இந்த பூஞ்சை நகங்கள் பெரும்பாலும் நகத்தில் அடிக்கடி இடித்துக் கொண்டு அந்த இடத்தில் ரத்தக்கட்டு போல் ஆனாலும், அல்லது செருப்பு இல்லாமல் நடக்கும் போது கால் விரல்களில் மண் துகள்கள் போன்றவை சேர்ந்து கொண்டாலும் அதிகம் வர வாய்ப்பு உண்டு. இது வந்தால் சொல்ல முடியாத அளவிற்கு வலி வேதனையும் வந்து விடும். பாதங்களில் வந்தாலும் அதில் மண் தூசு போன்றவை படிந்து தொல்லை கொடுக்கும்.கை விரல்களில் வந்து விட்டாலும் எந்த வேலையுமே செய்ய முடியாது. இந்த பூச்சி நகங்களை சுலபமாக சரி செய்வதற்கான முறையை தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம்.
நம்முடைய இன்றைய நடைமுறை வாழ்க்கையில் உள்ள பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை நம் வீட்டு பெரியவர்கள் என்றோ நமக்கு சொல்லி, செய்தும் காட்டியிருக்கிறார்கள். இன்றைய நவீன காலத்திலிருப்பவர்கள் தான் அதையெல்லாம் செய்வதும் இல்லை, நம்புவதும் இல்லை. இந்த பூச்சி நகத்திற்கு நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்லித் தந்த இந்த முறையை செய்தால் போதும் ஒரு வாரத்தில் நிச்சயமாக பலன் அளிக்கும்.
அதற்கு முதலில் ஐந்து பல் பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை இடி உரலில் சேர்த்து நல்ல பஞ்சு போல் இடித்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இது இரண்டுமே இந்த நகங்களில் உள்ள பூஞ்சைகளை அழிக்கக்கூடிய சக்தி அதிகம் உள்ள பொருட்கள். அது மட்டுமின்றி புது நகத்தையும் வளர வைக்க இவை பெரிதும் உதவி செய்யும். இந்த பொருட்களுடன் ஒரு டீஸ்பூன் சமையலுக்கு பயன்படுத்தும் வினிகரையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பூச்சி நகம் கை, கால் எதில் இருந்தாலும் கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் கல் உப்பு சேர்த்த சேர்த்த பிறகு கால்களில் இருந்தால் உங்கள் பாதங்களை சிறிது நேரம் அந்த தண்ணீரில் சிறிது வைத்து எடுங்கள். கைகளில் இருந்தால் கைகளையும் இதே போல் ஒரு பத்து நிமிடம் அந்த உப்பு தண்ணீரில் வைத்து எடுத்த பிறகு, பூச்சி நகம் உள்ள இடத்தை சுத்தமாக ஈரம் இல்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள்.
பத்து நிமிடம் அந்த இடத்தை காற்றாட விடுங்கள் ஈரம் இருக்கக் கூடாது. ஈரத்துடன் இதை வைத்தால் பலன் இருக்காது எனவே ஈரம் இல்லாமல் நன்றாக காய்ந்த பிறகு நீங்கள் தயார் செய்து வைத்து அந்த பூஞ்சை மருந்தை விரல்களில் வைத்து இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். ஒரு வாரம் இந்த முறையை தொடர்ந்து செய்து வரும் போது கண்டிப்பாக உங்கள் பூச்சி நகங்கள் மாறி புதிய நகங்கள் வரும்.
இதை பயன்படுத்தும் நேரத்தில் குளிக்கும் முன் கொஞ்சம் பேக்கிங் சோடாவை உங்களின் நகங்களின் மீது தேய்த்து அதன் பிறகு குளித்து வந்தால் இன்னமும் விரைவாக பலன் கிடைக்கும். இந்த முறை நிச்சயம் நல்ல பலனை தரக்கூடியது முயற்சி செய்து பாருங்கள்.