- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபித்ரு தோஷம் நீங்க மஹாளய பட்சத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்

பித்ரு தோஷம் நீங்க மஹாளய பட்சத்தில் செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

முன்னோர்களின் அருளையும் ஆசீர்வாதத்தையும் பெறுவதற்கு உகந்த திதியாக அமாவாசை திதி திகழ்ந்தாலும் ஆவணி மாதம் வரக்கூடிய பௌர்ணமி நாளிலிருந்து அடுத்து வரக்கூடிய அமாவாசை வரை இருக்கக்கூடிய 16 நாட்களும் முன்னோர்களை வழிபாடு செய்வதற்குரிய மகாளய பட்சமாக திகழ்கிறது. இந்த நாட்களில் நம்முடைய முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள் என்றும், இந்த நாட்களில் நாம் செய்யக்கூடிய வழிபாடுகளும், பரிகாரங்களும், தான தர்மங்களும் நம்முடைய முன்னோர்களை மனமகிழ் செய்யும் என்றும் அதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்றும் கூறப்படுகிறது.

மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த 16 நாட்களும் நம்முடைய வீட்டில் பலவிதமான முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த நாட்களில் ஒரே ஒரு நாள் மட்டுமாவது முன்னோர்களை நினைத்து இந்த ஒரு தானத்தை செய்தால் போதும் முன்னோர்களின் தோஷம் முற்றிலும் நீங்கி சுகமான வாழ்க்கையை வாழ முடியும். அந்த தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பித்ரு தோஷம் நீங்க பரிகாரம்

ஒருவருடைய வாழ்க்கையில் எதற்கெடுத்தாலும் தடைகள் வந்து கொண்டே இருக்கிறது என்றால் அவருக்கு குலதெய்வ தோஷமோ, முன்னோர்களின் சாபமோ இருப்பதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. அதனால் தான் எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். குலதெய்வத்தை வழிபாடு செய்வதோடு நம்முடைய முன்னோர்களின் ஆசிர்வாதமும் நமக்கு பரிபூரணமாக கிடைத்தால் தான் நம்மால் எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். அப்படிப்பட்ட முன்னோர்களை வழிபாடு செய்வதற்குரிய 16 நாட்கள் தான் மஹாளய பட்ச காலம். இந்த 16 நாட்கள் நிறைவடைவதற்குள் அதாவது செப்டம்பர் மாதம் 21ஆம் தேதிக்குள் நாம் இந்த ஒரு எளிமையான தானத்தை செய்வதன் மூலம் பித்ரு தோஷம் முற்றிலும் நீங்கும். முன்னோர்கள் மனம் மகிழ்ந்து நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் வழங்குவார்கள்.

என்றைக்கு வேண்டுமானாலும் இந்த தானத்தை நாம் செய்யலாம். பகல் 11:30 மணியிலிருந்து 2 மணிக்குள் இந்த தானத்தை நாம் செய்ய வேண்டும். இந்த தானத்தை நாம் நம் கை பட தான் செய்ய வேண்டும். அதுதான் அன்னதானம். நம்முடைய வீட்டிலேயே பச்சரிசியை பயன்படுத்தி தயிர் சாதம் தயார் செய்ய வேண்டும். இந்த தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள எலுமிச்சம்பழம் ஊறுகாய் வைக்க வேண்டும். மேலும் இந்த தயிர் சாதத்துடன் ஒரே ஒரு பாட்டில் தண்ணீரையும் தானமாக தர வேண்டும்.

- Advertisement -

குறைந்தபட்சம் 4 பேருக்காவது இந்த தயிர் சாதத்தையும் தண்ணீர் பாட்டிலையும் நம் தானமாக தர வேண்டும். வசதி மிக்கவர்களாக இருக்கும் பட்சத்தில் அதிக அளவில் கூட தானத்தை செய்யலாம். நம் கை பட நாமே தயார் செய்த தயிர் சாதத்தை தந்தால்தான் அதிக அளவில் பலன் கிடைக்கும். தங்களால் செய்ய இயலாது என்னும் சூழ்நிலையில் கடையிலிருந்து வாங்கித் தரலாம். முடிந்த அளவிற்கு வீட்டிலேயே தயார் செய்த தயிர் சாதத்தை தானமாக தர வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் நம்முடைய முன்னோர்கள் மனம் மகிழ்வதால் நமக்கு இருக்கக்கூடிய பித்ரு தோஷம் முன்னோர்கள் சாபம் முற்றிலும் நீங்கும். வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: புரட்டாசியில் பணம் தரும் பெருமாள் வழிபாடு

எளிமையாக வீட்டிலேயே தயிர் சாதத்தை தயார் செய்து நம்மால் இயன்ற அளவு பிறருக்கு தானமாக தருவதன் மூலம் முன்னோர்களின் சாபம் முற்றிலும் நீங்கும். மனமகிழ்ச்சியுடன் செய்து முழு பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்