- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்அஞ்சு நிமிசத்தில் கிராமத்து அவசர டிபன் சாம்பார் எப்படி தயார் செய்றதுன்னு பாக்கலாமா?

அஞ்சு நிமிசத்தில் கிராமத்து அவசர டிபன் சாம்பார் எப்படி தயார் செய்றதுன்னு பாக்கலாமா?

- Advertisement -

நகர்புற சமையலில் இருப்பதைப் போல கிராமத்து சமையல்களில் பெருமளவு சுவையை கூட்ட எந்த பொருட்களையும் சேர்த்து செய்வது கிடையாது. பெரும்பாலும் அவர்கள் வயல் வேலைக்கு செல்பவராக தான் இருப்பார்கள். அதுவும் காலையில் சீக்கிரமே வயல் வேலைக்கு அதனால் அவர்களின் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஏதோ ஒன்றை செய்து விடுவார்கள். ஆனால் அனைத்தும் ஆரோக்கியத்துடன் இருப்பது மட்டும் இல்லாமல் சுவையும் பிரமாதமாகவே இருக்கும். அப்படி அவர்கள் அவசரத்தில் வைக்கும் ஒரு அருமையான டிபன் சாம்பார் கிராமத்து கைப்பக்குவத்தில் எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்வோம்

தேவையான பொருட்கள்: தக்காளி பெரிய சைஸ் – 5, வெங்காயம் -3, பச்சை மிளகாய் -5, பூண்டு – 10 பல், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,கருவேப்பிலை – 1 கொத்து, கடுகு – 1 ஸ்பூன், சீரகம் -1 ஸ்பூன், உப்பு -1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், பெருங்காயம் -1/4 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கொத்துமல்லி – சிறிதளவு.

- Advertisement -

முதலில் வெங்காயம், தக்காளி இரண்டையும் நல்ல பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அடுத்து ஒரு குக்கர் எடுத்து அதில் வெங்கயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு மஞ்சள் தூள் என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து விடுங்கள்.

குக்கர் இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். விசில் இறங்கியவுடன் குக்கரில் உள்ள தண்ணீரை வடித்து விட்டு எடுத்து வைத்து விடுங்கள். பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பின் அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடான பிறகு கடுகு, சீரகம் போட்டு பொரிந்த உடன் கருவேப்பிலையும் பெருங்காயமும் சேர்த்த பிறகு எடுத்து வைத்த தண்ணீரை முதலில் ஊற்றி சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்து வந்தவுடன் அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி விழுதை இதில் சேர்த்து உப்பையும் சேர்த்து நன்றாக ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடுங்கள். சாம்பார் நன்றாக கொதித்த உடன், கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கி விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இப்படியும் கூட ரசம் சாதம் செய்யலாமா? உங்க வாய்க்கு எதுவுமே பிடிக்கல, ஏதாவது சுட சுட சாப்பிட்டா நல்லா இருக்கும் அப்படின்னு தோணும்போது இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க.

கிராமத்து ஸ்டைலில் சுவையான அதே சமயம் ஆரோக்கியம் நிறைந்த அவசர சாம்பார் ஐந்தே நிமிடத்தில் தயார். சுட சுட இட்லியை வைத்து இந்த சாம்பாரையும் வைத்து விட்டால் போதும், இன்னும் நாலு இட்லி சேர்த்தே சாப்பிடலாம் அவ்வளவு ருசியாக இருக்கும். இந்த சாம்பாரை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி தான் பாருங்களேன்.

சற்று முன்