சின்ன மல்லிப்பூ செடியிலும் முழம் முழுமா பூ பூக்க கோதுமையோடு இதை மட்டும் சேர்த்து கொடுத்து பாருங்க. இனி எல்லா காலத்திலும் மல்லிப்பூ எக்கச்சக்சமாக பூத்து தள்ளும்.

jasmine plant
- Advertisement -

மல்லி செடியை பொறுத்த வரையில் காலத்திற்கு ஏற்றவாறு பூக்கும் பூ வகைகளில் ஒன்று. இது பொதுவாக எல்லா காலங்களிலும் பூக்காது. அதே போல் இதை சரியான முறையில் பராமரித்தால் ஒரே செடியிலும் அளவுக்கு அதிகமான பூக்களை பூக்க வைக்க வைப்பதுடன் எல்லா காலங்களிலும் பூ பூக்க வைக்கலாம். அந்த பராமரிப்பு முறைகளையும் அப்படி அதிகமாக பூக்களை பூக்க வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை வீட்டுத் தோட்டம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

மல்லி செடி அதிகம் பூ பூக்க
மல்லி செடியை நாம் எப்போதும் வெயில் பாங்கான இடத்தில் தான் வைக்க வேண்டும். அப்போது தான் அது பூ வைக்கும் வெயில் படவில்லை எனில் நிச்சயமாக அதில் பூக்கள் பூக்காது. அதே போல் ஒரு கிளையில் பூ பூத்து விட்டால் கண்டிப்பாக அந்த கிளை குரோமின் செய்ய வேண்டும் அப்போது தான் அடுத்த கிளைகள் வரும் கிளையில் இருந்து புதிய மொட்டுக்கள் வரும். இது எல்லா வகையான மல்லி செடிக்கு பொருந்தும்.

- Advertisement -

அதே போல் மல்லி செடி வைத்திருக்கும் மண்ணானது எப்போதும் ஈரப்பதமாக இருக்க வேண்டும். அதற்காக தண்ணீர் அதிகமாகவும் ஊற்றி விடக் கூடாது காய்ந்தும் விடக் கூடாது. மண் ஒரு வித ஈரப்பதத்துடன் இருக்கும் போதே செடி நல்ல பசுமையாக அதே நேரத்தில் அடர்த்தியாகவும் வளரும். இதன் மூலமும் அதிக கிளைகள் வைத்து பூக்கள் அதிகம் பூக்கும்.

இந்த மல்லி செடி பொருத்த வரையில் தரையில் இருக்கும் செடிகளை காட்டிலும் தொட்டியில் இருக்கும் செடிகளுக்கு கொஞ்சம் கூடுதலாகவே நாம் உரங்களை கவனமாக கொடுக்க வேண்டும். இப்போது தரையில் இருக்கும் செடி ஆகட்டும் அல்லது தொட்டியில் வைத்தும் செடியாகட்டும் எதுவாக இருந்தாலும் இந்த ஒரு உரக்கரைசலை கொடுக்கும் போது அதிக மொட்டுக்கள் வைத்து பூத்துக் குலுங்கும். அதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த உரம் தயாரிப்புக்கு நமக்கு கோதுமை இருந்தால் போதும். இதற்கு புதிதாக கடையில் கோதுமை வாங்கி வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டில் இருக்கும் கோதுமை மாவை பயன்படுத்தலாம் அல்லது ஒரு சில வீடுகளில் கோதுமை மாவு அரைத்து வைத்து கொஞ்சம் கட்டிப்பட்டு பழுது ஆகி விடும். அதை தூக்கி தூர போட்டு விடுவார்கள். அது போன்ற கோதுமை இருந்தாலும் இந்த உரக்கரைசலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த உரக்கரைசலுக்கு ஒரு கைப்பிடி கோதுமை மாவை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கொஞ்சமாக நாட்டு சர்க்கரை இதற்கு பெரிதாக அளவு ஒன்றும் தேவையில்லை கோதுமை மாவின் அளவிற்கு பாதி அளவு நாட்டு சர்க்கரை கலந்தால் போதும். இந்த ஒரு லிட்டர் தண்ணீரை 5 லிட்டர் தண்ணீராக கலந்து கொள்ளுங்கள். இதில் கொஞ்சம் கூட கட்டிகள் இருக்கக் கூடாது. அதே நேரத்தில் கரைத்து இந்த தண்ணீரும் கட்டியாக இருக்கக் கூடாது.

- Advertisement -

இந்த தண்ணீரை நீங்கள் அப்படியே நேரடியாக பூச்செடிக்கு ஊற்றலாம். இதை நொதிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் கோதுமை மாவின் அளவு அதிகமாகி விட்டால் தண்ணீரின் அடர்த்தி அதிகமாகி விடும். இதனால் செடிகளின் எறும்புத் தொல்லை அதிகமாகும் வாய்ப்பு உண்டு. ஆகையால் இந்த கரைசலை நீங்கள் முடிந்த வரை தண்ணீராக கரைத்து ஊற்றுவது சிறந்தது.

இதையும் படிக்கலாமே: ரோஜா மற்றும் மல்லி செடி போன்ற மலர் செடிகளில் நிறைய பூக்கள் பெரிது பெரிதாக அடர்த்தியான நிறத்தில் பூக்க சமையலறையில் தூக்கி எறியப்படும் இந்த பொருட்கள் போதுமே!

மேற் சொன்ன வழிமுறைகளுடன் பராமரித்து இந்த ஒரு கரைசலும் தொடர்ந்து கொடுத்து வரும் போது உங்கள் மல்லி செடி மட்டுமல்ல எந்த வகையான பூ செடியாக இருந்தாலும் இந்த நன்றாக பூக்கும். இந்த எளிமையான செலவில்லாத இந்த உரக்கரைசலை நீங்களும் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.

- Advertisement -