- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 09 அக்டோபர் 2026

இன்றைய ராசிபலன் – 09 அக்டோபர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கும். நல்ல நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வாய்ப்புகளை கை நழுவ விடாதீர்கள். என்னால் முடியாது, எனக்கு இது வேண்டாம், என்ற வார்த்தைகளை இன்று பயன்படுத்த வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம் வந்து சேரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்கோபம் அதிகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கோபத்தால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். உறவுகளை இழக்க கூடிய வாய்ப்புகள் வரலாம். வேலையிலும் வியாபாரத்திலும் பிரச்சினைகள் வரலாம். ஆக, கோபத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். இன்று கட்டாயம் நிதானம் தேவை.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமையான நாளாக இருக்கும். வேலை உண்டு, நீங்கள் உண்டு என்று இருப்பீர்கள். தேவையில்லாத பிரச்சினைகள் தலையிட மாட்டீர்கள். எதிரிகளை மன்னித்து விடுவீர்கள். குடும்ப உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து தடை விலகும். நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்னதாக ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்ப்பு அதிகம் வேண்டாம். உங்களுடைய கடமைகளை மட்டும் செய்யுங்கள். நேரத்தை வீணடிக்காதீர்கள். நிச்சயம் நல்லது நடக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. பயணங்களின் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆதரவாக இன்று நிறைய நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். புது ஒப்பந்தங்கள் வியாபாரத்தில் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளது. தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். காரிய தடை விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்து போகும். எதிரி தொல்லை இருக்கும். வீட்டில் குடும்ப உறவுகளோடு சண்டைகள் வர வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். புதுசாக எந்த ஒரு பொருளையும் இன்று வாங்காதீங்க. நகை அடமானம் வைக்காதீங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு உண்டான வழி பிறக்கும். தேவையில்லாத சங்கடங்கள் நீங்கும் நாள். இறைவனுக்கு நன்றி செல்லுங்கள். மகாலட்சுமி வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது. காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுப காரிய தடை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். மாணவர்கள் இளைஞர்கள் சாதனை படைக்கும் அளவுக்கு நல்லது நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நிறைய முன்னேற்றங்கள் வரும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வீட்டில் இருந்த பண பிரச்சனை சரியாகும். நீண்ட தூர பயணங்கள் மனதிற்கு அமைதியை தரும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாத சிந்தனை வேண்டாம். எந்த விஷயத்திலும் சந்தேகம் வரக்கூடாது. நம்பிக்கை இருந்தால் மட்டும் தான், இந்த நாள் இனிய நாளாக அமையும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். எந்த ஒரு பஞ்சாயத்தையும் இன்னைக்கு வச்சுக்காதீங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் ரீதியாக நிறைய நல்லது நடக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். குலதெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை தரும். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சுமுகமாக செல்லும். நிதிநிலைமை சீராகும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கவனமாக சிந்தித்து செயல்படுவீர்கள். நல்ல பெயர் கிடைக்கும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். நல்லது நடக்கும்.

சற்று முன்