- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்வீடே மணக்கும் அருமையான தக்காளி குழம்பு 10 நிமிஷத்தில் குக்கரில் அரைச்சு வைப்பது எப்படி? இப்படி...

வீடே மணக்கும் அருமையான தக்காளி குழம்பு 10 நிமிஷத்தில் குக்கரில் அரைச்சு வைப்பது எப்படி? இப்படி வச்சா சாதத்துக்கு மட்டுமல்ல டிபன் வகைகளுக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாமே!

- Advertisement -

வீடே மணக்கும் அருமையான தக்காளி குழம்பு 10 நிமிடத்தில் தயாரித்து விடலாம். தக்காளி, வெங்காயத்தை அரைத்து செய்யும் இந்த தக்காளி குழம்பு கிரேவி போல கெட்டியாக திக்காக இருக்கும். இதன் சுவையும், மணமும் அவ்வளவு அலாதியானதாக நிச்சயம் இருக்கும். நீங்களும் இதே போல எளிதான முறையில் குக்கரில் அரைச்சி விட்டு தக்காளி குழம்பு ஒரு முறை வைத்து பாருங்க, ரசிச்சு ருசித்து சாப்பிடுவீங்க. சுவையான தக்காளி குழம்பு சுலபமாக வைப்பது எப்படி? என்பதை இனி தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
தக்காளி – 4, பெரிய வெங்காயம் – 3, மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், தாளிக்க: பட்டை, கிராம்பு, பிரிஞ்சு இலை – தலா 2, இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், குழம்பு மிளகாய் தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

தக்காளி குழம்பு செய்முறை விளக்கம்:
தக்காளி குழம்பு செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நான்கு பெரிய பழுத்த தக்காளி பழங்களை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

பின் இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் மிளகு, சீரகம் ஆகியவற்றை போட்டு பொரிய விடுங்கள். லேசாக பொரிய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தில் பாதி அளவிற்கு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கி வரும் பொழுது பாதி அளவிற்கு பொடியாக நறுக்கிய தக்காளி பழங்களையும் சேர்த்து வதக்கங்கள். வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து ஆற விட்டுவிடுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது ஒரு குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவுக்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள மசாலா பொருட்களை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின் மீதம் இருக்கும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்குங்கள். இப்போது தக்காளி துண்டுகளையும் சேர்த்து வதக்கி தேவையான அளவிற்கு உப்பு போட்டு மசிய விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
கல்யாண வீட்டு பூசணி அல்வா தளதளன்னு ரொம்ப சுவையா வீட்டிலேயே 10 நிமிடத்தில் எப்படி செய்வது? இப்படி மட்டும் செஞ்சா நாவில் கரைந்து வாயும், மனமும் இனிக்குமே!

நன்கு மசிந்ததும் நீங்கள் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்டையும் சேர்த்து கலந்து விடுங்கள். இப்பொழுது தேவையான அளவிற்கு தண்ணீரை சேர்த்து, மிக்ஸி ஜாரை கழுவி ஊற்றுங்கள். அதிகம் தண்ணீர் சேர்க்க கூடாது. பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள். ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி இரண்டு மூன்று விசில் விட்டு எடுங்கள். பிறகு நறுக்கிய மல்லி தழை தூவி சுவையாக பரிமாற வேண்டியதுதான். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த தக்காளி குழம்பு ரெசிபி நல்ல ஒரு மணமும், சுவையும் கொடுக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க.

சற்று முன்