நாம என்ன தான் இந்த சிறு சிறு குறிப்புகளை பார்த்து நம்மை அழகுப்படுத்திக் கொண்டாலும் ஏதாவது ஒரு விசேஷம், பங்க்ஷன் போவதென்றால் கட்டாயமாக பார்லர் சென்று தான் அழகு படுத்தி கொள்வோம். சில நேரங்களில் பார்லர் சென்று மேக்கப் போடுவதற்கு கூட நேரமில்லாத அளவிற்கு நமது வேலைகள் இருக்கும். இது போன்ற சமயங்களில் உங்கள் அன்றாட வீட்டு வேலைகளை செய்து கொண்டே இந்த பேஷியல் போட்டு கொள்ளலாம். அதுவும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே, இதனால் நேரமும் மிச்சம் ஆகும், காசும் செலவு ஆகாது வாங்க இந்த சூப்பர் பேசியலை வீட்டிலிருந்தபடியே எப்படின்னு செய்வது என்று தெரிஞ்சிக்கலாம்.
இந்த பேஷியல் போடுவர்க்கு முன் முகத்தை ஒரு காட்டன் துணி வைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் பால் இரண்டு டீஸ்பூன், லெமன் ஜூஸ் ஒரு டீஸ்பூன் இரண்டையும் ஒன்றாக கலந்து உங்கள் முகம் முழுவதும் தடவி விட்டு இரண்டு நிமிடம் கழித்து முகத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள்.
அடுத்தது காபி பவுடர் ஒரு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன், இரண்டையும் சம அளவு எடுத்து ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து விட்டு இதை உங்கள் முகத்தில் தேய்த்து ஒரு பத்து நிமிடம் ஷகிராப் செய்து விட்ட பிறகு எப்போதும் போல முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
மூன்றாவதாக உங்கள் முகத்தை ஆவி பிடித்து கொள்ளுங்கள். இதற்கு முன் செய்த இரண்டு முறைகளும் முகத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்குகள் அனைத்தையும் வெளிவர தான். அதன் பிறகு இப்படி ஆவி பிடிப்பதன் மூலன் அவை அனைத்தும் சுத்தமாக வெளியேற்றி அடுத்து நீங்கள் போடும் இந்த பேஸ் பேக் நன்றாக வேலை செய்ய உதவும்.
இதை எல்லாம் செய்த பிறகு ஒரு கிண்ணத்தில் கடலை மாவு ஒரு ஸ்பூன், தயிர் ஒரு ஸ்பூன், சந்தன பவுடர் ஒரு ஸ்பூன், இவை அனைத்தையும் தக்காளி சாறில் நன்றாக கலந்து உங்கள் முகத்தில் ஒரு பேக் போல் போட்டுக் கொள்ளுங்கள். இது இருபது நிமிடம் வரை உங்கள் முகத்திலே இருக்க வேண்டும். எனவே இந்த பேக்கை போட்டு விட்டு உங்களின் அன்றாட வீட்டு வேலைகளை நீங்கள் செய்யத் தொடங்கி விடலாம். இருபது நிமிடம் கழித்தது சாதாரண தண்ணீரைக் கொண்டு உங்கள் முகத்தை சுத்தம் செய்தாலே போதும்.
இதையும் படிக்கலாமே: ஹேர் பேக் போடாமலும், உங்க முடி சூப்பர் ஃபாஸ்டா வளரும். தலைக்கு குளிக்கும் போது இந்த ஐடியாவை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க. ஒரு முடி கூட கொட்டாது.
பார்லர் சென்று வந்ததை விட உங்கள் முகம் அத்தனை பள பளப்பாக மாறி இருக்கும். இதே இந்த பேசியல் பேக்கை நீங்கள் பார்லரில் சென்று செய்திருந்தால் எவ்வளவு செலவாயிருக்கும். அதிகபட்ச பத்து ரூபாய் செலவில் உங்கள் முகத்தை இத்தனை அழகாக மற்ற முடியும் என்றால் இனி பார்லர் எல்லாம் எதுக்குங்க.