- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்10 நிமிடத்தில், டீ கொதிக்கும் நேரத்தில் ஆரோக்கியமான அருமையான இந்த மொறு மொறு வடையை சுட்டு...

10 நிமிடத்தில், டீ கொதிக்கும் நேரத்தில் ஆரோக்கியமான அருமையான இந்த மொறு மொறு வடையை சுட்டு எடுக்கலாம். சூப்பர் டீ டைம் ஸ்னாக்ஸ் உங்களுக்காக.

- Advertisement -

காய்கறிகளை அப்படியே கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கட்டாயமாக சாப்பிட மாட்டார்கள். காய்கறிகளை சேர்த்து மொறுமொறுவென இப்படி ஒரு வடையை சுட்டு தான் கொடுத்துப் பாருங்களேன். டீ குடிக்கும் நேரத்தில் விருப்பமாக சாப்பிடுவார்கள். வயிற்றுக்கு ஆரோக்கியம் தரும் நிறைவான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட இது. பத்தே நிமிடத்தில் டீ கொதிக்கும் சமயத்தில் மற்றொரு அடுப்பில் இந்த வடையை சுட்டு எடுத்துவிடலாம். ரொம்ப ரொம்ப ஈசியா. வாங்க அந்த ஆரோக்கியமான வடை ரெசிபியை நாமும் தெரிந்து கொள்ளலாம்.

carrot

1 பெரிய சைஸ் கேரட், 1 பெரிய சைஸ் உருளைக்கிழங்கை தோல் சீவி பச்சையாகவே துருவிக் கொள்ளவேண்டும். துருவிய இந்த இரண்டு காய்கறிகளையும் ஒரு அகலமான பௌலில் போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதோடு பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு, கான்பிளவர் மாவு – 100 கிராம், அரிசி மாவு – 50 கிராம், உப்பு தேவையான அளவு, மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும். தண்ணீர் எதுவும் ஊற்றக்கூடாது.

veg-vadai1

அடுப்பில் ஒரு அகலமான பேன் வைத்துக் கொள்ளவும். அப்படி இல்லை என்றால் தோசைக்கல்லை வைத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அது மிதமாக சூடு ஆன பின்பு, தயாராக பிசைந்த வைத்திருக்கும் மாவை எடுத்து மசால் வடை போல் விரல்களில் தட்டி தோசைக்கல்லில் போட வேண்டும். மசால் வடை அளவிற்கு தடிமனாக இல்லாமல், கொஞ்சம் மெல்லிசா தட்டி அப்படியே தோசைக்கல்லில் இருக்கும் எண்ணெயில் போட்டு ஒரு பக்கம் சிவந்தவுடன் மற்றொரு பக்கம் திருப்பி போட்டு மொறு மொறுவென சிவக்க வைத்து அப்படியே சுட சுட பரிமாற வேண்டியது தான்.

- Advertisement -

கட்லெட் எல்லாம் ஷேடோ ஃப்ரை செய்திருப்பார்கள் அல்லவா. அதே போல் தான் இதையும் நாம் குறைவான எண்ணெயில் சுட்டு எடுக்க வேண்டும். நிறைய எண்ணெயில் இதை போட்டு வடை போல பொரித்து எடுக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இப்படி செய்த இந்த வடையை அப்படியே குழந்தைகளுக்கு கொடுத்தாலே சுட சுட கடித்து சாப்பிட்டு விடுவார்கள். இல்லை என்றால் தொட்டுக்கொள்ள சாஸுடன் இதை பரிமாறலாம். அல்லது புதினா சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும்.

veg-vadai2

உங்களுக்கு இந்த சிம்பிள் ரெசிபி பிடிச்சிருந்தா உங்க வீட்லயும் ட்ரை பண்ணி பாருங்க. இந்த வடையில் இன்னும் கூடுதல் சுவைக்காக கூடுதல் ஆரோக்கியத்திற்காக தேவை என்றால் கரம்மசாலா பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், குடைமிளகாய், முட்டைக்கோஸ், போன்ற மற்ற பொருட்களையும் நம் விருப்பத்திற்கு ஏற்ப போட்டு வடை செய்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். 10 நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை நீங்க மிஸ் பண்ணாதீங்க.

சற்று முன்