வெஜிடபிள் குருமாவா இது? கறி குருமா மாறி இருக்கேன்னு எல்லாரும் ஆச்சரியமா சொல்ல போறாங்க! அசைவ சுவையில் சுத்த சைவ குருமா ரெசிபி.

veg-kurma2
- Advertisement -

சைவ விரும்பிகளுக்கு வெஜிடபிள் குருமா மீது ஒரு அலாதியான பிரியம் இருக்கும். அதிலும் இந்த மாதிரி ஒரு முறையில் நீங்கள் செய்து கொடுத்தால், இது கறி குருமாவா? என்று கேட்கும் அளவிற்கு அசத்தலான சுவையில் நிச்சயம் இருக்கும். நமக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை சேர்த்து ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த கறி சுவை வெஜிடபிள் குருமா ரெசிபி எப்படி செய்வது? என்பதை இனி தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வெஜிடபிள் குருமா ரெசிபி செய்ய தேவையான பொருட்கள்:
நீங்கள் விரும்பிய காய்கறி துண்டுகள் – ஒரு கப், சமையல் எண்ணெய் – நாலு டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 3, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, அண்ணாச்சி பூ, கல்பாசி – தலா 1, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், குழம்பு மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

வெஜிடபிள் குருமா ரெசிபி செய்முறை விளக்கம்:
வெஜிடபிள் குருமா செய்வதற்கு முதலில் தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், மீல் மேக்கர் என்று உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை நீங்கள் நறுக்கி வைத்துக் கொள்ளலாம். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் நறுக்கிய வெங்காயத்தில் பாதி அளவிற்கு அதில் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் லேசாக வதங்கியதும், பாதி அளவிற்கு நறுக்கிய தக்காளி பழத்திலிருந்து எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி, வெங்காயம் லேசாக வதங்கியதும் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ரெண்டு நிமிடம் இவை வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். பின்னர் இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நஸைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு சிறிய குக்கரில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

- Advertisement -

எண்ணெய் காய்ந்ததும் பட்டை கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, பிரிஞ்சி இலை, அண்ணாச்சி பூ ஆகியவற்றை தாளித்துக் கொள்ளுங்கள். இதுவும் உங்கள் விருப்பம் தான். உங்களிடம் இருக்கும் பொருட்களை வைத்து தாளித்தால் போதும். பின்னர் மீதம் இருக்கும் வெங்காயத்தை சேர்த்து வதக்கி விடுங்கள். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்குங்கள். பின் வெங்காயம் வதங்கியதும், தக்காளி பழங்களையும் சேர்த்து மசிய வதங்க வேண்டும். வெங்காயம், தக்காளி மசிய வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் சேர்த்து வதக்கி விடுங்கள். பின்னர் காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நீங்கள் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையையும் சேர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
உதிரி உதிரியான ரவை உப்புமா செய்வதற்கு தண்ணீரின் அளவு என்ன? ரேஷியோ தெரிந்தால் இனி ரவை உப்புமாவை சொதப்பவே மாட்டீங்க!

அவ்வளவுதான் இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். தண்ணீரை அதிகம் சேர்க்கக்கூடாது. மிக்ஸி ஜாரை கழுவிய தண்ணீரை சேர்த்தால் போதும். எந்த அளவிற்கு உங்களுக்கு குழம்பு வேண்டுமோ, அந்த அளவிற்கு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மூன்று விசில் விட்டு எடுத்து நறுக்கிய மல்லித்தழை தூவி பரிமாறி பாருங்கள். இது கறி குருமாவா? என்று எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு செம டேஸ்ட்டியாக இருக்கும்.

- Advertisement -