- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilபனிக்காலத்தில் தலைமுடி வறண்டு போகாமல் இருக்க, அடர்த்தியாக வளர இத மட்டும் ஃபாலோ பண்ணுன்னாலே போதுமா?

பனிக்காலத்தில் தலைமுடி வறண்டு போகாமல் இருக்க, அடர்த்தியாக வளர இத மட்டும் ஃபாலோ பண்ணுன்னாலே போதுமா?

- Advertisement -

சீசனுக்கு ஏற்றார் போல நம்முடைய தலைமுடியையும் நாம் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். வெயில் காலத்தில் மட்டும் அல்லாமல், பனிக்காலத்திலும் தலைமுடி சீக்கிரமே வறண்டு போய்விடும். பனிக்காலத்தில் நம்முடைய உடலானது உஷ்ணம் ஆக இருக்கும். இதனால் தலை முடி ஈரப்பதம் இல்லாமல் வறண்டு போவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு. எனவே பனி காலத்தில் எப்படி தலைமுடியை வறண்டு போகாமல் அடர்த்தியாக வளர செய்வது? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு பகுதியின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முதலில் பனிக்காலங்களில் அடிக்கடி தலைக்கு குளிப்பதை தவிர்க்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை தலைக்கு குளித்தால் போதும். அப்படி குளிக்கும் போது இந்த ஒரு முறையில் நீங்கள் ஹேர் பேக் போட்டு எளிதாக தலைக்கு குளித்து வந்தால், பனிக்கால நோய்கள் உங்களை எளிதாக அண்டாமல் பாதுகாக்கலாம். மேலும் தலை முடி வறண்டு போகாமல், ஈரப்பதத்துடன் அடர்த்தியாகவும் வளரும்.

- Advertisement -

இதற்காக ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டீஸ்பூன் வெந்தயம், இரண்டு டீஸ்பூன் கடுகு சேர்த்து கொஞ்சம் போல் தண்ணீர் ஊற்றி முதலில் நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்னர் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற விட்டு விட வேண்டும். ஒரு நாள் இரவு முழுக்க ஊறியதும் மறுநாள் காலையில் அதை ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் ஒரு ஸ்பூன் கெட்டியான தயிர் சேர்த்து அப்படியே நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அரைத்து எடுத்த இந்த விழுதுடன் அரைமூடி அளவிற்கு எலுமிச்சை சாற்றை பிழிந்து கொள்ளுங்கள். பின்னர் நன்கு கலந்து விட்டு ஒரு வடிகட்டியில் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வடிகட்டும் பொழுது பேஸ்ட் போல உங்களுக்கு நுரையாக இந்த ஹேர் பேக் கிடைக்கும். ரொம்பவே எளிதாக வீட்டில் அடிக்கடி சமையல் செய்யும் பொருட்களை வைத்தே சுலபமான இந்த பனிக்கால ஹேர் பேக் தயாரித்து விட்டாச்சு.

- Advertisement -

இந்த ஹேர் பேக்கை தலை முழுவதும் நன்கு மசாஜ் செய்த பின்பு 15 நிமிடம் ஊறவிட்டால் போதும், அதற்கு மேல் தேவை இல்லை. 15 நிமிடம் ஊற விட்டு பின்பு சாதாரணமாக நீங்கள் எப்பொழுதும் போல தலைக்கு அலசி விடுங்கள். எப்போதும் ஷாம்பு பயன்படுத்துபவர்கள் குறைந்தது 4 மூலிகை கன்டன்ட்ஸ் நிறைந்துள்ள ஷாம்பு வகைகளை பயன்படுத்துவது நல்லது. உங்கள் ஷாம்புவில் இருக்கும் இன்க்ரடியன்ஸை ஒரு முறை நன்கு வாசித்துக் கொள்ளுங்கள். இதில் கெடுதலை விளைவிக்கும் கெமிக்கல் இல்லாமல் இருப்பது அவசியமாகும்.

இதையும் படிக்கலாமே:
ஒரே வாரத்தில் ஒரு ரூபா கூட செலவில்லாம பூச்சி நகங்கள் விழுந்து புதிய நகங்கள் வர வேண்டுமா? அதற்கு உங்கள் சமையலறையில் இருக்கும் இந்த பொருள் போதும். நிச்சயம் ஒரு வாரத்தில் பலன் அளிக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

இது போல நீங்கள் பனிக்காலங்களில் சுலபமான முறையில் ஹேர் பேக் போட்டு வெதுவெதுப்பாக இருக்கும் தண்ணீரில் குளித்து வந்தால் முடி அவ்வளவு சீக்கிரம் வறண்டு போகாது, ஈரப்பதத்துடன் இருக்கும். மேலும் மென்மையாகவும், ஷைனிங்காகவும் மாறும். நீண்ட நாட்களுக்கு உங்களுடைய தலைமுடி ரொம்பவே ஆரோக்கியமாகவும் இருக்கும். எனவே பனிக்காலத்தில் ஹேர் பேக் போட்டு தலைமுடியை பராமரிக்கும் இந்த முறையை நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க பயனடையுங்க!

சற்று முன்