழிபாடு

- Advertisement -

பெண் தெய்வ வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரிய வழிப்பாடாகவே கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக அம்பாளின் வழிபாடு என்பது அதிசக்தி வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. அப்படிப்பட்ட அம்பாளுக்குரிய சக்தி பீடங்களில் ஒன்றாக திகழ்வதுதான் காஞ்சி. காஞ்சி காமாட்சி அம்மனை முழு மனதோடு சரணாகதி அடைந்து வழிபாடு செய்து விட்டோம் என்றால் அந்த அம்மனின் அருளால் நாம் நினைத்தது நடந்திடும் என்று மகா பெரியவா கூறியிருக்கிறார். அப்படிப்பட்ட மகா பெரியவர் கூறிய காமாட்சியம்மன் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

காஞ்சி மகா பெரியவா பற்றி பலரும் அறிந்ததே, அவர் சொடக்கு போடும் சமயத்தில் பலரது பிரச்சினைகளை தீர்த்து வைத்து பலரது வாழ்க்கையும் மாற்றி அமைத்தவராக கருதப்படுகிறார். இன்றளவும் பலரது இல்லங்களில் அவருடைய புகைப்படத்தை வைத்து அவரை மானசீக குருவாக ஏற்று வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட மகா பெரியவா கூறிய காமாட்சி அம்மன் வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். தொடர்ச்சியாக 16 வாரங்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவைப்படக்கூடியது 16 அகல்விளக்குகள். வெள்ளிக்கிழமை அன்று காலையிலோ அல்லது மாலையிலோ இந்த வழிபாட்டை நாம் செய்யலாம். இதற்கு கண்டிப்பான முறையில் வீட்டு பூஜை அறையில் காமாட்சி அம்மனின் படம் வேண்டும். பூஜை அறையில் ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். அந்த இடத்தை சுத்தம் செய்து பன்னீர் தெளித்து அதில் பச்சரிசி மாவினால் கோலம் போட்டு காமாட்சி அம்மனின் படத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

காமாட்சி அம்மனின் படத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்து, வாசனை மிகுந்த ஏதாவது ஒரு மலரை காமாட்சி அம்மனுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். அதேபோல் காமாட்சியம்மனுக்கு ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தையும் வைக்க வேண்டும். அது வெற்றிலை பாக்காகவும் இருக்கலாம், வாழைப்பழமாகவும் இருக்கலாம், நம்முடைய வசதிக்கேற்றார் போல் ஏதாவது ஒரு பொருளை நிறைவேற்றியுமாக வைக்க வேண்டும். பிறகு ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபமேற்ற வேண்டும். தீபம் ஏற்று முடித்த பிறகு காமாட்சி அம்மனின் அஷ்டோத்திரம் இருக்கும் அதை பாராயணம் செய்ய வேண்டும் இவ்வாறு செய்து முடித்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடுங்கள்..

- Advertisement -

தீபம் எறிந்து முடிந்த பிறகு அந்த அகல் விளக்கை எடுத்து சுத்தம் செய்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது வாரம் முதல் வாரம் ஏற்றிய அகல் விளக்கோடு புதிதாக இன்னும் ஒரு அகல் விளக்கையும் சேர்த்து வைத்து இரண்டு தீபமாக ஏற்ற வேண்டும். அதேபோல் வாசனை மிகுந்த மலர்கள் நெய்வேத்தியம் போன்றவற்றை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு அகல் விளக்கை புதிதாக சேர்த்துக் கொண்டே வாருங்கள். பதினாறாவது வாரம் 16 அகல் விளக்குகளையும் வைத்து தீபம் ஏற்றி காமாட்சி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். கடைசி வாரம் தங்களால் இயன்ற அளவு பிறருக்கு பிரசாதம் தர வேண்டும் இப்படி செய்வதன் மூலம் நாம் எதை நினைத்து இந்த வழிபாட்டை செய்தோமோ அந்த செயல் விரைவிலேயே காமாட்சி அம்மனின் அருளால் நிறைவேறும்.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்கள் விலகி அனைத்து நன்மைகளும் உண்டாக

சாந்த ரூபினையாக திகழக்கூடிய காமாட்சி அம்மனை நினைத்து இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு காமாட்சி அம்மனின் அருளால் நினைத்தது நடக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்