தீபாவளிக்கு குலோப் ஜாமுன் செய்ய போறீங்களா? என்ன பிராண்ட் வாங்கலாம்? கொஞ்சம் கூட வெடிப்புகள் இல்லாமல் குண்டு குண்டு குளோப் ஜாமுன் செய்ய இதோ உங்களுக்கான டிப்ஸ்!

gulab-jamun-recipe
- Advertisement -

தீபாவளி வந்ததுமே அதிரசம், முறுக்கு, குலோப் ஜாமுன் என்று விதவிதமாக பலகாரங்களை செய்ய துவங்குவோம். குறிப்பாக எல்லோருக்கும் ஈசியாக இருப்பது இந்த குலோப் ஜாமுன் தான்! விளம்பரங்களிலும் தீபாவளி வந்து விட்டாலே குலோப் ஜாமுன் விளம்பரங்களுக்கு பஞ்சமே இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பும் இந்த குலோப் ஜாமுன் வீட்டில் செய்யும் பொழுது வெடிப்பு வந்து விடுகிறதா? வெடிப்புகள் எதுவும் இல்லாமல், சர்க்கரை பாகு காய்ச்சுவது முதல் குண்டு குண்டாக குலோப் ஜாமுன் நன்கு முழுவதுமாக ஊறுவது வரை குட்டி குட்டி டிப்ஸ் இதோ உங்களுக்காக இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்!

முதலில் குலோப் ஜாமுன் மாவு வாங்குவதில் ஆரம்பித்து சரியாக இருக்க வேண்டும். குலோப் ஜாமுன் மாவு விதவிதமான பிராண்டுகளில் கிடைத்தாலும் MTR ரொம்பவே சுவையாக இருக்கும். 200 கிராம் எம்‌டி‌ஆர் பேக் வாங்கி அதில் மாவின் ஒன்றுக்கு கால் பங்கு அளவிற்கு தண்ணீரை ஊற்றி மதுவாக பிசைய வேண்டும். நீங்கள் பிசையும் பொழுதே விரிசல் இல்லாமல் பிசைந்து விட்டால் இன்னும் சுலபமாக இருக்கும். நன்கு அழுத்தம் கொடுத்து தட்டி பிசைந்து கொள்ளுங்கள். பிசைந்த பின்பு நெய் அல்லது எண்ணெய் தடவி வையுங்கள், இல்லை என்றால் மேற்புறம் காய்ந்து விடும்.

- Advertisement -

ஐந்து நிமிடம் ஊற விட்டால் போதும் அதற்கு மேல் ஊற விட வேண்டிய அவசியம் இல்லை! அதன் பிறகு நீங்கள் சிறு சிறு உருண்டைகளாக உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப நன்கு உருட்ட வேண்டும். உருட்டும் பொழுது உள்ளங்கையில் வைத்து அழுத்தம் கொடுக்காமல் மூன்று விரல்களை மேலே லேசாக வைத்து உருட்டுங்கள். உருட்டும் பொழுது உங்களுக்கு விரிசல் விட்டிருக்கக் கூடாது. எல்லா இடங்களிலும் ஒன்று போல நைசாக சரிசமமாக இருக்க வேண்டும். அழகாக ரவுண்டாக பால் போல உருட்டி எடுத்ததும் தட்டில் தனியாக அடுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் எல்லா உருண்டைகளையும் உருட்டி முடிப்பதற்குள் பாதி உருண்டைகள் காய்ந்து விடும் எனவே தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி போடுங்கள், அப்பொழுது தான் தட்டில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும். அடுப்பில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். நீங்கள் உருட்டி வைத்த உருண்டைகளை போட்டு மிதமான தீயில் வைத்து எல்லா புறமும் ஒன்று போல பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும். இப்பொழுது சர்க்கரை பாகு காய்ச்சுவதற்கு பேக்கில் இருக்கும் அளவின் படி 200 கிராம் பாகிற்கு 800 கிராம் அளவிற்கு சர்க்கரை சேர்க்க வேண்டும். ஆனால் நாம் அந்த அளவிற்கு கூட சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை!

- Advertisement -

600 கிராம் அளவிற்கு சேர்த்தாலே சரியாகத்தான் இருக்கும். 600 கிராம் சர்க்கரைக்கு, 600ml தண்ணீர் சேர்த்து நன்கு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். ஐந்து நிமிடத்தில் சர்க்கரை பாகு கம்பி பதம் வந்துவிடும். தொட்டுப் பார்த்தால் கம்பி போல உங்களுக்கு பாகு விரிந்து வரும். அதன் பிறகு நீங்கள் இந்த வறுத்து எடுத்த உருண்டைகளை அதில் போட வேண்டும். சிறிது நேரம் அப்படியே திறந்து வையுங்கள். நன்கு ஆறியதும் நீங்கள் மூடி வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே:
தயிரும் வேர்கடலையும் வைச்சு இட்லி, தோசைக்கு இப்படி சட்னி அரைச்சு பாருங்க. மாவு காலி எந்திரிங்கன்னு சொல்ற வரைக்கும் சாப்பிட்டே இருப்பாங்க. செம டேஸ்டியான சட்னி ரெசிபி.

இரண்டு மணி நேரத்தில் சர்க்கரை பாகு முழுவதுமாக உறிந்து கொள்ளும். சர்க்கரையின் அளவு அல்லது தண்ணீரின் அளவு மாறுபடும் பொழுது உங்களுக்கு பாகு உருண்டைகளை முழுவதுமாக உறிஞ்சி கொள்ள சிரமப்படும் எனவே இதே முறையில், இதே அளவுகளில் நீங்களும் குலோப் ஜாமுன் செய்து பாருங்கள். உங்களுடைய குலோப் ஜாமுன் நன்கு சர்க்கரை பாகை உறிந்து சாஃப்டாக பஞ்சு போல இருக்கும். கொஞ்சம் கூட வெடிப்புகள் இல்லாமல் குண்டு குண்டாக சூப்பரான குலாப் ஜாமுன் ரெசிபி இந்த தீபாவளிக்கு நீங்களும் இப்படி செய்து அசத்துங்கள்!

- Advertisement -