- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்10 நிமிடத்தில் பக்குவமான பச்சை மிளகாய் சட்னி அரைப்பது எப்படி?

10 நிமிடத்தில் பக்குவமான பச்சை மிளகாய் சட்னி அரைப்பது எப்படி?

- Advertisement -

இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள மிக மிக சுலபமான முறையில் 10 நிமிடத்தில் சுவையான பச்சை மிளகாய் சட்னி எப்படி அரைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த சட்னியில் தேங்காய் சேர்க்க போவது கிடையாது. வித்தியாசமான முறையில், வித்தியாசமான ஈஸி சட்னி ரெசிபி உங்களுக்காக. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

பச்சை மிளகாய்

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 பல், பச்சை மிளகாய் – 5, கொத்தமல்லித்தழை – 2 இனுக்கு, தோல் உரித்த பூண்டு பல் – 2, பெரிய நெல்லிக்காய் அளவு – புளி, உப்பு தேவையான அளவு, இந்த பொருட்களை போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு விழுது போல் அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், உளுந்து – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பெருங்காயம் – 1/4 ஸ்பூன், சேர்த்து தாளித்து அரைத்து வைத்திருக்கும் விழுதை கடாயில் கொட்டி 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

chutney7

கொதி வரும்போது சட்னியில் உப்பு சரிபார்த்துக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் சட்னி கொதி வரும்போது உப்பு சேர்த்துக் கொள்ளலாம். இந்த சட்னி கொதிக்கும் போதே இலேசான கொத்தமல்லி வாடையுடன் பச்சை மிளகாய் வாடையும் நமக்கு வீசும். சட்னி நன்றாக கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு பரிமாற வேண்டியது தான்.

- Advertisement -

பச்சை மிளகாய் சேர்த்து அரைப்பதால் இந்த சட்னி கொஞ்சம் காரம் தூக்கலாக இருக்கும். நல்லெண்ணெயை கொஞ்சம் அதிகமாக விட்டு சட்னியை தாளித்துக் கொள்ளுங்கள். (சின்ன வெங்காயம் இல்லாத சமயத்தில் கொஞ்சம் பெரிய வெங்காயத்தையும் சேர்த்து இந்த சட்னியை அரைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.)

சுடச்சுட இட்லி தோசைக்கு இந்த சட்னியை பரிமாறினால் அட்டகாசமான சுவையில் இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்