இன்று பிரதோஷம் – நீங்கள் இதை செய்தால் மிகுந்த பலன் உண்டு

pradhosham
- Advertisement -

மனித வாழ்வின் பிறப்பு இறப்பு சுழர்ச்சியை பார்த்த ஞானிகள் நாம் அனைவரும் இன்னும் எத்தனை எத்தனை கோடி பிறவிகள் எடுக்க வேண்டுமோ? என ஞான கேள்வியை எழுப்புகின்றனர். இந்த பிறப்பு இறப்பு சுழர்ச்சியை அறுக்கவல்ல ஒரு இறைவன் சிவ பெருமான் ஆவார். அவரை வழிபடுவதற்குரிய ஒரு சிறப்பான நாளாக பிரதோஷம் தினம் வருகிறது. அதில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

nandi

பங்குனி மாதம் ஆன்மீக சிறப்புக்கள் மிகுந்த ஒரு மாதமாகும். இந்த மாதத்தில் வரும் அனைத்து திதி தினங்களும் இறை வழிபாடு, பூஜைகள், உற்சவங்கள் செய்வதற்கு ஏற்றதாக இருப்பதால் பல கோயில்களில் விழாக்களும், வைபவங்களும் இந்த மாதம் முழுவதும் நடைபெறும். அப்படியான பங்குனி மாதத்தில் வரும் தேய்பிறை பிரதோஷம் சிறப்பான ஒரு தினமாகும். அதிலும் பங்குனி வளர்பிறை பிரதோஷம் சிவபெருமான் மற்றும் செவ்வாய் பகவானுக்குரிய செவ்வாய்கிழமையில் வருவது சிறப்பானதாகும்.

- Advertisement -

இந்த பங்குனி தேய்பிறை பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையான மாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரத்தில் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சோமாசூக்த பிரதிட்சணம் வந்து வணங்க வேண்டும். பிறகு நந்தி தேவர் மற்றும் சிவப்பெருமானின் அபிஷேகத்திற்கு பால், பன்னீர், தேன், தயிர் போன்ற அபிஷேக பொருட்களை தானம் தந்து, பிரதோஷ வேளை பூஜையின் நந்தி தேவர் மற்றும் சிவபெருமான், பி-பார்வதி தேவியை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் செவ்வாய் பகவானுக்கு செவ்வரளி பூக்கள் சாற்றி, பீட்ரூட் சாதம் நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும்.

Sivan temple

வழிபாடு முடிந்ததும் உங்கள் சக்திக்கு ஏற்ற அளவில் பக்தர்களுக்கு பீட்ரூட் சாதம், கேசரி போன்றவற்றை அன்னதானம் வழங்கலாம். இம்முறையில் இன்றைய பங்குனி தேய்பிறை பிரதோஷத்தில் சிவபெருமானை வணங்குவதால் உங்களுக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் தோஷ பாதிப்புகள் நீங்கி நன்மைகள் உண்டாகும். நேரடி, மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் நீங்கும். உடலில் ஏற்பட்டிருக்கும் நோய்கள் நீங்கி உடல் பலம் கிட்டும். மனோதைரியம் உண்டாகும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
திருப்பதியில் இங்கு சென்றால் அதிர்ஷ்டம் ஏற்படும்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Panguni theipirai pradosham in Tamil. It is also called as Panguni masam in Tamil or Panguni pradosham in Tamil or Pradosham pooja in Tamil or Panguni matha pradhoshangal in Tamil.

- Advertisement -