- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்பொரித்த கோழிக்கறியில் செய்யும் இந்த சிக்கன் கிரேவியை ஒரு முறை சமைத்துப் பாருங்கள். அனைவரும் இதன்...

பொரித்த கோழிக்கறியில் செய்யும் இந்த சிக்கன் கிரேவியை ஒரு முறை சமைத்துப் பாருங்கள். அனைவரும் இதன் சுவைக்கு அடிமையாகி விடுவீர்கள்.

- Advertisement -

உலகம் முழுவதுமே அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக கோழிக்கறி உள்ளது. எந்த நாடாக இருந்தாலும் அங்கு கோழிக்கறி பிரியர்களே அதிகமாக இருக்கிறார்கள். அனைவரும் விரும்பும் கோழி கறியினை வைத்து கோழி குழம்பு, கோழி வறுவல், கோழி மசாலா இவ்வாறு பலவித உணவுகளை சமைக்கின்றோம். அதேபோல் கோழிக்கறியினை வைத்து சற்று வித்தியாசமான முறையில் செய்யக்கூடிய சிக்கன் கிரேவியை எப்படி செய்வது என்பதனை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

gravy1

தேவையான பொருட்கள்:
கோழிக்கறி – முக்கால் கிலோ, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 3, எண்ணெய் – 50 கிராம், வரமிளகாய் – 10, பச்சை மிளகாய் – ஒன்று, தனியா – 2 ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், கிராம்பு – ஐந்து, பட்டை சிறிய துண்டு – ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன், தேங்காய்த்துருவல் – 3 ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் வரமிளகாய், தனியா, சோம்பு, சீரகம், மிளகு, கிராம்பு, பட்டை மற்றும் இவற்றுடன் இரண்டு ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது, 3 ஸ்பூன் தேங்காய் துருவல் மற்றும் அரை ஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கொஞ்சம் கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

gravy2

பிறகு அதே மிக்சி ஜாரில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் இவை மூன்றையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும், அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள கோழிக்கறியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். கோழிக்கறி எண்ணெயில் நன்றாக பொறிந்து வதங்க வேண்டும்.

gravy3

பிறகு கோழிக்கறியுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி, வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். இவற்றிற்கு தேவையான உப்பு மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

mealmaker-gravy4

15 நிமிடங்கள் கடாயை மூடி வைத்து கோழிக்கறி மசாலாவுடன் நன்றாக கலந்து வேகும் வரை அப்படியே விட வேண்டும். சிறிது நேரம் கழித்து மூடியை திறந்து அரை ஸ்பூன் மிளகுத்தூளை பரவலாகத் தூவி விட்டு ஒருமுறை கிளறி விட வேண்டும். பிறகு கொத்தமல்லி இலைகளை அதன் மீது தூவி விட்டு ஒரு முறை கிளறி விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும்.

gravy4

கோழிக்கறியை எண்ணெயில் வதக்கி பிரஷ்ஷான மசாலாவுடன் சேர்த்து செய்யும் இந்த சிக்கன் கிரேவி, எப்பொழுதும் செய்யும் சிக்கன் கிரேவியின் சுவையை விட சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இவ்வாறு ஒருமுறை சமைத்து சாப்பிட்டு பாருங்கள் உங்களுக்கே புரியும். இதனை சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பம் இவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும்.

சற்று முன்