- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2026

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த பகை விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும். வேலையிலும் வியாபாரத்திலும் சுமூகமான போக்கு நிலவும். விடுமுறை நாள் என்பதால் இன்று தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். சொந்த ஊர் திரும்பியவர்கள் மன திருப்தியோடு உறவுகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். வீட்டு வேலைகளையும் சரியாக செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன பின்னடைவு வர வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் அளவுக்கு தேவையான அளவு ஓய்வு எடுக்கவும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியைத் தரும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். நல்லதே நடக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். உடல் சோர்வு இருக்கும். பயணங்களால் ஏற்பட்ட உடல் சோர்வு நீங்க கொஞ்சம் நேரம் எடுக்கும். தேவைக்கு ஏற்ப ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். வேலையிலும் வியாபாரத்தையும் சின்ன பின்னடைவு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. விடுமுறை நாளாகவே இருந்தாலும் பொறுப்புகளை தட்டி கழிக்காதீர்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எவ்வளவு வேலை பளு இருந்தாலும் நேரத்திற்கு ஆரோக்கியமான உணவு சாப்பிடுங்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும், நேரத்தை வீணடிக்காமல் கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் செய்யும் முதலீடு நல்ல லாபத்தை கொடுக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். அன்பு பாசம் காதல் வெளிப்படும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியை நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும் நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தெளிவாக சிந்திப்பீர்கள். குழப்பத்திலிருந்து விடுபட்டு தெளிவான முடிவை எடுப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. பண்டிகை நாட்கள் முடிந்தவுடன் உங்களுடைய பண பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். சொந்த ஊர் திரும்பி, சொந்த பந்தங்களோடு சேர்ந்து நேரத்தை செலவு செய்வீர்கள். பண்டிகையை கொண்டாட குடும்பத்தோடு தயாராவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிமையான நாளாக இருக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று ஓய்வு எடுத்துக் கொள்வீர்கள். மன அமைதியோடு இருப்பீர்கள். தேவையில்லாத டென்ஷனை மண்டைக்குள் எடுத்துச் செல்ல மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்தையும் தேவையான அளவு ஈடுபாடு காட்டுவீர்கள். கொஞ்சம் சுப செலவுகள் ஏற்படும். செலவுகளை சமாளிக்கும் தென்பு உங்களிடம் இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்களுடைய கடமைகளை சரியாக செய்வீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். வீண் விரைய செலவுகள் குறையும். பண்டிகையை கொண்டாட குடும்பத்தோடு சேர்ந்து தயாராவீங்க.

சற்று முன்