நாளை ஆடி 18டோடு சேர்ந்து வரும் சஷ்டி விரதம். இதை எல்லாம் செய்தால் நல்ல பலன் உண்டு

murugan
- Advertisement -

இந்த வருடம் சுபகிருது ஆண்டு 3.8.2022 அன்று புதன் கிழமையில் ஆடிப்பெருக்கு மற்றும் முருகனுக்காக வழிபடும் சஷ்டி விரதமும் அமைந்துள்ளது. அன்றைய தினத்தில் புதுத் தொழிலை துவங்கலாம்! சுமங்கலி பெண்கள் அன்று தாலி பெருக்கு விழாவாக வீட்டில் இருந்து செய்யும் முறையும் உண்டு. இப்படி அன்றைய தினத்தில் நாம் முறையாக செய்யக்கூடிய சீலைகளை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

சங்க காலத்தில் காவிரி ஆற்றில் ஆடிப் பெருக்கு நாளில் பயிரிடுதல், நெல் அறுவடை செய்தல் போன்றவற்றை செய்தால் அவை இரட்டிப்பாகும் என்பது அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆகையால் ஆடிப்பெருக்கு என்பது ரொம்பவும் விசேஷமான விழாவாக இருந்தது. சுமங்கலி பெண்கள் அனைவரும் ஒன்று கூடி சூரிய தெய்வத்திற்கு படையல் இட்டு புத்துணர்ச்சியுடன், புது தாலி கயிறு மாற்றிக் கொள்வர். இது போன்ற நடைமுறைகள் இன்றளவும் உண்டு.

- Advertisement -

சுமங்கலி பெண்கள் ஆடிப் பெருக்குக்கு முந்தைய நாள் வீடு வாசல்களை கழுவி சுத்தம் செய்து பின் பூஜை அறையையும், பூஜை சாமான்களையும் சுத்தம் செய்து, மறுநாள் ஆடிப் பெருக்கன்று காலையில் குளித்து முடித்து பூஜை அறையில் சுவாமி படத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு, பூ அலங்காரம் செய்து, உங்களுக்கு இஷ்டமான நைவேத்தியம் செய்து படைத்தால் நல்லது.

தாலி பிரித்து கோர்த்தல் என்பது முற்காலத்தில் நதி கரையிலோ, நீர் தளங்களிலோ செய்து கொண்டனர். ஆனால், இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியமற்றதாக இருக்கிறது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஓடும் நீர் நிலைகளில் செய்ய முடியாததால் அதை நமது பூஜை அறையிலேயே செய்து கொள்ளலாம். பூஜை அறையில் ஒரு கலசத்தில் நீர் எடுத்துக் கொண்டு அதில் மஞ்சள் கலந்து வைத்துக் கொள்ளவும். அதையே நம் காவிரி நீராகவும் அல்லது நதி கரையாகவும் நினைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

பிறகு ஒரு தலை வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, பழம் ஆகியவற்றை வைத்து மஞ்சள் கயிறையும் அதில் வைத்துக் கொண்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து விருந்தோம்பல் செய்ய வேண்டும். சுமங்கலி பெண்கள் தங்கள் கணவன்மார்களின் ஆயுள் நீடிப்பு, குடும்ப ஒற்றுமை, நோயில்லா வளங்கள் போன்று உங்கள் வேண்டுதல்களையும் மனதார வேண்டிக் கொண்டு புது தாலி கயிறை மாற்றிக் கொள்ளலாம்.

இந்த வருடம் ஆடி பதினெட்டோடு சேர்ந்து சஷ்டி விரத தினமும் வருவதால் அன்றைய நாளில் குழந்தை பேருக்காக சஷ்டி விரதமும் மேற்கொள்ளலாம். இதை ஆறு நாட்கள் மேற்கொள்வது வழக்கம். ஆடி பெருக்கு தினத்தில் சஷ்டி விரத தினமும் வருவது மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது.

குழந்தை இல்லாதவர்கள் மனைவியோ கணவனோ யாரேனும் விரதம் மேற்கொள்ளலாம், அல்லது கணவன் மனைவி இருவரும் விரதத்தை மேற்கொண்டால் சிறப்பு. இந்த விரதத்தில் உணவு உண்ணாமல் தண்ணீர் மட்டும் அருந்தி விரதத்தை மேற்கொள்ளுதல் அல்லது பால் விரதம், அதாவது காலையிலும் மாலையிலும் பால் மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம் அல்லது பால் பழ விரதம், அதாவது காலையிலும் மாலையிலும் பால் பழங்களை உண்டு விரதத்தை எடுக்கலாம் அல்லது இளநீர் விரதம், அதாவது இளநீரை மட்டும் அருந்தி விரதம் மேற்கொள்ளலாம். சஷ்டி விரத நாளில் முருகப் பெருமானை மனதார நினைத்து கந்த சஷ்டி அல்லது முருகனின் துதி பாடல்களை பாடினால் நிச்சயம் குழந்தை பேரு உண்டாகும் என்பது நம்பிக்கை.

- Advertisement -