- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 08 அக்டோபர் 2026

இன்றைய ராசிபலன் – 08 அக்டோபர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். பல நாள் கவலைகள் துன்பங்கள் உங்களை விட்டு பிரிந்து போகும். விநாயகர் வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். நீண்ட தூர பயணங்களால் மன நிம்மதி கிடைக்கும். உறவுகளுடன் இருந்து வந்த மனகசப்பு நீங்கும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையுடன் நடந்து கொள்வீர்கள். எதிரிகளை மன்னித்து விடுவீர்கள். மனதில் வைத்திருந்த கோபத்தை எல்லாம் விட்டு விடுவீர்கள். உறவுகளுக்கு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்து டென்ஷன் குறையும். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சில பேருக்கு இடம் மாற்றத்தோடு முன்னேற்றம் வரும். கடன் சுமை குறையும். நிதிநிலைமை சீராக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு நட்பு ரீதியாக இன்று நல்லது நடக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப பகை விலகும். நிதி நிலைமை சீராக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை பளு குறையும். வண்டி வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். அலைச்சலால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கிய பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். நல்லது நடக்கும். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சிக்கல்கள் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். எடுத்த உடனே எல்லா வேலையிலும் வெற்றி கிடைக்காது. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் முயற்சி தேவை. இளைஞர்கள், இன்று பெரியவர்கள் சொல் பேச்சு கேட்டு நடப்பது நல்லது. அடம்பிடித்து எந்த ஒரு வேலையையும் இன்று செய்யாதீர்கள், வேலையிலும் வியாபாரத்திலும் நிதானம் இருக்கட்டும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியாக இருக்க கூடிய நாள். மனதில் இருக்கும் கசப்பான கஷ்டங்கள் மறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் இன்று துணிந்து ஒரு வேலையை செய்வீர்கள். மனதில் பட்ட விஷயத்தை வெளிப்படையாக பேசுவீர்கள். தைரியமாக செயல்படுவீர்கள். நிறைய பிரச்சனைகளை உங்களுடைய பேச்சு வார்த்தையாலேயே சரி செய்வீர்கள். ஒரு தலைவராக பொறுப்பேற்கும் அளவுக்கு உங்களுக்கு திறமை இன்று வெளிப்படும். இதுநாள் வரை இல்லாத ஒரு நல்ல அனுபவம் இன்று கிடைக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. நீண்ட நாள் எதிர்பார்த்த நல்ல விஷயம் இன்று நடக்கும். நீண்ட தூர பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தரும். சுப செலவுகள் ஏற்படும். தேவையில்லாத நண்பர்கள் தானாக உங்களை விட்டு விலகி விடுவார்கள். நீங்கள் வேண்டாம் என்று நினைத்த விஷயங்கள் எல்லாம் இன்று உங்களை விட்டு விலகிவிடும். அது மனதிற்கு நிம்மதியை தரும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுக போக வாழ்க்கை தான். செல்லும் இடமெல்லாம் சீரும் சிறப்பும் செழிப்பும் நிறைந்து இருக்கும். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்து இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த நஷ்டங்கள் சரியாகும். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்பாக சிந்தித்து செயல்படுவீர்கள். திறமை வெளிப்படும். புது விஷயங்களை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். வேலையில் நல்ல பெயர் வாங்குவீர்கள். பல பேருக்கு இன்று நீங்கள் உதவியாக நிற்பீர்கள். பலபேருடைய மனமார்ந்த ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ப்ரமோஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரிகள், வியாபாரத்தில் கவனத்தோடு செயல்பட வேண்டும். கடனுக்கு வியாபாரம் செய்யக்கூடாது. புது மனிதர்களை முழுசாக நம்ப கூடாது.

சற்று முன்