மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. அவசர அவசரமாக எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. புது முயற்சிகளை மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தையில் நிதானம் தேவை. முன்கோபம் வேண்டாம். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். இறைவழிபாடு செய்வது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். நிறைய நல்ல விஷயங்களை உங்கள் கையாலேயே செய்வதற்கு நிறைய நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். பகை விலகும். புது உறவுகள் உங்களோடு கைகோர்க்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நிம்மதி இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய ஆசைகள் எல்லாம் நிறைவேறும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். கடன் சுமை குறையும். தேவையில்லாத பகை விலகும். சொத்து பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். நீண்ட தூர பயணங்களால் நல்லது நடக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்படக்கூடாது, முன் கோபடக்கூடாது. நேரத்தை வீணடிக்க கூடாது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் கூடாது. அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்களுடைய தேவையில்லாத வேலைகளை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். வியாபாரத்தை நிதானத்தோடு வழி நடத்த வேண்டும். வாடிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளக் கூடாது. மாணவர்கள் தேவையில்லாத நண்பர்களோடு சேர்ந்து நேரத்தை வீணடிக்க கூடாது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று ஆர்வத்தோடு இருப்பீர்கள். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்கள் இளைஞர்களுக்கு இன்று புது வாய்ப்புகள் தேடி வரும். விவசாயம், தொழில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு பிரச்சனைகள் சரியாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாள் வராத கடன் வசூல் ஆகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். தங்க நகைகள் வாங்க கூடிய யோகம் இருக்கு. குடும்பத்தோடு சேர்ந்து கோவிலுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். மன அமைதி கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வேகத்தை விட விவேகம் தான் அதிகமாக இருக்கும். திறமைசாலிகளாக செயல்படுவீர்கள். பல பேரால் செய்ய முடியாத காரியத்தை சுலபமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வருவதற்கும், எதிர்பாராத நல்ல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புகள் உள்ளது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். அன்பு பாசம் காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். பிரிந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். எதிரிகள் தொல்லை சரியாகும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். சொத்து வாங்க கூடிய யோகமும் கைக்கூடி வரும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துடன் செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வாழ்க்கை துணைக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இன்று.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று துணிச்சல் வெளிப்படும். மனதில் தேக்கி வைத்திருந்த விஷயங்களை எல்லாம் வெளியில் போட்டு உடைப்பீர்கள். உறவுகளுக்குள் சின்ன சின்ன வாக்குவாதம் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதை, மாணவர்கள் இளைஞர்கள் இன்று நிறைய விஷயங்களை சாதிப்பீர்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். தேவையான அளவு ஓய்வு இருக்கும். உங்களுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்து கொள்வீர்கள். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். இறை வழிபாடு செய்யுங்கள் மனதிற்கு அமைதி கிடைக்கும்.