- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சமைக்கத் தெரியாதவங்க கூட இந்த பாம்பே அல்வாவை ஈஸியா செஞ்சு அசத்தலாம். பக்குவமே தவறாது. சிம்பிளான...

சமைக்கத் தெரியாதவங்க கூட இந்த பாம்பே அல்வாவை ஈஸியா செஞ்சு அசத்தலாம். பக்குவமே தவறாது. சிம்பிளான பாம்பே அல்வா ரெசிபி இந்த தீபாவளிக்கு உங்களுக்காக.

- Advertisement -

கலர்ஃபுல்லா இந்த அல்வாவை பார்க்கும்போதே சாப்பிடனும் போல தோணுதுல்ல. கடைகளில் எல்லாம் கிடைக்கக்கூடிய இந்த பாம்பே அல்வா ரெசிபியை நம்ம வீட்ல ஒரு வாட்டி ட்ரை பண்ணிப் பார்க்கலாமா. ரொம்ப ரொம்ப ஈசியா, சமைக்கத் தெரியாதவர்கள் கூட இந்த ஸ்வீட்டை செய்து, வீட்டில் நல்ல பெயர் வாங்கிடலாம். சிம்பிளான சூப்பரான பாம்பே அல்வா பக்குவமாக எப்படி செய்வது. ரெசிபி உங்களுக்காக மட்டும்.

முதலில் இந்த ரெசிபியை செய்ய தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். கான்பிளவர் மாவு 1 கப், அதாவது 100 கிராம் அளவு கான்பிளவர் மாவு எடுத்துக் கொண்டால் பின் செல்லக்கூடிய அளவுகள் சரியாக இருக்கும். எந்த கப்பல் கான்பிளவர் மாவை அளந்து எடுத்துக் கொள்கிறார்களோ அதே கப்பில் – 2 கப் அளவு சர்க்கரை, நெய் – 4 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி – 1 ஸ்பூன், சிவப்பு நிற – கலர் பவுடர் 2 சிட்டிகை, லெமன் ஜூஸ் – 1/2 ஸ்பூன், பொடியாக உடைத்த முந்திரி பருப்பு – 15 லிருந்து 20, துருவிய பாதாம் பிஸ்தா பொடி – 2 டேபிள்ஸ்பூன்.

- Advertisement -

முதலில் ஒரு அகலமான பௌலில் – 1 கப் அளவு கான்பிளவர் மாவு போட்டு, 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி கான்பிளவர் மாவை கட்டி இல்லாமல் கரைத்து அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.

halwa3

அடுத்து சர்க்கரை கரைசலை தயார் செய்யவேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 கப் அளவு சர்க்கரை போட்டு, 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, சர்க்கரையை நன்றாக கலந்து விட்டு கொதிக்க விடுங்கள். சர்க்கரைக்கு பாகுபதம் எல்லாம் தேவை கிடையாது. சர்க்கரை நன்றாக நுரை கட்டி கொதி வந்தாலே போதும்.

- Advertisement -

சர்க்கரை நன்றாகக் கொதி வந்தவுடன் கரைத்து வைத்திருக்கும் கான்பிளவர் மாவை அடுப்பில் இருக்கும் சர்க்கரை கரைசலுடன் ஊற்ற வேண்டும். கான்பிளவர் மாவை ஊற்றுவதற்கு முன்பு ஒருமுறை நன்றாக கலந்து கொள்ளுங்கள். அடியில் கான்பிளவர் மாவு தேங்கியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

halwa1

கான்பிளவர் மாவு சர்க்கரையில் ஊற்றிய பின்பு கைவிடாமல் கலந்து கொண்டே இருக்க வேண்டும். கான்பிளவர் மாவு சர்க்கரையோடு சேர்ந்து இரண்டு அல்லது மூன்று நிமிடங்களில் அப்படியே கட்டி பட தொடங்கும் அல்வா. இந்த அல்வா தளதளவென கெட்டியாக வருவதற்கு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் எடுக்கும். கெட்டி பதத்திற்கு அல்வா வந்தவுடன் தயாராக எடுத்து வைத்திருக்கும் எலுமிச்சை பழச்சாறு, ஏலக்காய் பவுடர், கலர் பவுடர், முந்திரிப்பருப்பு, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து ஒருமுறை நன்றாக கலந்துவிட வேண்டும். (அல்வா கட்டப்பட்ட பின்பு, 10 நிமிடங்கள் அல்வாவை கிளறினால் தான் அல்வா சரியான பக்குவத்தில் கிடைக்கும்.)

- Advertisement -

halwa2

நம் கையில் 4 டேபிள்ஸ்பூன் நெய் இருக்கிறது அல்லவா. அந்த நெய்யை, இந்த அல்வாவின் ஒவ்வொரு ஸ்பூன் விட்டு கலந்துகொண்டே இருக்க வேண்டும். மொத்தமாக இந்த அல்வா தயாராவதற்கு 10 லிருந்து 15 நிமிடங்கள் எடுக்கும். கைவிடாமல் அல்வாவை கிளறிக்கொண்டே ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும், ஒவ்வொரு ஸ்பூன் நெயை நான்கு அல்லது ஐந்து முறை சேர்த்து அல்வா கிண்டி கொண்டே இருங்க. சூப்பரா கெட்டியா தளதளன்னு அல்வா நமக்கு கிடைத்துவிடும். அடுப்பை அணைத்துவிடுங்கள்.

halwa4

உடனடியாக ஒரு ட்ரேயில் நெய் தடவி அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பாதாம் பிஸ்தா பருப்புகளை தூவி, அலங்கரிக்கப்பட்ட டிரைவில் கடாயில் தயாராக இருக்கும் அல்வாவை எடுத்து கொட்டி, அப்படியே கரண்டியை வைத்து சமப்படுத்தி விடுங்கள். அல்வா நன்றாக ஆறிய பின்பு, ட்ரேவைக் கவிழ்த்துப் போட்டால், அல்வா சூப்பராக நமக்கு கிடைத்துவிடும். உங்களுக்கு தேவையான வடிவத்தில் இந்த அல்வாவை வெட்டி சுவைத்துப் பாருங்கள். இது கடையில் வாங்கிய அல்வா போலவே சூப்பரா இருக்கும்.

halwa5

சிவப்பு நிற கலர் பொடியை தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உங்களுக்கு பிடித்த ஆரஞ்சு, மஞ்சள் கலர் கேசரி பவுடர் எதை வேண்டுமென்றாலும் இந்த அல்வாவில் சேர்த்து செய்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். உங்களுக்கு இந்த குறிப்பு படிச்சிருந்தா பயப்படாம இந்த தீபாவளிக்கு ட்ரை பண்ணி பாருங்க. சூப்பரான ஸ்வீட் ஸ்டால் பாம்பே அல்வா தயார்.

சற்று முன்