- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்சீக்கிரமா ஸ்லிம்மாக வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு இருக்குதா? உடல் எடையை குறைக்க தினமும் அரிசி சேர்க்காத...

சீக்கிரமா ஸ்லிம்மாக வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு இருக்குதா? உடல் எடையை குறைக்க தினமும் அரிசி சேர்க்காத இந்த இட்லியை சாப்பிடுங்க.

- Advertisement -

இன்றைக்கு காலை உணவு என்று சொன்னாலே எல்லோர் வீட்டிலும் இந்த இட்லி இருக்கும் அல்லவா. எல்லா உணவு பொருட்களிலும் முதன்மையாக சேர்க்கக் கூடிய பொருள் அரிசி. தினமும் அரிசியை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது நம்முடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது அதேசமயம் எடையும் குறையாது. லோ கேலரி உள்ள உணவை சாப்பிட்டு வந்தால் தான் உடல் எடை குறையும். அரிசி சாப்பிடுவதை கொஞ்சம் குறைத்துக் கொண்டு, பயிறு வகைகளை உணவோடு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும். அந்த வரிசையில் பச்சை பயிரை வைத்து ஹெல்தியான இட்லி சுலபமாக எப்படி செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இந்த இட்லிக்கு பச்சைப்பயிறு – 1 கப், உளுந்து – 1/2 கப், உப்பு தேவையான அளவு, இந்த மூன்று பொருட்கள்தான் தேவை. ஒரு கப் பச்சை பயிறு என்றால் 250 கிராம் அளவு பச்சை பயிறு எடுத்துக் கொள்ளுங்கள் சரியாக இருக்கும்.

- Advertisement -

பச்சை பயிரை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவி அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி 8 மணி நேரம் நன்றாக ஊற வைத்து விடுங்கள். அதன் பின்பு உளுந்தம் பருப்பை தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு கழுவி அதிலும் நல்ல தண்ணீரை ஊற்றி 2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து மிக்ஸி ஜார் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முதலில் ஊறிய பச்சைப் பயிரை தண்ணீரையெல்லாம் வடித்து விட்டு, போட்டுக் கொள்ளுங்கள். தேவையான அளவு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, இதை நைசாக மாவு போல அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். அதே மிக்ஸி ஜாரில் உளுந்தையும் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக ஆட்டி அரைத்து வைத்திருக்கும் பச்சை பயிறு மாவுடன், உளுந்தை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு மாவை நன்றாக கலந்து மூடி போட்டு அப்படியே 3 மணி நேரம் புளிக்க வையுங்கள். மாவு லேசாக புளித்து வரும். (இந்த மாவை தேவைப்பட்டால் கிரைண்டரில் போட்டு ஆட்டிக் கொள்ளலாம்.)

- Advertisement -

புளித்த மாவை ஒரு கரண்டியை வைத்து நன்றாக அடித்து கலந்து இட்லி வார்க்க வேண்டியதுதான். இட்லி தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி அரைத்து வைத்திருக்கும் மாவை இட்லி தட்டில் வார்த்து ஆவியில் 12 லிருந்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைத்து எடுக்க வேண்டும். நன்றாக வெந்து வந்த இட்லியை இரண்டு நிமிடம் ஆறவிட்டு ஒரு ஸ்பூனால் எடுத்தால் சாப்டான இட்லி நமக்கு கிடைத்துவிடும்.

சுலபமாக செய்யக்கூடிய இந்த ஹெல்தியான இட்லியை இன்னும் கூட ஹெல்தியாக மாற்றலாம். ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை தாளித்து இந்த தாளிப்பில் குடைமிளகாய், கேரட், வெங்காயம், தக்காளி, இப்படி உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை பொடியாக நறுக்கி போட்டு நன்றாக வதக்கி இந்த தாளிப்பை இட்லி மாவில் கொட்டி நன்றாக கலந்து இட்லி வார்த்து வைத்தாலும் சூப்பராக தான் இருக்கும். உங்கள் விருப்பம் போல இந்த இட்லியை செய்து சாப்பிடுங்க. வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த இட்லியை சாப்பிட்டாலும் உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியம். குழந்தைகளுக்கும் இந்த இட்லியை கொடுக்கலாம். குறிப்பாக உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த இட்லியை சாப்பிடலாம். பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

சற்று முன்