என்னதான் வீட்டில் ஆரோக்கியமாக நாம் சமைத்துக் கொடுத்தாலும், நம்முடைய நாக்கு ஹோட்டல் ஸ்டைல் ருசியைத் தான் தேடுகின்றது. அந்த வரிசையில் பொதுவாகவே ஃப்ரைட் ரைஸ் என்றால், நாம் ரெஸ்டாரண்டில் சென்று தான் சாப்பிடுவோம். ஹோட்டலில் அந்த ப்ரைட் ரைஸை அப்படியே பவுலில் எடுத்து வரும்போதே ஒரு நல்ல வாசம் வீசும். வீட்டில் என்னதான் முயற்சி செய்தாலும் அந்த வாதத்தை கொண்டு வர முடியாது. ஆனால் பின் சொல்லக்கூடிய மெத்தடை ட்ரை பண்ணுங்க. நிச்சயமாக ஹோட்டல் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் உங்க கையாலயே வீட்டிலேயே செய்யலாம்.
முதலில் பாசுமதி அரிசியை பக்குவமாக உதிரி உதிரியாக வடித்து ஆற வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பாஸ்மதி அரிசி வடிக்கும்போது அதில் லேசாக உப்பு சேர்த்து வேகவைத்து வடித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பின்பு அடி கனமான அகலமான ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக சூடு ஆன பிறகு எண்ணெயில் இருந்து அப்படியே ஆவி பறக்கும் போது, பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் 1/2 கப், கேரட் – 1/4 கப், பீன்ஸ் – 1/4 கப், குடை மிளகாய் – 1/4 கப், இந்த காய்கறிகளை எல்லாம் போட்டு அந்த எண்ணெயிலேயோ நன்றாக வதக்கவேண்டும். காய்கறிகள் வாதங்கும்போது இதோடு பொடியாக நறுக்கிய பூண்டு பல் – 4, சேர்த்து கொள்ளுங்கள். அடுத்து பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் – 1 சேர்த்து நன்றாக காய்கறிகளை வதக்கி விடுங்கள்.
பிரைட் ரைஸுக்கு காய்கறிகள் முக்கால் பதம் வதங்கியதும், அடுத்தபடியாக காய்கறிகள் தேவையான உப்பை போட்டு, அஜினோமோட்டோ – 1/4 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, வடித்து வைத்திருக்கும் உதிரி உதிரியான சாதத்தை கடாயில் இருக்கும் காய்கறிகளோடு சேர்த்து, சாதத்திற்க்கு தேவையான அளவு உப்பு தூவி, நன்றாக கலந்து விடுங்கள்.
சாதம் கொஞ்சம் சூடாகி வந்ததும் வெள்ளை மிளகு பொடி – 1 டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – 1 ஸ்பூன் சேர்த்து, பக்குவமாக சாதம் உடையாமல் கலந்து விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக வெங்காயத் தாள் இருந்தால் இதன் மேலே தூவி அப்படியே சுட சுட பரிமாறினால் இது ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் போலவே இருக்கும்.
இதற்கு தொட்டுக்கொள்ள சாஸ் வைத்துக்கொள்ளலாம். இல்லை என்றால் தயிர் பச்சடி வைத்துக்கொள்ளலாம். இல்லை என்றால் நல்ல மஸ்ரூம் கிரேவி, மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி, கூட வைத்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் நான். உங்களுக்கு இந்த ரெமிடி படுத்திருந்தால் மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.