நாளை தை பூசம் – நீங்கள் இவற்றை செய்தால் பெறும் பலன்கள் அதிகம்

thaipusam-murugan
- Advertisement -

மார்கழி மாதம் என்பது குளிர் மற்றும் இருள் நீண்ட நேரம் நீடிக்கின்ற ஒரு மாதமாகும். தனுசு ராசியில் பிறக்கின்ற மார்கழி மாதத்திலிருந்து சூரியன் மகரம் ராசியில் பிரவேசிக்கும் மாதம் தான் தை மாதம் ஆகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப பல நன்மைகள் நம்மை தேடி வரும் ஒரு மாதமாக தை மாதம் இருக்கிறது. இந்த தை மாதத்தில் வருகிற ஒரு அற்புதமான தினம் தான் “தை பூசம் தினம்”. இந்த தை பூசம் தினத்தின் சிறப்புக்கள் மற்றும் பலன்கள் பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

Lord Murugan

சூரியன் தட்சிணாயனம் எனப்படும் தனது தென் திசை நோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு, உத்தராயணம் எனப்படும் வடக்கு திசையை நோக்கி தனது பயணத்தை தொடங்கும் மாதமே “தை” மாதம் ஆகும். தை மாதம் தீமைகள் ஒளிந்து நன்மைகள் பிறக்கின்றன ஒரு மாதமாக கருதப்படுகிறது. ஆன்மீக சிறப்புக்கள் பல நிறைந்த இம்மாதத்தில் வருகிற ஒரு நன்னாள் தான் தை பூசம் தினம். இந்த தை பூசம் தினத்தில் கீழ்கண்டவற்றை நாம் கடைபிடிப்பதால் இறைவனின் நல்லருளை பெற முடியும்.

- Advertisement -

தை பூசம் தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்ததும், சிவபெருமானை மனதில் நினைத்தவாறு நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு, ருத்ராட்சம் அணிந்து, தேவாரம், திருவாசகம் போன்றவற்றை படித்து சிவபெருமானை வழிபடுவது சாலச் சிறந்ததாகும். தை பூசம் தினம் முருகப்பெருமானின் முக்கிய வழிபட்டு தினமாக இருக்கிறது. இத்தினத்தில் முருகனை வழிபட விரும்புபவர்கள் காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உட்கொள்ளாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். அல்லது பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். முருகனுக்கு பால் குடம் எடுத்தல், காவடி சுமந்து செல்லுதல், அழகு குத்தி கொள்ளுதல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்த விரும்புபவர்கள் செலுத்தலாம். பின்பு மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

Sivanmalai Murugan

தை மாதத்தில் பூசம் நட்சத்திரத்தில் வருகின்ற இந்த தினம் ஒரு சிறப்பான தினமாகும். 27 நட்சத்திரங்களில் பூசம் நட்சத்திரத்தின் அதி தேவதையாக நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் இருக்கிறார். தந்தை ஆகிய சிவபெருமானுக்கு அவரின் மகன் முருகன் பிரணவ மந்திர பொருளை உபதேசித்து சிவகுருநாதன் என்கிற பெயரை பெற்று குரு ஸ்தானம் பெற்றார். எனவே இந்த தினத்தில் முருகப்பெருமானை வணங்குபவர்களுக்கு முருகன் மற்றும் குரு பகவானின் அருள் கிடைத்து நீங்கள் தொட்டே காரியங்கள் அனைத்து பொன்னாகும் அற்புதம் ஏற்படும். நீங்கள் திருமண சம்பந்த பேச்சு, புதிய தொழில் வியாபார ஒப்பந்தங்கள் போன்றவற்றை இந்த தை பூச நன்னாளில் சிவபெருமான், முருகனை வணங்கி தொடங்கினால் அவை நிச்சயமான வெற்றி பெற்று உங்களுக்கு பல நன்மைகளை தரும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
அப்பலயகுண்ட பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thaipusam in Tamil. It is also called as Thai poosam valipadu in Tamil or Thai poosam viratham in Tamil or Thaipusam thirunal in Tamil or Thai poosam sirappu in Tamil.

- Advertisement -