- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்காலிஃபிளவர் வடை சாப்பிட்டு இருக்கீங்களா? குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து ரெடி ஆவதற்குள், இந்த...

காலிஃபிளவர் வடை சாப்பிட்டு இருக்கீங்களா? குழந்தைகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து ரெடி ஆவதற்குள், இந்த ஸ்நாக்ஸ் ரெடி ஆகிடும். அவ்வளவு ஈஸியானா, டேஸ்டியான, ஒரு சிம்பிள் ஈவினிங் ஸ்நாக்ஸ் தாங்க இது.

- Advertisement -

இல்லத்தரசிகளின் மிகப்பெரிய கவலையே பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் என்ன செய்து கொடுப்பது என்று தான். இப்போதெல்லாம் குழந்தைகள் தினம் தினம் வகை வகையான ஸ்நாக்ஸ் வெரைட்டிகளை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். புதிது புதிதாக ஏதாவது செய்து தர வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் அதற்கு நாமும் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.இது போன்ற சூழ் நிலையை சமாளிக்க தான் ஒரு சுவையான சூப்பரான ஈவினிங் ஸ்நாக்ஸ் காலிஃபிளவர் வடை. இதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்: காலிஃபிளவர் -1 கப், வெங்காயம் -1, பச்சை மிளகாய் -2, சீரகம் -1/2 அரை ஸ்பூன், சில்லி பிளாக்ஸ் -1 ஸ்பூன், மஞ்சள் – 1/4 டீஸ்பூன், மல்லித்தூள் -1/2 டீஸ்பூன், கரம் மசாலா – 1/2 டீஸ்பூன், எலுமிச்சை பழம் – பாதி, உப்பு – 1/2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன், கடலை மாவு -100 கிராம், ரவை – 2 ஸ்பூன், அரிசி மாவு – 2 ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – 1 கைப்பிடி, எண்ணெய் – 250 கிராம்.

- Advertisement -

முதலில் காலிஃபிளவரில் தண்டு பகுதியை நீக்கி விட்டு மேல் உள்ள பூக்களை மட்டும் தனித் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பவுலில் சுடு தண்ணீர் எடுத்து அதில் கொஞ்சம் உப்பு சேர்த்த பிறகு அறிந்து வைத்த பூக்களை அதில் போட்டு ஐந்து நிமிடம் அப்படியே அந்த நீரில் வைத்து விடுங்கள்.

அதன் பிறகு பூவை நீரில் இருந்து எடுத்து காய் சீவும் சீவலில் துருவி கொள்ளுங்கள். பூவை மட்டும் துருவி கொண்டால் போதும் தண்டு பகுதி வேண்டாம்.

- Advertisement -

இப்போது இன்னொரு மிக்ஸிங் பௌலில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, அனைத்தையும் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு மஞ்சள் தூள், உப்பு, சீரகம், இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், தனியாத் தூள், சில்லி பிளாக்ஸ் அனைத்தையும் நன்றாக கலந்த பிறகு துருவி வைத்த காலிபிளவரையும் அதில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இதில் தண்ணீர் சேர்க்க கூடாது

இதன் பிறகு இந்த காலிஃபிளவர் கலவையில் கடலை மாவு, அரிசி மாவு, ரவை சேர்த்து, எலுமிச்சை பழத்தையும் பிழிந்து விட்டு நன்றாக பிசைந்து எடுத்து கொள்ளுங்கள். இவை அனைத்தும் கலந்த பிறகு மாவு உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வர வேண்டும். அந்த அளவுக்கு மாவை பிசைந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இவை அனைத்தையும் கலந்து வைத்த பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளுங்கள். அடுப்பு மிதமான தீயில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது பிசைந்து வைத்த இந்த மாவை வடை போல தட்டி ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வெஜிடபிள் குருமாவா இது? கறி குருமா மாறி இருக்கேன்னு எல்லாரும் ஆச்சரியமா சொல்ல போறாங்க! அசைவ சுவையில் சுத்த சைவ குருமா ரெசிபி.

அருமையான நல்ல கிரிஸ்பியான காலிஃபிளவர் வடை ரெடியாகி விட்டது. குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல ஈவினிங் ஸ்நாக்ஸ். இனி ஸ்நாக்ஸ்க்கு என்ன செய்வது என்ற கவலை இல்லாமல் இதை அடிக்கடி செய்து கொடுத்து அசத்துங்கள்.

சற்று முன்