தலையில் இருக்கும் அழுக்கு சுத்தமாக போக வேண்டும். தலைமுடியில் முடி வளர்ச்சி அதிகரிக்க வேண்டும். தலைமுடி அதிகமாக கொட்டக்கூடாது. எந்த கெமிக்கலும் தலையில் போட கூடாது. எந்த ஷாம்புவை பயன்படுத்துவது. உங்கள் கையாலேயே செம்பருத்திப் பூவை வைத்து இந்த ஷாம்புவை தயாரித்து போட்டுப் பாருங்கள். இதற்கான ரிசல்ட்டை மூன்று மாதத்தில் நீங்களே கண்கூடாக கண்ணாடியில் பார்க்கலாம். உங்களுடைய முடி வளர்ச்சி எவ்வளவு தூரம் அதிகரித்து இருக்கிறது என்பதையும், முடி உதிர்வு எந்த அளவிற்கு குறைந்திருக்கிறது என்பதை உங்கள் வீட்டில் மூலை முடுக்குகளில் இருக்கக்கூடிய முடியை வைத்து கண்டுபிடித்து விடலாம்.
முதலில் 6 பூந்திக் கொட்டையை எடுத்து இடித்து உள்ளே இருக்கும் கொட்டையை நீக்கி விடுங்கள். பூந்திக்கொட்டைக்கு மேலே இருக்கும் ஓடு மட்டும் நமக்குப் போதும். கொட்டை நீக்கிய பூந்திக் கொட்டையை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு கொள்ளுங்கள். இதோடு சீயக்காய் – 3, வெந்தயம் – 1 டேபிள்ஸ்பூன் போட்டு 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்துவிடுங்கள். இரவு இந்த மூன்று பொருட்களையும் தண்ணீரில் ஊறப் போட்டால், மறுநாள் காலை ஷாம்பு தயாரித்து விடலாம். அதாவது 8 மணி நேரம் இந்த பொருட்கள் தண்ணீரில் ஊற வேண்டும்.
மறுநாள் காலை இந்த மூன்று பொருட்களும் தண்ணீரில் நன்றாக ஊறியிருக்கும். 5 செம்பருத்தி பூக்களை எடுத்து ஒவ்வொரு இதழாக பிரித்து இந்த தண்ணீரில் போட்டுக் கொள்ளவேண்டும். இந்த தண்ணீரை அப்படியே அடுப்பில் வைத்து மிதமான தீயில் 7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவேண்டும். தண்ணீரின் நிறம் சிவப்பாக மாறி இருக்கும்.
அதன் பின்பு அடுப்பை அணைத்துவிட்டு இந்த தண்ணீரை வடிகட்டி ஆறிய பின்பு உடனடியாக பிரிட்ஜில் செய்து வையுங்கள். தேவைப்படும் போது எடுத்து உங்களுடைய தலைக்கு ஷாம்பு போலவே அப்ளை செய்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் தலைக்கு குளிப்பதற்கு முன்பு இந்த ஷாம்புவை இலேசாக தலையில் தடவி 15 இலிருந்து 20 நிமிடங்கள் கழித்தும் தலைக்கு குளித்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.
இந்த ஷாம்புவில் பூந்திக்கொட்டை சேர்ப்பதால், கடையில் வாங்கிய ஷாம்புவில் நுறை வருவது போலவே வரும். அதுமட்டுமல்லாமல் தலையில் இருக்கும் அழுக்கும் சுத்தமாக போய்விடும். கவலையே படாம கெமிக்கல் கலக்காத பயம் இல்லாத ஒரு ஷாம்புவை தலைக்கு போடணும்னு நீங்க ஆசைப்பட்ட இந்த ஷாம்புவை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. பிரிட்ஜில் வைத்தால் இரண்டு வாரங்களுக்கு இந்த ஷாம்பு கெட்டுப் போகாது.
பூந்திக்கொட்டை, வெந்தயம், சீயக்காய் இந்த மூன்று பொருட்களையும் எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கணும். இந்த மூன்று பொருட்களும் தண்ணீரில் ஊறிய பின்பு அப்படியே இந்த பொருளோடு செம்பருத்தி பூவை மட்டும் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு வடிகட்டி எடுத்தால் ஷாம்பு தயார். மிக மிக சுலபமான முறை. மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.