ஹேர் பேக் போடாமலும், உங்க முடி சூப்பர் ஃபாஸ்டா வளரும். தலைக்கு குளிக்கும் போது இந்த ஐடியாவை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க. ஒரு முடி கூட கொட்டாது.

hair1
- Advertisement -

அவசர அவசரமாக வேலைக்கு ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நம்முடைய அழகுக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் நேரம் ஒதுக்குவது என்பது ரொம்பவும் சிரமமான காரியம் ஆகிவிட்டது. எவ்வளவு வேலை இருந்தாலும் சரி உங்களையும் உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் அழகையும் பார்த்துக் கொள்வது உங்களுடைய கடமை. இதை நினைவில் வைத்துக் கொண்டு இன்றைய பதிவிற்குள் செல்வோம். ரொம்பவும் முடி மெலிந்து போய் கொண்டே இருக்கிறது. முடி உதிர்கிறது. முடியை பராமரிப்பதற்கு நேரமே இல்லை என்பவர்கள், இந்தக் குறிப்பை மூன்று நாட்கள் முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்கே உங்களுடைய முடி உதிர்வதில் வித்தியாசம் தெரியும். குறிப்பை மூன்று மாதங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது, முடி வளர்ச்சியில் நல்ல வித்தியாசத்தை காண முடியும்.

இந்து குறிப்புக்கு நமக்கு தேவையான ஒரே 1 பொருள் கற்றாழை மட்டும்தான். கற்றாழையை அழகு குறிப்புக்கு எப்படி வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். தவறு கிடையாது. கொஞ்சம் கற்றாழை துண்டை உடைத்து உங்கள் வீட்டிற்கு கொண்டு வாருங்கள். முதலில் அதை சுத்தமாக கழுவி விடுங்கள். வெட்டிய இடத்தில் கசியும் அந்த மஞ்சள் நிற பாலோடு அழகு குறிப்புக்கு பயன்படுத்தக் கூடாது.  அதன் உள்ளே இருக்கும் வெள்ளை ஜெல் மட்டும் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு, ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்தால், 3 அல்லது 4 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். உங்களுக்கு பிரஷ்ஷாக அன்றே கற்றாழை ஜெல் கிடைத்தாலும் தவறு கிடையாது. அதை எடுத்து குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் உங்கள் முடிக்கு தேவையான அளவு எவ்வளவு கற்றாழை ஜெல் வேண்டுமோ அதை போட்டு, நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்தால் சூப்பரான ஜெல் தயாராக இருக்கும். இந்த ஜெல்லோடு நீங்கள் தலைக்கு பயன்படுத்தக்கூடிய சீயக்காய் அல்லது ஷாம்பூ எதை வேண்டும் என்றாலும் போட்டு கலந்து கொள்ளலாம். ஷாம்பு ஈசியாக இதில் கலந்து விடும். சீயக்காய் பொடியை இந்த கற்றாழை ஜெல்லுடன் போட்டால் கொஞ்சம் கட்டி பிடிக்கும். உங்கள் கையை வைத்தே நன்றாக கட்டிகள் இல்லாமல் கரைத்து விடுங்கள்.

இத்தனை வேலைகளையும் நிச்சயமாக காலை நேரத்தில் செய்ய முடியாது. முந்தைய நாள் இரவே கற்றாழை ஜெல் எடுத்து, அதில் ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி போட்டு ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை எழுந்தவுடன் பிரிட்ஜில் இருக்கும் இந்த பேக்கை எடுத்து வெளியில் வைத்து விடுங்கள். அந்த குளிர்ந்த தன்மை சுத்தமாக குறையட்டும்.

- Advertisement -

குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்பு இந்த பேக்கை தலையில் போட்டு விடுங்கள். 20 நிமிடம் கழித்து எப்போதும் போல குளிக்க சென்று தலையை கசக்கி அலசிவிடுங்கள். அவ்வளவு தான். உங்கள் தலைமுடியை சுத்தம் செய்வதற்கு தேவையான ஷாம்புவும் இதில் இருக்கிறது. உங்கள் முடிக்கு ஊட்டச்சத்து தரக்கூடிய அலோவேரா ஜெல்லும் இதில் இருக்கிறது. தலைக்கு பேக் போட்டு ஒரு கவரை கட்டிக்கொண்டு நீங்கள் சமைத்தாலும் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: ஸ்ட்ரெய்டனிங் செய்தது போல முடி நேராகவும், பளபளப்பாகவும் அலைபாய 4 வெண்டைக்காய் இருந்தால் போதுமே! எதுக்கு ஆயிரம் ஆயிரமா செலவு பண்றீங்க?

அவ்வளவு தாங்க. வாரத்தில் இதை இரண்டு முறை அல்லது மூன்று முறை கூட இந்த பேக்கை தயார் செய்து பயன்படுத்தலாம். 15 லிருந்து 20 நிமிடம் இந்த பேக் உங்கள் தலையில் இருந்தால் கூட போதும். செம்ம ரிசல்ட் கொடுக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. இரண்டு மூன்று முறை இந்த பேக்கை தலையில் போடும்போதே நல்ல வித்தியாசத்தை உணர்வீர்கள்.

- Advertisement -