2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் தடை செய்யப்பட இருக்கும் பாகிஸ்தான் அணி. துபாயில் அடுத்தவாரம் கூடுகிறது அவசர ஆலோசனை கூட்டம் – டேவ் ரிச்சர்ட்ஸன்

Dave
- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.

worldcup

அதன்காரணமாக இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக போட்டிகளில் ஆடக்கூடாது. மேலும், இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளை தவிர்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி குறித்து ஐ.சி.சி. தலைவரான டேவ் ரிச்சர்ட்ஸன் ஒரு முக்கியதகவலை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

அதில் ரிச்சர்ட்ஸன் கூறியதாவது : பாகிஸ்தான் இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தியதை ஐ.சி.சி பார்த்து வருகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை இந்திய ரசிகர்கள் விரும்பவில்லை. மேலும், நிலையின் தீவிரம் குறித்து அடுத்த வாரம் துபாயில் ஐ.சி.சி மற்றும் பி.சி.சி.ஐ ஆகிய நிர்வாகங்களுக்கு இடையே அவசர சந்திப்பினை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளோம்.

Pakistan

இந்த சந்திப்பு முடிந்ததும், போட்டிகள் நடைபெறுமா? அல்லது இந்த உலகக்கோப்பை தொடரிலிருந்தே பாகிஸ்தானை தடை செய்து வெளியேற்றலாமா ? பயங்கரவாத செயலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் நாட்டிற்கு ஒருபோதும் கிரிக்கெட் கமிட்டி முன் நிற்க்காது என்பது குறித்து அறிவிப்போம் என்று டேவ் ரிச்சர்ட்ஸன் தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உடன் கிரிக்கெட்டா ? வேற எதுவுமே வேணாம். சொன்னா கேளுங்க – கங்குலி காட்டம்

- Advertisement -