- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்குடைமிளகாய் முட்டையை வைத்து ஆரோக்கியமான மசாலா ஃப்ரை 5 நிமிடத்தில் தயார். சப்பாத்தி, தோசை சுடச்சுட...

குடைமிளகாய் முட்டையை வைத்து ஆரோக்கியமான மசாலா ஃப்ரை 5 நிமிடத்தில் தயார். சப்பாத்தி, தோசை சுடச்சுட சாதத்திற்கு இது செம சைட் டிஷ்.

- Advertisement -

நாம் செய்யக்கூடிய சமையல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். நாவிற்கு சுவை கொண்டதாகவும் இருக்க வேண்டும். சமைப்பதற்கு சுலபமாகவும் இருக்க வேண்டும். காலை நேரத்தில் அவசர அவசரமாகச் லஞ்ச் பேக் செய்யும் போது குழந்தைகளுக்கு, கணவருக்கு ஹெல்தியான சுவையான ஒரு ரெசிபி சமைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால், இந்த குடைமிளகாய் முட்டை ஃப்ரை செய்து அசத்துங்கள். சப்பாத்திக்கு உள்ளே இந்த ஃபிரை வைத்து சுருட்டி ஸ்டஃப்டு சப்பாத்தியா கொடுக்கலாம். தோசையில் வைத்து சுருட்டி கொடுக்கலாம். சாம்பார் சாதம் ரசம் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சைட் டிஷ் ஆகவும் கொடுக்கலாம். நம்முடைய விருப்பம்தான். சிம்பிளான இன்ட்ரஸ்டிங்கான ஹெல்தியான இந்த ரெசிபியை தெரிந்து கொள்வோமா.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து கொள்ளுங்கள். அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் மிகப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறம் வந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன், சேர்த்து இஞ்சி பூண்டு பச்சை வாசனை போக வதக்கி அதன்பிறகு மீடியம் சைஸில் இருக்கும் பொடியாக நறுக்கிய தக்காளி – 1 சேர்த்து, நன்றாக வதக்கி தக்காளி பழம் வெந்து குழைந்து வரட்டும்.

- Advertisement -

அதன் பின்பு பெரிய சைஸ் குடை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது, போட்டு ஒரு நிமிடம் போல வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். அடுத்தபடியாக மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன், மிளகாய்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 1 ஸ்பூன், சீரக தூள் – 1 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு ஒரு நிமிடம் போல குடைமிளகாயோடு மசாலா பொருட்களை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.

இதற்குள் ஒரு பௌலில் 2 முட்டைகளை ஊற்றி மஞ்சள் கருவையும் வெள்ளைக் கருவையும் ஒன்றாக அடித்து வைத்துக் கொள்ளுங்கள். கடாயில் மசாலா பொருட்களின் பச்சை வாடை நீங்க குடைமிளகாய் வதங்கிய உடன் அடித்து வைத்திருக்கும் முட்டையை கடாயில் ஊற்றி அடுப்பை சிம்மில் வைத்து அப்டியே ஒரு நிமிடம் விட்டு விடுங்கள்.

- Advertisement -

முட்டையில் லேசாக வெந்து வந்ததும் ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து விட்டு கொண்டே இருக்க வேண்டும். முட்டை நன்றாக வெந்து வருவதற்கு இரண்டு நிமிடங்கள் மட்டும் தான் எடுக்கும். அப்படியே முட்டையை கரண்டியால் உதிர்த்து பொடிமாஸ் ஆக்கி விடுங்கள்.

இறுதியாக 2 ஸ்பூன் அளவு மிளகுத்தூளை இதன் மேலே தூவி நன்றாக கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அந்த கடாய் சூட்டிலேயே மீதமிருக்கும் முட்டையும் நன்றாக வெந்து மசாலா சூப்பராக தயாராகிவிடும். தேவைப்பட்டால் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி விடலாம். அவ்வளவு தான். சூப்பரான ஆரோக்கியமான ஒரு கேப்ஸிகம் எக் ஃபிரை ரெடி. சுடச்சுட சாப்பிட்டு பாருங்க. அப்படி ஒரு டேஸ்ட் இருக்கும்.

சற்று முன்