பழைய சாதம் இருந்தா கீழே ஊத்தாம இப்படி செடிகளுக்கு கொடுத்துப் பாருங்க, பூக்கவே பூக்காதே செடி கூட வருஷம் முழுவதும் கொத்து கொத்தா பூத்து குலுங்கும்.

gardening tips
- Advertisement -

மாடித்தோட்டம் அல்லது வீட்டில் தொட்டியில் செடி வைத்து வளர்க்க விரும்புவர்கள் எல்லாம் முதலில் ஆசைப்பட்டு வாங்கி வைப்பது பூச்செடி தான். இது பார்க்க அழகாக இருக்கும் என்பதோடு தினசரி பயன்பாட்டிற்கும் உகந்ததாக இருக்கும். அப்படியான செடிகளை நாம் நர்சரியில் சென்று வாங்கும் போது பார்த்தால் செடி முழுவதும் பூக்களாக பூத்து பார்க்கும் போதே அதை வாங்க தூண்டும். ஆனால் வீட்டிற்கு கொண்டு வந்து வைத்தால் ஒரு பூக்கூட பூக்காது. அப்படி பூக்காத செடிகளையும் வருடம் முழுவதும் பூக்க ஒரு எளிமையான ஒரு உரக்கரைசலை எப்படி வீட்டிலேயே தயாரிப்பது என்பதை தான் இந்த வீட்டுத் தோட்டம் குறித்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பூச்செடிகளை பொறுத்த வரையில் நாம் நர்சரியில் இருந்து வாங்கி வந்த உடனே அதை அதன் கவரில் இருந்து எடுத்து வேறு ஒரு தொட்டியில் நல்ல மண்கலவையுடன் சேர்த்து வைக்க வேண்டும். இந்த மண் கலவையானது செம்மண், தொழு உரம், தேங்காய் நார் உரம் இவை எல்லாம் கலந்ததாக இருந்தால் செடி நன்றாக முளைத்து வரும். இப்போது செடிகளுக்கு கொடுக்க வேண்டிய உரக்கரைசலை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பூக்காத செடிகளையும் பூக்க வைக்க உரக்கரைசல்
இந்த உரக்கரைசலுக்கு நம் வீட்டில் விழுந்திருக்கும் பழைய சாதத்தில் ஒரே ஒரு கைப்பிடி சாதத்தை மட்டும் எடுத்து நீங்கள் பழைய சாதம் ஊற்றி வைத்திருக்கும் தண்ணீரிலே கரைத்தாலும் சரி அல்லது வேறு தண்ணீர் ஊற்றினாலும் சரி மிக்ஸியில் அரைக்காமல் கைகளாலேயே நன்றாக குழைந்து வரும் அளவிற்கு கரைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கொஞ்சமாக நாட்டு சர்க்கரை கலந்து கொள்ளுங்கள். இது இரண்டையும் கலந்து இரவு முழுவதும் வைத்து விடுங்கள்.

மறுநாள் காலையில் இந்த தண்ணீரை வடிகட்டி எடுத்த பிறகு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 லிட்டர் அளவு தண்ணீரை கலந்து செடிகளுக்கு உரமாக கொடுத்து வாருங்கள். இதை வாரத்திற்கு ஒரு முறை கூட தாராளமாக கொடுக்கலாம். ஒரு வேளை உங்களிடம் நாட்டுச் சர்க்கரை இல்லை என்றால் கரைத்து வைத்திருக்கும் இந்த பழைய சாத கரைசலில் உங்கள் வீட்டில் இருக்கும் காய்கறிகளின் கழிவுகளை அதில் போட்டு விடுங்கள். அதுவும் இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் இதை வடிகட்டி அப்படியே ஊற்றுங்கள் இதுவும் நல்ல பலனை தரும்.

- Advertisement -

மற்ற செடிகளுக்கு கொடுப்பதை காட்டிலும் மல்லி செடிகளுக்கு கொஞ்சம் அமிலத்தன்மை அதிகம் இருக்கும் உரங்களை கொடுக்க வேண்டும். குறிப்பாக இப்படி கரைசல் தயாரிக்கும் போது அதில் கொஞ்சம் எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல் போன்றவற்றை கூடுதலாக கலந்து கொடுக்கலாம் அதிகமாகவும் கொடுக்க கூடாது அதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: சின்ன மல்லிப்பூ செடியிலும் முழம் முழுமா பூ பூக்க கோதுமையோடு இதை மட்டும் சேர்த்து கொடுத்து பாருங்க. இனி எல்லா காலத்திலும் மல்லிப்பூ எக்கச்சக்சமாக பூத்து தள்ளும்.

இந்த உரக்கரைசலை தொடர்ந்து செடிகளுக்கு கொடுத்து வரும் போது செடிகள் எப்போதும் நன்றாக பூத்துக் குலுங்குவதோடு நமக்கும் செலவில்லாத இயற்கையான உரக்கரைச்சலை கொடுத்து ஒரு திருப்தியும் கிடைக்கும். இந்த இயற்கை உரக்கரைசல் முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.

- Advertisement -