- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இந்த இரண்டு வகை சாதங்கள் செய்ய தெரிந்தால் போதும். காலையில் லஞ்ச் பாக்ஸிற்க்கு சட்டென இதனை...

இந்த இரண்டு வகை சாதங்கள் செய்ய தெரிந்தால் போதும். காலையில் லஞ்ச் பாக்ஸிற்க்கு சட்டென இதனை செய்து கட்டிக் கொடுக்கலாம்

- Advertisement -

காலை எழுந்தவுடன் அவசர அவசரமாக வேலைகளை முடித்துவிட்டு, மதியம் லஞ்சிற்க்கு என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். ஒரு சில நேரங்களில் நேரம் குறைவாக இருந்தால் முன்கூட்டியே செய்ய நினைத்த உணவுகளை சமைக்க முடியாது. அதனை சமைக்க ஆரம்பித்தால் நேரம் அதிகமாகி விடும். எனவே டக்கென ஏதாவது செய்து கட்டிக் கொடுக்க வேண்டியிருந்தால், இப்படி வெரைட்டி சாதம் செய்து கொடுக்கலாம். வெரைட்டி சாதம் என்றால் அதிலும் பலவகை இருக்கிறது. வெங்காயம் சாதம், புதினா சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம், தேங்காய் சாதம் இது போன்று பல வகைகள் இருக்கின்றன. ஆனால் பத்து நிமிடத்தில் செய்யக்கூடிய சில உணவு வகைகளும் இருக்கிறது. அவற்றில் இரண்டு உணவு வகைகளை சட்டென செய்ய முடியும். இவை மதியம் சாப்பிடுவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அவற்றை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

கடுகு சாதம் செய்யத் தேவையான பொருட்கள்:
வடித்த சாதம் – ஒரு கப், கடலைப்பருப்பு – ஒரு ஸ்பூன், வர மிளகாய் – 4, தேங்காய்த்துருவல் – 4 ஸ்பூன், கடுகு – அரை கப், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், எண்ணெய் – 4 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு, வர மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

பிறகு இவற்றுடன் 4 ஸ்பூன் தேங்காய் துருவல், கறிவேப்பிலை, உப்பு இவை அனைத்தையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட வேண்டும். பிறகு வடித்து வைத்திருக்கும் சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். அவ்வளவுதான் ஐந்தே நிமிடத்தில் சுவையான கடுகு சாதம் தயாராகிவிட்டது.

- Advertisement -

மாங்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 1, மாங்காய் – 1, கடுகு – ஒரு ஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு கப், எண்ணெய் – 4 ஸ்பூன், தேங்காய் துருவல் – 3 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், வடித்த சாதம் – ஒரு கப், மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து.

செய்முறை:
முதலில் மாங்காயை தோல் சீவி பொடியாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். பிறகு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் இவற்றுடன் கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு, இறுதியாக மாங்காய் துருவல், அதற்குத் தேவையான உப்பு சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு, இறுதியாக வடித்து வைத்த சாதத்தை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான மாங்காய் சாதம் தயாராகிவிடும்.

சற்று முன்