- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடிப்பெருக்கில் பணம் பெருக பரிகாரம்

ஆடிப்பெருக்கில் பணம் பெருக பரிகாரம்

- Advertisement -

ஆடிப்பெருக்கு பெருவிழா என்பது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய அற்புதமான ஒரு திருவிழா. அன்றைய தினத்தில் எப்படி காவிரி ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறதோ அதே போல் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் மகிழ்ச்சிகளும் பெருகி வாழ வேண்டும் என்று வழிபாடு செய்யும் வழக்கம் இருக்கிறது. இப்படி செய்யக்கூடிய வழிபாடோடு சில பரிகாரங்களையும் நாம் செய்யும் பொழுது அந்த பரிகாரத்தின் பலனாலும் ஆடிப் பெருக்கு நாளின் பலனாலும் பணம் பெருக ஆரம்பிக்கும். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு மிகுந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பணம் பெருக பரிகாரம்

நாம் ஒவ்வொருவரும் நம்முடைய அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கும் பிற்காலத்தில் நம்முடைய சங்கதி சிறப்பாக வாழ்வதற்கும் பணத்தை சேர்த்து வைக்கும் வழக்கத்தை வைத்திருக்கிறோம். அப்படி பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்றால் அதற்காக கடினமாக நாம் உழைக்க வேண்டும். அப்படி உழைத்தாலும் ஒரு சிலரால் உழைப்பிற்கேற்ற பணத்தை பெற முடியாத சூழ்நிலை இருக்கிறது. அதே போல் வந்த பணத்தை சேமித்து வைக்க முடியாமல் வீண் விரயமாகி கொண்டும் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் ஆடிப்பெருக்கு நாளில் இந்த ஒரு பரிகாரத்தை செய்யும் பொழுது தங்களுடைய வாழ்க்கையில் பணம் பெருகிக்கொண்டே செல்லும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை ஆடிப்பெருக்கு நாளான இன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு குளித்து இருந்தால் மட்டும் போதும். வேறு எந்தவித நிபந்தனையும் கிடையாது. இதற்கு நமக்கு இரண்டு பொருட்கள் முக்கியமாக வேண்டும். அவை இரண்டுமே பணத்தை வசியம் செய்யக்கூடிய பொருட்களாகவும், அதனுடன் எந்த பொருள் இருக்கிறதோ அதை பெருக்கும் சக்தி வாய்ந்த பொருளாகவும் திகழ்கிறது. அந்த பொருட்கள்தான் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய்.

ஜாதிக்காய் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். ஏலக்காய் நம்முடைய வீட்டிலேயே நாம் வைத்திருப்போம். பூச்சி இல்லாத நல்ல ஜாதிக்காயாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். ஏலக்காயும் வாசனை மிகுந்த உடையாத நல்ல ஏலக்காயாக எடுத்துக் கொள்ளுங்கள். இவை இரண்டையும் ஒன்று என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை உங்களுடைய வலது கையில் வைத்து மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து பணம் பெருக வேண்டும் வீண் விரயங்கள் குறைய வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு நீங்கள் வைத்திருக்கும் அரிசி பானைக்குள் வைத்து விட வேண்டும். எந்த அரிசி ஆக இருந்தாலும் பரவாயில்லை பச்சரிசியிலும் வைக்கலாம், சாப்பாட்டு அரிசியிலும் வைக்கலாம், இட்லி அரிசியிலும் வைக்கலாம், ரேஷன் அரிசியில் கூட வைக்கலாம். எத்தனை அரிசி பானைகள் இருக்கிறதோ அத்தனையிலும் வைக்கலாம். அது உங்களுடைய விருப்பம். ஒன்றே ஒன்றை மட்டுமாவது இன்றைய நாளில் நாம் வைப்பதன் மூலம் நம்முடைய உழைப்பிற்கேற்ற பணம் நம்மை வந்து சேரும் நீண்ட நாட்களாக வராமல் தடைப்பட்டிருந்த பணவரவும் தடை இன்றி வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே: ஆடிப்பெருக்கு மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

எளிமையான பரிகாரமாக இருந்தாலும் இது அதிசக்தி வாய்ந்த பரிகாரமாக திகழப்படுகிறது. முழு மனதோடு மகாலட்சுமி தாயாரை நினைத்து இந்த பரிகாரத்தை இன்று இரவுக்குள் செய்பவர்களுக்கு பணவரவு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்