சனிபகவான் பிடியிலிருந்து தப்பிக்க வேண்டும். ஏழரை சனி காலம் வந்தால் கூட , என் வாழ்நாளில் துன்பம் வரக்கூடாது. தாங்க முடியாத துயரங்களோ துன்பங்களோ ஒருபோதும் எனக்கு வாழ்க்கையில் வரவே கூடாது என்று நினைப்பவர்கள், புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.
புரட்டாசி மாதத்திற்கு எதற்காக இவ்வளவு பவர் இருக்கு. புரட்டாசி மாதத்திற்கும் சனி பகவானிற்கும் என்ன சம்பந்தம். புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபாடு செய்ய என்ன காரணம் ஆன்மீகம் சார்ந்த சில தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோமா.
புரட்டாசியில் பெருமாள் வழிபாட்டு செய்ய காரணம்
சூரிய பகவான் ஒரு கிரகத்திலிருந்து இன்னொரு கிரகத்திற்கு மாறும்போது தான், தமிழ் மாதம் பிறக்கும். அதேபோலத்தான் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரும் போது, அதை புரட்டாசி மாதம் என்று சொல்கின்றோம். கன்னி ராசிக்கு அதிபதி புதன் பகவான். புதன் பகவானுக்கு அதி தேவதையாக இருப்பவன் பெருமாள். ஆகவே இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபாடு செய்வது சிறப்பு என்று சொல்கிறது நம்முடைய சாஸ்திரம்.
சனிபகவான், பெருமாளிடம் இருந்து வரத்தை பெற்ற மாதமும் இந்த புரட்டாசி மாதம் தான். புரட்டாசி சனிக்கிழமை தான், சனி பகவான் தனக்கு வேண்டிய வரங்களை எல்லாம் பெருமாளிடம் கேட்டு பெற்றதாக புராணங்கள் சொல்கிறது. எவர் ஒருவர் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமையில் பெருமாளை வழிபாடு செய்கின்றார்களோ, அவர்களை நான் ஒன்னும் செய்ய மாட்டேன் என்று சனிபகவான், பெருமாளுக்கு வாக்கு கொடுத்ததாகவும் நம்முடைய இந்து புராணங்கள் சொல்கிறது. ஆகவே தான் இந்த புரட்டாசி மாதம் வரக்கூடிய சனிக்கிழமையில், பெருமாளுக்கு வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
அதிலும் குறிப்பாக மிளகு போட்ட வெண்பொங்கல் செய்து பெருமாளுக்கு நெய்வேதியும் வைத்து வழிபாட்டை மேற்கொண்டால், உங்களுக்கு சனிபகவானிடம் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதேபோல எள்ளு சேர்த்த புளி சாதம் செய்து பெருமாளுக்கு வைப்பதும் மிகவும் சிறப்பு. கருப்பு எள்ளு, கருப்பு மிளகு இரண்டிலுமே சனிபகவானின் ஆதிக்கம் அதிகம் இருப்பது நாம் எல்லோருக்குமே தெரியும்.
சனிபகவான் பிடியில் இருந்து தப்பிக்க பெருமாள் விளக்கு
சரிங்க இவ்வளவு விஷயம் செய்தாகிவிட்டது. இந்த புரட்டாசி சனிக்கிழமையில் என்ன தீபத்தை ஏற்றி வழிபாடு செய்தால், சனி பகவான் பிடியில் இருந்து ஆயுள் முழுவதும் தப்பித்துக் கொள்ளலாம். மிளகு தீபம் தான். 9 என்ற எண்ணிக்கையில் மிளகு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கரு நீல துணியில் இந்த மிளகை வைத்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும்.
சின்ன மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் இந்த மூட்டையை போட்டு தீபம் ஏற்றி பெருமாள் கோவிலில் வைக்க வேண்டும். பெருமாள் கோவிலுக்கு போய் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்ய உங்களுக்கு சனி பகவானால் எந்த தொந்தரவும் வராது என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
பெருமாள் கோவிலில் இருக்கும் நவகிரக சன்னிதானத்தை சனிக்கிழமை வழிபாடு செய்வதும் சிறப்பு. சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு போறீங்க. அந்த கோவிலில் நவரக கிரக சன்னிதானம் இருக்கிறது என்றால் அந்த நவகிரக சன்னிதானத்தை ஒன்பது முறை வலம் வருவது சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: சுக்கிர வார பிரதோஷம் நந்தி தேவர் பரிகாரம்
புரட்டாசி மாதத்தைப் பற்றி முழுவதாக நாம் தெரிந்து கொள்ளவில்லை என்றாலும் சரி, புரட்டாசி மாதத்திற்கு உண்டான சிறப்பு இவ்வளவுதான். இதை செய்தாலே போதும் உங்கள் வாழ்வில் வரும் துன்பத்திலிருந்து பெருமாள் உங்களை காப்பாற்றி விடுவார் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.