- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்உடல் எடையை குறைக்கும் கொள்ளு சாதம் 10 நிமிடத்தில் மணக்க மணக்க எப்படி செய்வது? சூப்பரான...

உடல் எடையை குறைக்கும் கொள்ளு சாதம் 10 நிமிடத்தில் மணக்க மணக்க எப்படி செய்வது? சூப்பரான ஒரு வெரைட்டி ரைஸ் ரெசிபி உங்களுக்காக.

- Advertisement -

உடல் எடையை அதி வேகமாக குறைப்பதற்கு செயற்கையான முறையில் எத்தனையோ வழிகள் உள்ளது. ஆனால் அந்த செயற்கையான வழிகளை பின்பற்றி நம்முடைய உடல் எடையை குறைத்தால் ஒரு நாள் இல்லை என்றாலும், ஒரு நாள் பக்கவிளைவுகள் வருவது உறுதி. ஆகவே உடல் எடையை குறைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் அவசரப்பட்டு எந்த ஒரு செயற்கையான வழியையும் பின்பற்றி விடாதீர்கள்.

இயற்கையான முறையில் நம்முடைய உடல் எடையை குறைக்க அந்தக் காலத்திலிருந்தே பயன்படுத்திவந்த பொருள் என்றால் அது கொள்ளு. அந்த கொள்ளை வைத்து உடல் எடையை குறைப்பதற்கு உடனடியாக 10 நிமிடத்தில் கொள்ளு சாதம் செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

அதாவது முன்கூட்டியே வெள்ளை சாதம் வடித்து உதிரி உதிரியாக ஆற வைத்து விட்டால், இந்த சாதத்தை 10 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் 50 கிராம் அளவு கொள்ளு போட்டு படபடவென பொரிந்து வரும் அளவிற்கு வறுத்து இந்த கொள்ளை தனியாக ஒரு தட்டில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். (சில சமயங்களில் கொள்ளுடன், கல் கலந்து இருக்கும் அதை முதலிலேயே சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.)

அடுத்தபடியாக அதே கடாயில் 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடலைப் பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 4, போட்டு நன்றாக வறுத்து இதையும் எண்ணெயிலிருந்து வடிகட்டி, வறுத்த கொள்ளுடன் போட்டு நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் பொடி செய்து அப்படியே தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடி அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது சாதத்தை தாளித்து விடலாம். கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு வறுத்த கடாயில் மீதம் எண்ணெய் இருக்கும். அதோடு – 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு உளுந்து – 1 ஸ்பூன், வரமிளகாய் – 2, கருவேப்பிலை தாளித்து, இந்த தலைப்பில் 1/4 ஸ்பூன் பெருங்காயம் போட்டு, அரைத்து வைத்திருக்கும் கொள்ளும்படியை இந்த தாளிப்பு எண்ணெயில் கொட்டி 1 நிமிடம் வரை வதக்கி விடுங்கள்.

அதன் பின்பு உதிரி உதிரியாக வடித்து வைத்த சாதத்தை கடாயில் கொட்டி தேவையான அளவு உப்பு தூள் தூவி, இந்த சாதத்தை கொள்ளு பொடியோடு சேர்த்து நன்றாக கலந்து விட்டு, சாதம் நன்றாக சூடு ஆன பின்பு அடுப்பை அணைத்துவிட்டு, ஒரு மூடி போட்டு 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.

இந்த பொடியோடு சாதம் நன்றாக ஊறி, உப்பு கருத்தோடு சுவையாக வந்துவிடும். அதன் பின்பு எடுத்து சாப்பிட்டாலும் சரி, அப்படி இல்லை என்றால் லன்ச் பாக்ஸில் பேக் செய்து கொடுத்தாலும் சரி. இது மிக மிக ருசியாக இருக்கும். அதே சமயம் உடல் எடையை குறைக்க உங்களுக்கு உதவி செய்யும். வாரத்தில் இரண்டு நாட்கள் இதை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இந்த ரெசிபி உங்களுக்கு பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்