குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் கூட, உங்கள் குலதெய்வத்தை வீடு தேடி வர வைக்க முடியும். இந்த பூஜையை தொடர்ந்து 48 நாட்கள் செய்து பாருங்கள்.

kuladheivam
- Advertisement -

குலதெய்வம் தெரிந்தவர்கள் அவரவருடைய குலதெய்வத்தை தினம்தோறும் மனதார நினைத்து, அவரவர் வீட்டில், அந்த குல தெய்வத்தின் திருவுருவப் படத்தை வைத்து வழிபாடு செய்யவேண்டும். நம்மில் பல பேருக்கு இது தெரிந்திருக்கும். குலதெய்வம் தெரியாதவர்கள், அவர்கள் தங்களுடைய குல தெய்வத்தை எப்படி வழிபாடு செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குலதெய்வம் தெரியாதவர்கள் திருப்பதி பெருமாளை, காமாட்சி அம்மனை அப்படி இல்லை என்றால் திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக பாவித்து வழிபாடு செய்து வருவார்கள்.

perumal

இப்படியாக குலதெய்வம் தெரியாதவர்கள், வேறு ஒரு தெய்வத்தை தங்களுடைய குல தெய்வமாக ஏற்று வழிபாடு செய்வதில் தவறு ஒன்றும் கிடையாது. இருப்பினும் உங்களுடைய உண்மையான குலதெய்வம் எதுவோ அதை நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டியதும் அவசியமான ஒன்று.

- Advertisement -

உங்களுக்கு குலதெய்வம் எது என்று தெரியவில்லை. என்ன செய்யலாம்? நீங்கள் வசிக்கும் இடத்திலிருந்து கொஞ்சம் போல, ஒரு கைப்பிடி அளவு மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். வாடகை வீட்டில் இருந்தாலும் சரி சொந்த வீட்டில் இருந்தாலும் சரி, உங்களுடைய வீட்டை சுற்றி மண் இல்லை என்றாலும், உங்கள் வாசலில் மண் இருக்கும் அல்லவா? அதிலிருந்து கூட ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ளுங்கள்.

amman

அந்த மண்ணில் கொஞ்சமாக மஞ்சள் தண்ணீரை கரைத்து தெளித்து விடுங்கள். அதன் பின்பு உங்கள் பூஜை அறைக்கு கொண்டு வந்து, ஒரு சிறிய மஞ்சள் துணியில் கொட்டி முடிச்சுப் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். இந்த பூஜையை உங்களுடைய வீடுகளில் வெள்ளிக்கிழமை தொடங்கலாம். அப்படி இல்லை என்றால் அமாவாசை பவுர்ணமி தினத்தில் தொடங்குவது மேலும் சிறப்பானது.

- Advertisement -

காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில், உங்களுடைய குல தெய்வம் தெரியாது. இருப்பினும் ‘குல தெய்வம்’ என்ற வார்த்தையை உச்சரித்து, தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, ஒரு அகலமான தட்டில் மஞ்சள் துணியில் முடிந்து வைத்திருக்கும் மண்ணை கொட்டி பரப்பிவிட்டு அதில் உங்களது ஆள்காட்டி விரலால் ‘குலதெய்வம்’ என்று எழுதி விடுங்கள்.

manjal-mudichu

அதன் பின்பு இரு கைகளையும் ஏந்தி இறைவனிடம் ‘குல தெய்வமே துணை, குலதெய்வம் எங்கள் வீடு தேடி வர வேண்டும்’. என்ற வேண்டுதலை வைக்க வேண்டும். இந்த வார்த்தையை 108 முறை உங்கள் மனதார உச்சரிக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. இறுதியாக தீப தூப ஆராதனையை காட்டி உங்கள் பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பூஜை முடிந்தவுடன் தாம்புல தட்டில் இருக்கும் மண்ணை மீண்டும் அந்த மஞ்சள் துணியில் கொட்டி முடிச்சு போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

poojai arai

மீண்டும் அடுத்த நாள் காலை இதேபோல் உங்களது பூஜையை மனதார செய்து நிறைவு செய்து கொள்ள வேண்டும். 48 நாட்களும் நீங்கள் வசிக்கும் இடத்திற்கு, நீங்கள் வசிக்கும் மண்ணுக்கு உங்கள் குலதெய்வம் வருகை தர வேண்டி செய்யக்கூடிய பூஜை தான் இது. பெண்களும் இந்த பூஜையை தாராளமாக செய்யலாம். பூஜை செய்ய முடியாத 5 நாட்களை தவிர்த்துவிட்டு 48 நாட்கள் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு, உங்களுடைய குலதெய்வம் எது என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால், உங்கள் குல தெய்வத்திற்கு தெரியும். தெரியாத அந்த குல தெய்வத்தையும் நினைத்து நீங்கள் பூஜை செய்து வழிபடுவது! இப்படியாக தெரியாத குலதெய்வத்தையும் நினைத்து பூஜை செய்து வருபவர்களுக்கு, நிச்சயமாக கண்ணுக்கு தெரியாத உங்கள் குலதெய்வம் காத்து நிற்கும் என்பதில் ஒரு துளி அளவுகூட சந்தேகமே இல்லை.

temple-prayer

இந்த 48 நாட்களும் பூஜையை முடித்த பின்பு அந்த மண்ணை உங்களது வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில், கை படாத இடத்தில் பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்ளலாம். இந்தப் பூஜையை முழுமையாக நிறைவு செய்த பின்பும் தினசரி பூஜையின் போது ‘கண்ணுக்குத் தெரியாத குலதெய்வமாக இருந்தாலும், எங்களை காக்க வேண்டும்’ என்ற வேண்டுதலை வைத்து உங்கள் பூஜையை செய்து வாருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுபவர்களால் எந்த திருஷ்டியும் ஏற்படாமல் இருக்க, சனி தோஷம் நீங்க வீட்டில் இப்படி செய்து பாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -