- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 22 நவம்பர் 2026

இன்றைய ராசிபலன் – 22 நவம்பர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். மனநிறைவோடு உங்களுடைய கடமைகளை செய்து முடிப்பீர்கள். உறவுகளுக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாம் சமூகமாக செல்லும். இந்த விடுமுறை நாள், குடும்ப சந்தோஷத்தோடு நிறைவடையும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மனம் அமைதியாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். வியாபாரத்திலும் வேலையிலும் பெருசாக டென்ஷன் இருக்காது. இந்த விடுமுறை நாள் சந்தோஷமாக நகர்ந்து செல்லும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்ப உறவினர்களோடு சேர்ந்து இருந்து உற்சாகத்தோடு இந்த நாளை கடந்து செல்வீர்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கம் நிறைந்த நாளாக இருக்கும். காலை நேரமெல்லாம் கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு இருந்தாலும், மாலை நேரத்தில் உற்சாகமாக குடும்பத்துடன் வெளியில் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மன நிம்மதி இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கடன் சுமை குறையும். எதிரி தொல்லையிலிருந்து விடுபட்டு நிம்மதி அடைவீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வீட்டு வேலைகளை, கடமை உணர்ச்சியோடு செய்து முடிப்பீர்கள். வீட்டை சுத்தம் செய்வது, பழுது போன பொருட்களை சரி செய்வது, இது போன்ற வேலைகள் இன்று நடந்து முடியும். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கும். உயர் அதிகாரிகளுடைய ஆதரவை பெறுவீர்கள். வேலையில் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உணவு பழக்க வழக்கத்தில் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை‌. கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக் கவலை இருக்கும். உடல் சோர்வு இருக்கும். இந்த நாள் முழுவதும் ஏதோ ஒன்றை இழந்தது போலவே சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். நடந்ததை நினைத்து வருத்தப்பட்டு இன்றைய நாள் சந்தோஷத்தை இழக்க வேண்டாம். இதுவும் கடந்து போகும் என்று இறைவன் மீது பாரத்தை போட்டு உங்கள் வேலையை துவங்குங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்லது நடக்கும். நீங்கள் ஒரு முடிவை எடுத்தால் அதற்கு சுற்றி இருப்பவர்கள் நல்ல ஆதரவு தெரிவிப்பார்கள். பஞ்சாயத்துகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். சொத்து பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். குடும்ப உறவுகளோடு இருந்து வந்த பகை விலகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். மனதில் தேக்கி வைத்திருந்த ஆசை காதல் இவைகளை வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த நீண்ட நாள் பகை விலகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவிக்குள் ஒற்றுமை வரவும் வாய்ப்புகள் உள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. யாரையும் பகைத்துக் கொள்ளக்கூடாது. குறிப்பாக இளைஞர்கள் மாணவர்கள் இன்று அமைதியாக இருப்பது எதிர்காலத்திற்கு நல்லது. கோர்ட் கேஸ் என்று அரசுக்கு புறமான காரியங்களை செய்து எதிலும் சிக்காதீர்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல பெயர் கிடைக்கும். நல்ல நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. டென்ஷன் குறையும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமை பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்து கொள்ளுங்கள். அடுத்தவர்கள் பிரச்சனையில் அனாவசியமாக தலையிட வேண்டாம். பெற்றவர்களோடு வாக்குவாதம் செய்யக்கூடாது. உடன் பிறந்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். நேரத்திற்கு நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிமையாக செல்லும். மாலை நேரத்தில் குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்வீர்கள். நண்பர்கள் உற்றார் உறவினர்களோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். சுப காரிய நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். நல்லது நடக்கும்.

சற்று முன்