நாளை 23-9-2025 செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து, நவராத்திரி நாளில் மூன்றாம் பிறை வரவிருக்கிறது. செவ்வாய்க்கிழமை, துர்க்கை அம்மன், நவராத்திரி, ஈசனுக்கே சொந்தமான மூன்றாம் பிறை, இத்தனை சக்திகள் ஒன்று சேரக்கூடிய இந்த அபரிவிதமான நாளில், நாம் செய்யக்கூடிய வழிபாடும் வேண்டுதலும் நமக்கு உடனடியாக நல்லதொரு பலனை கொண்டு வந்து சேர்க்கும்.
உங்களுடைய வாழ்நாள் துன்பங்கள் தீர, கடன் சுமை குறைய, செல்வ வளம் பெறுக, நாளைய தினம் என்ன வழிபாடு செய்வது. ஆன்மீகம் சார்ந்த சில தகவல் இந்த பதிவில் உங்களுக்காக. சிவன் கோவிலில் இருக்கும் துர்க்கையை நாளைய தினம் வழிபாடு செய்வது அதி சிறப்பு.
சிவன் கோவிலில் இருக்கும் துர்க்கையை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் வழிபாடு செய்தீர்கள் என்றால், கோடான கோடி பிரச்சனைகளிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். கோடான கோடி நன்மைகளும் உங்களை தேடி வரும் உங்களுக்கு தெரிந்த படி, இந்த துர்க்கை அம்மன் வழிபாட்டை செய்யலாம். அப்படி உங்களுக்கு எதுவும் தெரியாது என்றால், பின் சொல்ல கூடிய வழிபாட்டு முறைகளை பின்பற்றி துர்க்கையை வழிபடும்போது அபரிவிதமான பலன் கிடைக்கும்.
துர்க்கை வழிபாடு
நாளைய தினம் செவ்வாய்க்கிழமை ராகு கால நேரம் மதியம் 3:00 மணியிலிருந்து 4:30 இந்த இடைப்பட்ட காலத்தில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு செல்லுங்கள். சிவன் கோவில் துர்க்கை இல்லை என்றால் கூட பரவாயில்லை. உங்கள் வீட்டின் அருகில் எந்த துர்க்கை இருக்காங்களோ, அந்த கோவிலுக்கு போகலாம். தவறு கிடையாது.
ராகு கால நேரத்தில் துர்க்கைக்கு எலுமிச்சம் பழம் விளக்கு போடுவது சிறப்பு என்று அந்த காலத்தில் இருந்தே முன்னோர்கள் சொல்லியுள்ள ஒரு சாஸ்திரம். உங்கள் வீட்டில் இந்த பழக்கம் இருந்தால், எலுமிச்சம் பழம் தீபம் போடுங்கள்.
வழக்கம் இல்லை என்றால் சாதாரண மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் போட்டுவிட்டு துர்க்கைக்கு உங்கள் கையால் தாழம்பூ குங்குமத்தை வாங்கி கொடுத்து குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை வீட்டிற்கு வாங்கி வந்து, பெண்கள் வேண்டுதலை தினம் தோறும் துர்க்கை அம்மனிடம் சொல்லி, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உங்கள் கோரிக்கையானது கூடிய விரைவில் நிறைவேறும் என்பதை நம்பிக்கை. இதே வழிபாட்டை ஆண்களும் செய்யலாம் தவறு கிடையாது.
இதுபோக குழந்தை பாக்கியம் இல்லை திருமண தடை இருக்கிறது. வியாபாரத்தில் தொடர் நஷ்டம் உள்ளவர்கள் எல்லாம் நாளைய தினம் துர்க்கை அம்மனுக்கு செவ்வரளி பூக்களை வாங்கிக் கொடுத்து, விளக்கு போட்டு வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்களுடைய கஷ்டங்களுக்கு கூடிய விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும்.
நாளை செவ்வாய்க்கிழமை. ராகுகால நேரத்தில் துர்க்கை அம்மனை வழிபாடு செய்துவிட்டு மாலை 6:30 மணிக்கு மேல் உதயமாக இருக்கும் பிறை நிலவைப் பார்த்து ஈசனை நினைத்து உங்களுடைய கோரிக்கையை வையுங்கள். நிச்சயமா எழுதி வச்சுக்கோங்க. இந்த நாள் வழிபாடும் இந்த நாள் பிரார்த்தனையும் ஒருபோதும் உங்களை கைவிடாது. அதுவும் நவராத்திரியின் அதிசக்தி வாய்ந்த இரண்டாவது நாள். துர்கா தேவிக்கு உரியது.
இதையும் படிக்கலாமே: நவராத்திரி தியான வழிபாடு
அதற்காகத்தான் இந்த வழிபாட்டை யாரும் தவற விடாதிங்கன்னு சொல்றாங்க. இந்த நாளுக்கு பவர் ரொம்ப ரொம்ப அதிகம்ங்க. வாய்ப்பு இருந்தால் நீங்களும் வழிபாட்டு முறைகளை பின்பற்றி வேண்டுதலை வைக்கலாம். வேலை பளு, கோவிலுக்கு செல்ல நேரமில்லை என்றாலும் ராகுகால நேரத்தில் அந்த துர்க்கை அம்மனை மனதிற்குள் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம் நல்ல பலனை பெறலாம் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.