நீங்க வாங்கி வந்த பூச்செடியில் ஒரு பூக்கூட பூக்கவே இல்லையா? கவலையை விடுங்க அது எந்த பூச்செடியாக இருந்தாலும் இந்த கரைசலை ஒரு கப்பு மட்டும் ஊத்தினா போதும். உங்க தோட்டம் முழுவதும் பூக்காடாவே மாறிடும்.

plant arapu sedi moor
- Advertisement -

செடி வளர்க்கும் அனைவருமே சந்திக்கக் கூடிய ஒரு பிரச்சனை என்னவென்றால் நர்சரியிலிருந்து வாங்கி வரும் போது அதில் பூக்கள் பூத்து குலுங்கி இருக்கும். ஆனால் நாம் வீட்டில் கொண்டு வந்து வைத்த பிறகு பூக்காது, செடி தளர் விடாமல் மொட்டுக்கள் வைக்காமல் சில நேரங்களில் கருகி கூட போய் விடும். இதனால் செடி வாங்கி வளர்க்கும் ஆசையே கூட இல்லாமல் போய் விடும். அப்படி ஆகாமல் இனி நீங்கள் வாங்கி வைக்கும் ஒவ்வொரு செடியும் நன்றாக தளிர் வைத்து அதிக மொட்டுக்களுடன் பூக்க வைக்க கூடிய அருமையான இயற்கை உரத்தை பற்றி தான் இந்த மாடித் தோட்டம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

எந்த பூச்செடிகளை நாம் வாங்கி வளர்த்தாலும் அதில் முக்கியமாக நாம் செய்ய வேண்டியது க்ரோனிங். நர்சரியில் இருந்து வாங்கி வரும் போது அதில் மொட்டுக்கள் பூக்கள் இருந்தாலும் அது பூத்த உடனே செடிகளை க்ரோனிங் செய்து விடுங்கள். இதன் மூலம் செடிகள் அதிக தளிர்கள் வைக்கும். ஒவ்வொரு தளிரிலும் மொட்டுக்கள் அதிகமாக வரும். அது மட்டும் இன்றி சில செடிகளுக்கு வெயில் அதிகம் தேவை ஒரு சில செடிகள் வெயில் நிழல் இருந்தால் மட்டும் போதும் செடிகளின் தன்மைக்கு ஏற்றவாறு நீங்கள் அதையும் சரியாக பராமரிப்பதுடன் இந்த ஒரு உரத்தையும் சேர்த்து கொடுத்தால் செடியின் வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும்.

- Advertisement -

பூச்செடிகள் அதிகம் பூ வைக்க
இந்த உரக்கரைசலை நீங்கள் முடிந்த வரை செடி வாங்கி வைக்கும் போது முதல் உரமாக கொடுத்து விட்டால் செடிக்கு அதிக சத்துக்கள் கிடைத்து நன்றாக வளர ஆரம்பிக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் ஏற்கனவே வளர்த்துக் கொண்டிருக்கும் செடிகளுக்கும் இந்த உரத்தை கொடுக்க அதுவும் நல்ல பலனையே கொடுக்கும்.

இந்த உரம் தயாரிக்க வீட்டில் பழைய புளித்த தயிர் இருந்தால் கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள் அதில் நன்றாக பழுத்து அழுகும் நிலையில் உள்ள வாழைப்பழத்தை இரவு அந்த தயிரில் போட்டு வைத்து விடுங்கள். மறுநாள் காலை இரண்டும் நன்றாக நொதித்துப் போய் இருக்கும். இதை ஒரு கரண்டி அல்லது கைகளால் கரைத்து விடுங்கள். அடுத்ததாக இதில் சேர்க்க வேண்டியது தான் முக்கியமான ஒரு பொருள். அது அரப்பு பொடி இது அனைத்து நாட்டு மருந்து கடைகள் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் இது கிடைக்கும். இந்த பொடியிலிருந்து ஒரே ஒரு ஸ்பூன் மட்டும் இந்த தயிர் கலவையில் சேர்த்து விடுங்கள். அது கிடைக்கவில்லையெனில் அரப்பு செடியின் இலையை காய வைத்து அரைத்து கொள்ளலாம்.

- Advertisement -

அரப்பு பொடி என்றால் தலைக்கு தேய்க்கும் சீயக்காய் கிடையாது. அரப்பு பொடி என்று தனியாக கிடைக்கும். அதை வாங்கி தான் இந்த ஒரு கரைசலுக்கு நாம் பயன்படுத்த வேண்டும். இதையும் அதில் சேர்த்த பிறகு நன்றாக கலந்து ஒரே ஒரு கப் இந்த கலவைக்கு 20 லிட்டர் தண்ணீர் வரை நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த தண்ணீரை நீங்கள் வைத்திருக்கும் செடிகளுக்கு ஒரே ஒரு கப் அளவு கொடுத்தால் மட்டும் போதும்.

இதையும் படிக்கலாமே: பழைய சாதம் இருந்தா கீழே ஊத்தாம இப்படி செடிகளுக்கு கொடுத்துப் பாருங்க, பூக்கவே பூக்காதே செடி கூட வருஷம் முழுவதும் கொத்து கொத்தா பூத்து குலுங்கும்.

இந்த அரப்பு நீர் கரைசலை மாதம் ஒரு முறை கொடுத்தாலும் போதும். சில நேரங்களில் செடிகள் வாடி மொட்டுக்கள் வைக்காமல் அப்படியே இருக்கும். அது போன்ற சமயங்களில் க்ரோனிங் செய்து விட்டு இந்த அரப்பு நீர் கரைசலை கொடுத்தால் போதும் செடிகள் அட்டகாசமாக துளிர்த்து பூக்கள் வைக்கும். இந்த இயற்கையான உரக்கரைசல் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இந்த முறையை பின்பற்றி நீங்கள் தோட்டம் முழுவதும் பூக்களால் நிரப்பி விடுங்கள்.

- Advertisement -