உங்கள் வீட்டுத் தோட்டத்தில் கட்டெரும்பு பிரச்சினை அதிகமாக உள்ளதா? சமையலறையில், மசாலா டப்பாவில் இருக்கும் இந்த இரண்டு பொருட்கள் போதுமே கட்டெரும்பு காணாமல் போக.

ant
- Advertisement -

நம்முடைய வீட்டில், தொட்டியில் செடி வைத்திருந்தாலும் சரி, அல்லது வீட்டின் வெளி பக்கத்திலோ பின்பக்கத்தில் சிறியதாக தோட்டம் அமைத்து இருந்தாலும் சரி, அதில் கட்டாயம் எறும்பு பிரச்சனைகள் இருக்கும். கருப்பு நிற சிறிய எறும்பாக இருந்தாலும் சரி, கட்டெரும்பாக இருந்தாலும் சரி, சிவப்பு எறும்பாக இருந்தாலும் சரி, எறும்புகள் ஒருமுறை வந்தால் சீக்கிரமாக மண்ணிலிருந்து போகாது. மண்ணில் இருக்கும் ஈரப்பதத்தில், திரும்பத்திரும்ப எறும்புகள் வந்துகொண்டுதான் இருக்கும். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தர என்ன செய்ய வேண்டும்?

red ant

எறும்புகளை நிரந்தரமாக வராமல் தடுப்பதற்கு, நம்முடைய வீட்டு மசாலா டப்பாவில் இருக்கும் இந்த இரண்டு பொருட்கள் மட்டுமே போதும். இந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலம், எந்த ஒரு பக்க விளைவுகளும் செடிகளுக்கு ஏற்படாமல் இருக்கும். எறும்பு மருந்து போடுவதால் செடிகளுக்கும் பாதிப்பு. நமக்கும் பாதிப்பு. சரி, அது என்னென்ன பொருள் என்பதையும் பார்த்து விடலாமா? மஞ்சள் பொடி, பட்டை பொடி. சமையலுக்கு பயன்படுத்தும் சாதாரண மஞ்சள் தூள் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பிரியாணிக்கு தாளிக்க பயன்படுத்தும் பட்டை, அதையும் தூள் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மஞ்சள் தூள் 50 கிராம் எடுத்துக்கொண்டால், பட்டை தூள் 50 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு பொடியையும் நன்றாக கலந்து, தொட்டிகளில் செடிகளை வைத்திருந்தால், உங்கள் கைகளாலேயே இந்த பொடியை எடுத்து, செடியை சுற்றி இருக்கும் மண்ணில் தூவிவிட்டு கொள்ளலாம்.  4 டேபிள்ஸ்பூன் அளவு உள்ள இந்த பொடியை தாராளமாக மண்ணில் தூவி விடலாம். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இந்த பொடியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

pattai

தொட்டிகளில் மட்டுமல்ல, உங்கள் வீட்டு தோட்டங்களில் பெரிய பெரிய மரங்களில் கூட, மழைக்காலங்களில் கட்டெறும்பின் பிரச்சனை அதிகமாக இருக்கும். அந்த எறும்பு மரத்திலிருந்து வீட்டிற்குள்ளும் வர ஆரம்பித்து தொல்லை கொடுக்கும். இது அல்லாமல் சிறிய சிறிய பூச்சிகள் வண்டுகள் அதிகமாக வர ஆரம்பிக்கும். அந்த சமயத்தில் பெரிய பெரிய மரங்களை சுற்றி கூட இந்த பொடியை கொஞ்சம் அதிகமாக தூவி விட்டீர்கள் என்றால் எறும்புகளின் தொல்லை கட்டுப்பட ஆரம்பிக்கும்.

- Advertisement -

அதாவது, இந்த பொடியின் வாசம் அந்தச் செடிகளை சுற்றி இருக்கும் வரை எறும்பு வரவே வராது. செடிகளின் இலைகளை எல்லாம், எறும்புகள் அறிக்கத் தொடங்கினால்,  ஒரு லிட்டர் அளவு தண்ணீரை எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் அளவு பட்டை தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இலைகளின் மீதும் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம்.

Turmeric

இலைகளை எறும்புகள் பூச்சிகள் அரிக்காமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டைத்தூள் கடைகளில் விற்கும். அப்படி உங்களுக்கு பட்டைத்தூள் கிடைக்கவில்லை என்றால், பட்டைகளை சிறு சிறு துண்டுகளாக உடைத்து மிக்ஸியில் போட்டு நைசாக பொடி செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டில் இருக்கும், ஒரு செடிகளுக்கும் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க! நல்ல ரிசல்ட் கிடைச்சா எல்லா செடிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளாம். நம்ம வீட்டுச் செடி நன்றாக வளர்ந்து, அதில் பூக்களும் காய்களும் பூத்துக்குலுங்கினால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது அல்லவா?

- Advertisement -