மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். உடல் சோர்வு இருக்கும். வேலையில் பின்னடைவு வரலாம். நேரத்தை வீணடிக்காதீர்கள். அனாவசியமாக கைபேசி பார்க்காதீர்கள். யாரிடமும் வம்பு வழக்கு வைத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பயம் பதட்டம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் பின் தங்கிய சூழ்நிலை உண்டாகும். வீண் விரைய செலவுகள் ஏற்படும். உடல் அசதி இருக்கும். இன்று பொய் சொல்ல வேண்டாம். உண்மையை மறைத்து, வரக்கூடிய சந்தோஷம் நிரந்தரம் இல்லை. கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நாள் இன்று.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். சின்ன சின்ன ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். உறவுகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். இளைஞர்கள் மாணவர்கள் நிதானத்தோடு இருக்க வேண்டும். புதிய முதலீட்டின் போது கூடுதல் கவனம் தேவை.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி உண்டு. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை வெளிப்படும். கடன் சுமை குறையும். தேவைக்கேற்ப பணம் கையில் இருக்கும். உங்களுடைய வெளி தோற்றம் அழகு பெறும். வசீகரத் தோற்றத்தால் நிறைய நல்ல விஷயங்களை சாதிப்பீர்கள். பிரிந்த கணவன் மனைவி உறவு பலப்படும். நல்லது நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்ற நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை உண்டு. ப்ரோமோஷன்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சில பேருக்கு இடம் மாற்றும் வரலாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். வீண் விரயச் செலவுகள் குறையும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பயம் பதட்டம் இருக்கும். மனதில் பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேச மாட்டீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்காது. சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். இன்று கொஞ்சம் நிதானமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். நண்பர்களே எதிரிகளாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. உடன் வேலை செய்பவர்களோடு எந்த வாக்குவாதமும் வேண்டாம். விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளுங்கள். யாரிடமும் சண்டைக்கு நிற்க வேண்டாம். மனதை அலைபாய விட வேண்டாம். இறைவழிபாடு செய்வது நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். புது ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத நண்பர்களிடம் இருந்து விலகியே இருங்கள். எதிரிகளிடம் போட்டி போட வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக ரீதியாக நிறைய நல்லது நடக்கும். மனதிற்கு பிடித்த கோவிலுக்கு செல்லக்கூடிய பாக்கியம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். மனக்குழப்பம் தீரும். புதிய முதலீட்டில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும் கடன் சுமை குறையும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பமான நாளாக இருக்கும். மனதில் சந்தேகங்கள் எழும். நிம்மதியற்ற சூழ்நிலையால் வேலையிலும் வியாபாரத்திலும் பின்னடைவு வரலாம். கவனமாக சிந்தித்து செயல்படுங்கள். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். பண பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எந்த ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பும் இன்று ஒன்றுக்கு பலமுறை சிந்திக்கவும். அவசரம் வேண்டாம். முன் கோபம் வேண்டாம். இறை நம்பிக்கையோடு இருங்கள். மனதை ஒருநிலைப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். சுறுசுறுப்பு வெளிப்படும். நிதி நிலைமை சீராக இருக்கும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் வரும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.