இந்த தீபாவளிக்கு தட்டை செய்ய போறீங்களா? ருசியான மொறு மொறு தட்டை எளிதாக எப்படி வீட்டில் செய்வது?

thattai2
- Advertisement -

தீபாவளி வந்துவிட்டாலே முறுக்கு, தட்டை, சீடை என்று பலகாரங்களும், அதிரசம், சுழியம், குலோப் ஜாமுன் என்று இனிப்பு வகைகளும் செய்வதற்கு ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் நல்ல சுவையான தட்டை ரொம்பவும் எளிதாக நம் வீட்டிலேயே எப்படி தயார் செய்வது? இந்த தீபாவளிக்கு இந்த முறையில் தட்டை செய்து பாருங்கள், மொறு மொறுன்னு சூப்பராக இருக்கும். மொறு மொறு தட்டை சுலபமாக செய்வது எப்படி? என்பதை இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தட்டை செய்ய தேவையான பொருட்கள்:
இடியாப்ப மாவு – அரை கிலோ, உளுந்த மாவு – 50 கிராம், வர மிளகாய் – 10, பூண்டு பல் – 25, கருவேப்பிலை – இரண்டு கொத்து, மல்லித்தழை – அரை கைப்பிடி, கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், வெண்ணெய் – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், எண்ணெய் – தேவைக்கேற்ப.

- Advertisement -

தட்டை செய்முறை விளக்கம்:
முதலில் இடியாப்ப மாவு அரை கிலோ அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அரிசியை ஊற வைத்து காய வைத்து பின்னர் மிக்ஸியில் மாவு அரைத்தும் கொள்ளலாம். அதே போல 50 கிராம் அளவிற்கு உளுந்தை லேசாக வாணலியில் போட்டு ஐந்து நிமிடம் நன்கு வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம். அரை கிலோ இந்த அரிசி மாவுக்கு 50 கிராம் உளுந்த மாவு சேர்த்து நன்கு கலந்து வைத்து கொள்ள வேண்டும். இந்த மாவை தான் தட்டைக்கு நாம் பயன்படுத்த போகிறோம். இதிலிருந்து ரெண்டு டம்ளர் அதாவது 400 கிராம் அளவிற்கு மாவை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலைப்பருப்பை நன்கு அலசி சுத்தம் செய்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பத்து காய்ந்த மிளகாய்களை காம்பு நீக்கி கொஞ்சம் போல் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் ஊற வைத்துள்ள காய்ந்த மிளகாய்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் 25 பூண்டு பற்களை சேர்த்து கொஞ்சம் போல் தண்ணீர் தெளித்து நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

400 கிராம் அளவிற்கு நீங்கள் எடுத்து வைத்துள்ள உளுந்து கலந்த அரிசி மாவுடன் இந்த சில்லி பேஸ்ட் ஒரு ஸ்பூன் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். மீதம் இருப்பதை ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். மாவையும் அதே போல ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள், தேவையான பொழுது ஈசியாக பயன்படுத்துவதற்கு வசதியாக இருக்கும். இதனுடன் பொடி பொடியாக நறுக்கிய கருவேப்பிலை மற்றும் மல்லித்தழைகளை சேர்க்க வேண்டும். பின்னர் நீங்கள் ஊற வைத்துள்ள கடலைப்பருப்பையும் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு மற்றும் கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டு கைகளால் கலந்து விடுங்கள். இப்போது தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு சாப்டாக நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
உங்க வீட்டில் வெறும் வெங்காயம் தான் இருக்கா, கவலைய விடுங்க இட்லி, தோசை, சப்பாத்தி ஏன் சாதத்துக்கு கூட ஒரு பக்கா சைடு டிஷ் இரண்டுடே நிமிசத்தில் ரெடி பண்ணிடலாம் வாங்க.

இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு பாலித்தின் கவரில் எண்ணெய் தடவி அந்த உருண்டைகளை வைத்து கவரை மூடி லேசாக தட்டை போல ஒரு பாத்திரத்தை வைத்து நன்கு அழுத்திக் கொடுங்கள். பின்னர் அதில் இருக்கும் ஈரப்பதம் நீங்க சிறு சிறு ஓட்டைகளை போடுங்கள். பின்னர் ஒரு காட்டன் துணியில் போட்டு காய விடுங்கள். ஐந்து நிமிடம் நன்கு காய்ந்ததும் பிறகு சூடாக இருக்கும் எண்ணெயில் போட்டு இரண்டு புறமும் சிவக்க வறுத்து சலசலப்பு அடங்கியதும், எண்ணெயை வடிகட்டி எடுத்து விடுங்கள். அவ்வளவுதான், சூப்பரான சுவையான தட்டை ரெசிபி ரெடி! இதே மாதிரி நீங்களும் உங்க வீட்டில் தீபாவளி அன்று செய்து அசத்துங்கள், எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -