- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீடு கட்ட போறீங்களா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க. பூமியில் இருக்கும் தோஷங்கள் அத்தனையும் விலகினால் தான்...

வீடு கட்ட போறீங்களா? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க. பூமியில் இருக்கும் தோஷங்கள் அத்தனையும் விலகினால் தான் நாம் கட்டப்போகும் வீடு சுபிட்சமாக இருக்கும்.

- Advertisement -

உங்களிடம் இருக்கக்கூடிய நிலத்தில் வீடு கட்டுவதாக இருந்தால் முதலில் அந்த நிலத்தில் இருக்கக்கூடிய தோஷத்தை விலக்கிவிட வேண்டும். அது எப்படி நிலத்தில் தோஷம் வரும் என்று சில பேருக்கு சந்தேகம் இருக்கும். தோஷம் இல்லாத நிலம் கட்டாயமாக இருக்க முடியாது. தோஷம் இல்லாத நிலம் ஒருவருக்கு கிடைப்பது என்பது மிக அபூர்வமான விஷயம். ஒரு நிலத்திற்கு தோஷம் என்பது எப்படி உண்டாகிறது என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின்பு அந்த தோஷத்தை விளக்கக்கூடிய பரிகாரத்தை தெரிந்து கொள்வோம். ஒரு நிலத்தை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து வாஸ்து சாஸ்திரம் தெரிந்தவர்களை அந்த இடத்திற்கு கொண்டு போய் காண்பித்து அந்த நிலத்தை வாங்கலாம் என்று முடிவு செய்து விட்டீர்கள்.

boomi-poojai1

அந்த நிலத்தை நீங்கள் வாங்கியும் விட்டீர்கள். நிலம் என்பது ஒருவர் கையிலிருந்து மற்றவர் கைக்கு மாறக்கூடிய ஒரு சொத்துதான். அந்த சொத்தை பெற்றவர்கள், பிள்ளைகளுக்கு சரிபாதியாக தான் பிரித்துக் கொடுத்து இருப்பார்கள். இருப்பினும் அந்த வீட்டில் பிறந்த பெண்ணுக்கு அந்த நிலத்தில் உரிமை கொடுக்கப்படாமல் இருக்கும். அந்தப் பெண்ணுக்கு அந்த நிலத்தின் மேல் ஒரு ஏக்கம் இருக்கலாம். அந்த ஏக்கம் அந்த நிலத்தில் தோஷமாக மாறிவிடும்.

- Advertisement -

இதேபோல் பங்காளிகளுக்கு சொத்தில் சரியான அளவு கொடுக்கபடவில்லை என்றாலும் அவர்களுடைய ஏக்கம் அந்த நில்லத்தில் தோஷமாக மாறி இருக்கும். தங்களுடைய கஷ்ட நஷ்டத்திற்காக பாரம்பரியமாக தாங்கள் வைத்திருந்த நிலத்தை விற்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு இருக்கும். இப்படி காலம்காலமாக ஒருவர் கையில் இருக்கும் நிலம் மற்றவர் கைக்கு மாறும் போதும் அந்த நிலத்தில் சில தோஷங்கள் உண்டாகிவிடும்.

veedu

இப்படி நிலத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஏதாவது ஒரு தோஷம் கட்டாயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த தோஷம் என்பது பரிகாரத்தின் மூலம் நிவர்த்தி செய்யப்பட கூடியதுதான். வீடு கட்டுவதற்கு முன்பாக உங்கள் நிலத்தில் இருக்கக்கூடிய கண்ணுக்கு தெரிந்த கண்ணுக்கு தெரியாத தோஷங்களை எப்படி நீக்குவது.

- Advertisement -

முதலில் நீங்கள் வாங்கிய நிலம் கரடுமுரடாக மேடும் பள்ளமுமாக இருந்தால் அதை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். வாஸ்து பூஜை செய்வதற்கு முன்பு உங்களுடைய நிலத்தில் நீங்கள் இதை கட்டாயம் செய்ய வேண்டும். உங்களுடைய நிலத்திற்கு ஒரு நாட்டுப் பசுமாட்டை அழைத்து வர வேண்டும். அந்த நாட்டுப் பசு மாட்டை கடவுளாக பாவித்து அழைக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

pasu-agathikeerai

நீங்கள் வாங்கி வைத்திருக்கும் நிலத்தில் இந்த நாட்டு பசு மாட்டினை கொண்டு வந்து கட்டி வைத்து விட வேண்டும். அந்த நாட்டு பசுவிற்கு தேவையான ஒரு நாள் உணவு, தண்ணீர் எல்லாவற்றையும் நீங்களே கொடுத்து அதை உங்கள் நிலத்தில் பராமரிக்க வேண்டும். அதாவது ஒரு இரண்டு மணி நேரம் போல அந்தப் பசு மாடு உங்கள் நிலத்திலேயே இருக்க வேண்டும்.

ஒரு பக்கம் புது வீடு கட்ட வாஸ்து பூஜையை தொடங்குங்கள். ஒரு பக்கம் இந்த நாட்டுப் பசுமாடு இருக்கட்டும். வாஸ்து பூஜையை நல்லபடியாக நடத்தி முடித்து விட்டீர்கள். அடுத்தபடியாக நீங்கள் கொண்டுவந்த மாட்டினை கட்டி வைத்து உள்ளீர்கள் அல்லவா. அந்த மாட்டினை உங்களுடைய நிலத்தினை மூன்று முறை சுற்றி வரச் செய்ய வேண்டும். மாட்டிற்கு சொந்தக்காரர் கட்டாயமாக வந்திருப்பார். அவர்களிடம் சொல்லி மாட்டை மூன்று முறை உங்களுடைய நிலத்தில் சுற்றி விடுங்கள். அதாவது பசுமாட்டின் கால்தடம் உங்களுடைய நிலம் முழுவதும் பட வேண்டும்.

boomi-poojai2

அவ்வளவு தான். பசுமாட்டிற்கு செய்ய வேண்டிய கோ பூஜையை இறுதியாக மரியாதையுடன் செய்து பசுமாட்டை வழி அனுப்பி வைக்க வேண்டும். இப்படி செய்தால் நீங்கள் வாங்கிய நிலத்தில் இருக்கும் தோஷம் நீங்கப்படும். நீங்கள் கட்டக்கூடிய இல்லம் கோவிலாக மாறும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்