உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா செடி துளிர் விடாமல், பூக்காமல் போவதற்கு இந்த 5 தவறுகளும் ஒரு காரணம் தான்!

rose4
- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா செடிகள் நிறைய பூக்களை கொடுக்க வேண்டும் என்பதற்காக, நீங்கள் பல விஷயங்களை செய்யலாம். ஆனால் எவ்வளவு உரங்களை கொடுத்தும் வீட்டில் இருக்கும் ரோஜா செடி பூகாமல் இருப்பதற்கு காரணம் என்ன? கடையிலிருந்து வாங்கி வரும்போது மட்டும் அந்த ரோஜா செடியில் பூ இருப்பதை பார்த்து இருப்போம். அந்த பூவின் அழகில் மயங்கி தான், அந்த செடியை வாங்குகின்றோம். அதன்பின்பு அந்தச் செடியில் அடுத்தடுத்து பூக்களும் பூக்காது. செடி துளிர் விட்டு வளராது. உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா செடிகளில் இந்த தவறுகளை எல்லாம் நீங்கள் செய்திருந்தால் இனி அதை திருத்திக் கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுடைய ரோஜா செடி அழகாக பூக்க தொடங்கி விடும்.

cutting-rose-plant

முதல் தவறு. நிறையபேர் ரோஜா செடிகளில் பூக்க கூடிய, பூக்களை பறிப்பதற்கு, மனம் இல்லாமல் அதை பறிக்காமல் அப்படியே விட்டுவிடுவார்கள். ரோஜா செடியில் பூ பூத்த, இரண்டிலிருந்து மூன்று நாட்களுக்குள், அதன் கீழே இருக்கும் இரண்டு இலைகளோடு சேர்த்து பூவை வெட்டி விட்டு விட வேண்டும்.

- Advertisement -

அப்போதுதான் அந்த இடத்திலிருந்து மீண்டும் புதிய இலைகள் துளிர்க்க ஆரம்பிக்கும். புதிய மொட்டுக்கள் வைக்கும். இந்த இடத்தில் இரண்டாவதாக ஒரு தவறு நடக்கும். சில சமயம் இப்படி பூக்கள் பூத்த பின்பு, அந்த இடத்தை வெட்டினாலும் அந்த இடத்திலிருந்து புதிய இலைகள் துளிர்க்காது. அந்த இடம் கருப்பாக இருக்கும். இப்படி நீங்கள் வெட்டிய அந்த இடம் கருப்பாக மாறினால், அந்த இடத்தை மீண்டும் வெட்டிவிட்டு கொஞ்சமாக அந்த இடத்தில் வேப்ப எண்ணெயுடன் சேர்ந்த்து மஞ்சளையும் லேசாக தடவி விடுங்கள்.

watering-rose-plant

மூன்றாவதாக, உங்கள் வீட்டு ரோஜா செடியில் மண் மிகவும் இறுக்கமாக இருக்கக்கூடாது. மாதத்திற்கு ஒரு முறையாவது வேர் பகுதிகளை சுற்றி இருக்கக்கூடிய மண்ணை கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மண், தண்ணீர் ஊற்றும் போது இறுக்கமாகி கொண்டே சென்றால், வேர் மண்ணில் ஊடுருவி வளராது. செடிகளுக்கான ஊட்டச்சத்தும் கிடைக்காது.

- Advertisement -

நான்காவதாக உங்களுடைய வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்களின் கழிவுகளை, அதாவது சமையலறைக்கு பயன்படுத்தும் காய்கறி கழிவுகள், பழங்களின் கழிவுகளை அப்படியே கொண்டுபோய் ரோஜா செடியில் கொட்டக் கூடாது. அதை தண்ணீரில் ஊறவைத்து, அதை வடிகட்டி அதிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை மட்டும் தான் செடிகளுக்கு போட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

rose-cutting

ஐந்தாவதாக, 30 நாட்களுக்கு இரண்டு முறை கட்டாயம் ஏதாவது ஒரு ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரை உங்கள் ரோஜா செடிகளுக்கு கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். வெறும் அரிசி பருப்பு கழுவிய தண்ணீரை மட்டுமாவது அந்த செடிகளுக்கு கொடுத்து வந்தாலே போதும். செடி செழிப்பாக வளரும்.

- Advertisement -

rose6

அதனைத் தொடர்ந்து உங்களது ரோஜா செடியை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செடிகளின் கிளைகளை நுனியில் வெட்டி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். வெட்டி வெட்டி விடத்தான் நிறைய துளிர்கள் வளர ஆரம்பிக்கும். அந்த இடத்தில் இருந்து நிறைய கிளைகள் வைக்கும். நிறைய மொட்டுகள் வைக்கும்.

rose-plant

ரோஜா செடியை வெட்டுவதற்கு கஷ்டப்பட்டு கொண்டு வெட்டாமல் அப்படியே விட்டு விட்டால், நிச்சயமாக உங்களுடைய ரோஜா செடி வளராது. நீங்கள் கடையில் இருந்து வாங்கி வந்த அதே நிலையில்தான் இருக்கும். நிறைய பூக்களையும் கொடுக்காது.

rose-plant-spray

இறுதியாக ஒரு விஷயம். ரோஜா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும்போது வேர்ப் பகுதிகளில் மட்டும் ஊற்றினால் பத்தாது. அதன்மேலே இலைகள் பூக்கள் எல்லா இடங்களிலும் படும்படி தெளித்து விடுங்கள் அல்லது ஸ்ப்ரே செய்யுங்கள். மேல் சொன்ன தவறுகளை உங்களுடைய வீட்டில் நீங்கள் செய்து இருந்தால் அதில் சில திருத்தங்களை கொண்டு வாருங்கள். நிச்சயமாக நீங்கள் ஆசைப்பட்ட பூக்களை உங்களுடைய ரோஜா செடியில் நிச்சயம் காணலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -