- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்எப்பொழுதும் செய்யும் கேரட் பொரியலை விட இப்படி மசாலா சேர்த்து செய்யும் கேரட் பொரியல் மிகவும்...

எப்பொழுதும் செய்யும் கேரட் பொரியலை விட இப்படி மசாலா சேர்த்து செய்யும் கேரட் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும்

- Advertisement -

மதிய உணவிற்காக எப்பொழுதும் போல சாதம், குழம்பு அதனுடன் தொட்டுக்கொள்ள ஏதாவது ஒரு காய்கறியை பதார்த்தமாக செய்ய வேண்டும். இப்படி தினம் தினம் ஏதேனும் ஒரு காய்கறியை தேடி தேடி சமைப்பது சற்று யோசனை மிகுந்த ஒரு வேலையாகத்தான் இருக்கும். அவ்வாறு ஒரே காய்கறியாக இருந்தாலும் அதனை பலவித சுவைகளிலும் செய்து கொடுக்கலாம். அப்படி கேரட் பொரியலை எப்பொழுதும் செய்வதை போல் அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக மசாலா அரைத்து சேர்த்து செய்தால் மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இப்படி ஒரு காய்கறியை வெவ்வேறு விதமான சுவையில் செய்து கொடுத்தால் ஒரே காய்கறியை தொடர்ந்து இரண்டு நாட்களுக்குக் கூட சமைத்துக் கொடுக்கலாம். அப்படி சுவையான கேரட் பொரியலை எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

eating-food

தேவையான பொருட்கள்:
கேரட் – கால் கிலோ, வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 2, மிளகு – அரை ஸ்பூன், கடலைப்பருப்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கேரட்டை தண்ணீரில் சுத்தமாக கழுவிக் கொண்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, அரை ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் கடலைப்பருப்பு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

carrot-juice1

பின்னர் இவற்றை ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு மீண்டும் அடுப்பின் மீது வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு அரை ஸ்பூன், உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அறிந்து வைத்துள்ள கேரட்டையும் சேர்த்து அதனுடன் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பின்னர் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிறிது நேரம் அடுப்பை சிம்மில் வைத்து கேரட்டை வேக வைக்க வேண்டும்.

carrot

அதன் பிறகு இரண்டு சில்லு தேங்காயை காய்கறி துருவலை பயன்படுத்தி துருவிக் கொள்ள வேண்டும். சிறிது நேரத்தில் கேரட் முழுவதுமாக வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா பவுடரை இதனுடன் சேர்த்து நன்றாக பிரட்டி விட வேண்டும். பின்னர் இறுதியாக தேங்காய் துருவலையும் சேர்த்து ஒரு முறை பிரட்டி விட்டு அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

சற்று முன்