இப்போதெல்லாம் நம் வீட்டு குழந்தைகள் இந்த சீனத்து உணவாகிய நூடுல்ஸ்க்கு பெருமளவு அடிமையாகி விட்டார்கள் என்று சொல்லலாம். நூடுல்ஸ் பிடிக்காது என்று கூறும் குழந்தைகளை பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு இதன் சுவை குழந்தைகளை கவர்ந்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. பெரியவர்களும் கூட இதற்கு ஒன்றும் விதிவிலக்கு அல்ல. இந்த நூடுல்ஸ் வைகையில் இப்போது இந்த ஹாக்கா நூடுல்ஸ் என்பது மிகவும் பிரபலமாக ஒன்று. இந்த நூடுல்ஸ் காய்கறிகள், சாஸ் போன்றவைகளை சேர்த்து ஹோட்டல்களில் தயாரித்து தருகிறார்கள். நாமும் நம் வீட்டில் இதே ஹாக்கா நூடுல்ஸுசை செய்து தரலாம். அதற்கான செய்முறை பதிவு தான் இது.
தேவையான பொருட்கள்: நூடுல்ஸ் பாக்கெட் -150 கிராம், பூண்டு – 10 பல் (பொடியாக நறுக்கியது), பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது) இஞ்சி – 1 சின்ன துண்டு (பொடியாக நறுக்கியது )மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன், கரம் மசாலா – 1 டீஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன், நூடுல்ஸ் மசாலா – 1/2 டீஸ்பூன், மிளகு – 1 டீஸ்பூன், டொமேட்டோ கிட்சப் – 2 ஸ்பூன், சோயா சாஸ் – 1 ஸ்பூன், சில்லி சாஸ் – 1ஸ்பூன், வினிகர் – 2 ஸ்பூன், எண்ணெய் -2 டேபிள் ஸ்பூன், வெங்காயம் – 1,கேரட் -1,குடை மிளகாய் சின்னது -1 கோஸ் – 1 கைப்பிடி.
முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய், ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்த பிறகு நூடுல்ஸையும் அதில் சேர்த்து 90% வரை வெந்தவுடன் எடுத்து தண்ணீரை வடித்து விடுங்கள்.
தண்ணீரை வடிக்கும் போது நூடிலில் குளிர்ந்த நீர் அதாவது ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த தண்ணீரை நூடுல்ஸ் மேல் ஊற்ற வேண்டும் இதை போல் இரண்டு அல்லது மூன்று முறை ஊற்ற வேண்டும் ஊற்றிய பிறகு ஒரு தட்டில் இந்த நூடுல்ஸை பரப்பி ஆற வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து நூடுல்ஸ்க்கு மசாலாவை தயார் செய்ய, அடுப்பை பற்ற வைத்து பேனை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி,நறுக்கி வைத்த பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சேர்த்த பிறகு வெங்காயம், கேரட், குடை மிளகாய்,கோஸ் இவைகளையும் நீள வாக்கில் அரிந்து இதில் சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக கிளறி கொள்ளுங்கள். இது முழுவதுமாக வெந்து விட கூடாது நூடுல்ஸ் என்பதால் காய்கள் முக்கால் பதம் என்றாலே போதும். இதன் பிறகு இதில் மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, மிளகு சேர்த்த உடன் அடுப்பை லோ ஃபிளேமில் வைத்து இரண்டு நிமிடம் கிண்டி விட வேண்டும். இது கிண்டி முடித்தவுடன் சோயா சாஸ், டொமேட்டோ கிச்சப், சில்லி சாஸ், வினிகர் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்த பிறகு, ஆற வைத்த நூடுல்ஸ் இதில் சேர்த்து கொள்ளுங்கள்.
நூடுல்ஸ் இதில் சேர்த்த பிறகு வெகு நேரம் அடுப்பில் வைக்கக் கூடாது. அதே நேரம் வெகு நேரம் கிண்டவும் கூடாது நூடுல்ஸ் சேர்த்து ஒன்று அல்லது இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே அதில் இருக்கும் மசாலா அனைத்து நூடுல்ஸில் சேர்ந்து வரும் அளவிற்கு கிளறி அடுப்பை அனைத்து விடுங்கள்.
இதையும் படிக்கலாமே: இந்த தீபாவளிக்கு தட்டை செய்ய போறீங்களா? ருசியான மொறு மொறு தட்டை எளிதாக எப்படி வீட்டில் செய்வது?
அவ்வளவு தான் ஹோட்டலில் கிடைக்கும் டேஸ்ட்டான ஹக்கான நூடுல்ஸ இது உங்கள் கிச்சனில் தயாராகி விட்டது. ஹோட்டல்களில் வாங்காமல் இது போன்ற உணவுகளை கூட வீட்டிலே செய்து கொடுங்கள்.