- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகிராமத்து ஸ்டைலில் அரைக்கீரை கடையல் 5 நிமிஷத்தில் எப்படி செய்வது? கீரையை கடைந்தால் இப்படித்தான் கடையனும்!

கிராமத்து ஸ்டைலில் அரைக்கீரை கடையல் 5 நிமிஷத்தில் எப்படி செய்வது? கீரையை கடைந்தால் இப்படித்தான் கடையனும்!

- Advertisement -

கீரை கடையலில் அதிகம் செய்யப்படுவது அரை கீரை கடையல். இந்த அரைக்கீரை கடையல் கிராமத்தில் ரொம்பவே சுலபமாக நிறைய பொருட்களை எல்லாம் போடாமல், கொஞ்சம் பொருட்களை மட்டும் போட்டு அஞ்சு நிமிஷத்துல நம் பாட்டிமார்கள் எல்லாம் கடைந்து விடுவார்கள். அவ்வளவு அருமையாக இருக்கும் சாப்பிடுவதற்கு! அதே போல நாமும் சட்டுனு ஐந்து நிமிடத்தில் கிராமத்து ஸ்டைலில் அரைக்கீரை கடையல் எப்படி செய்யலாம்? என்பதை இனி இந்த பதிவின் மூலம் தொடர்ந்து பார்ப்போம் வாருங்கள்.

அரைக்கீரை கடையல் செய்ய தேவையான பொருட்கள்:
அரைக்கீரை – 1 கட்டு, பெரிய வெங்காயம் – ரெண்டு, தக்காளி – இரண்டு, பச்சை மிளகாய் – 3, பூண்டு பல் – 10, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – ஒரு ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், வடகம் – ஒரு டேபிள்ஸ்பூன், வரமிளகாய் – 2, கருவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு, புளி – பெரிய நெல்லிக்காய் அளவு.

- Advertisement -

அரைக்கீரை கடையல் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கட்டு கீரையை எடுத்து நன்கு அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். கீரையில் நிறைய மண் இருந்தால் நிறைய முறை தண்ணீர் ஊற்றி அலச வேண்டும். அப்பொழுது தான் மண் முழுமையாக நீங்கும். பின்னர் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கீரை கடையலுக்கு வடகம் தாளித்தால் அருமையாக இருக்கும் எனவே உங்களிடம் வடகம் இருந்தால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு குக்கரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கீரையை சேர்த்து கொள்ளுங்கள். ரெண்டு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள் அதே போல தக்காளியையும் சுத்தம் செய்து நறுக்கி சேருங்கள். காரத்திற்கு மூன்று அல்லது நான்கு பச்சை மிளகாய் வரை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேருங்கள். பின் பத்து பல் பூண்டு தோல் உரித்து சேருங்கள். பூண்டு சேர்த்தால் தான் கடையல் ருசியாக இருக்கும். பின்னர் அரை கப் அளவிற்கு மட்டும் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மூன்று விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உப்பு இப்பொழுது சேர்க்க கூடாது, கடையும் பொழுது தான் உப்பு, புளி எல்லாம் சேர்க்க வேண்டும். இல்லை என்றால் நிறம் மாறிவிடும். பிறகு குக்கரை திறந்து நன்கு ஆற வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் மண்சட்டி இருந்தால் அதில் மத்து போட்டு நன்கு கடைந்து எடுத்துக் கொள்ளுங்கள். சட்டியில் கடையும் பொழுது புளி மற்றும் உப்பு தேவையான அளவுக்கு சேர்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ஆறியதும் மிக்ஸி ஜாரில் இவற்றை சேர்த்து புளி மற்றும் தேவையான அளவிற்கு உப்பு போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள் போதும் கடைந்தது போல் கிடைத்துவிடும்.

இதையும் படிக்கலாமே:
தீபாவளிக்கு குலோப் ஜாமுன் செய்ய போறீங்களா? என்ன பிராண்ட் வாங்கலாம்? கொஞ்சம் கூட வெடிப்புகள் இல்லாமல் குண்டு குண்டு குளோப் ஜாமுன் செய்ய இதோ உங்களுக்கான டிப்ஸ்!

அவ்வளவுதான், இப்போது இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். அதற்கு வடசட்டி ஒன்றை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். சீரகம், உளுந்து ஆகியவற்றை தாளித்து ஒரு கொத்து கருவேப்பிலை போட்டு கொள்ளுங்கள். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வடகம் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் வர மிளகாய்களை காம்பு நீக்கி கிள்ளி சேர்த்து தாளியுங்கள். பின்னர் அடுப்பை அணைத்து கடையலுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எதுவுமே சேர்க்க தேவையில்லை! இந்த கெட்டியான அரைக்கீரை கடையல் ரெசிபி அஞ்சு நிமிஷத்திலேயே ரெடியாகி இருக்கும். இதனுடைய சுவை கிராமத்து சுவையில் அட்டகாசமாக இருக்கும், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்