ஆடி செவ்வாய் விரத வழிபாடு பலன்கள்

amman

ஆடி மாதம் என்பது பெண் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்களை வழிபாடு செய்வதும், திருவிழாக்கள் கொண்டாடுவதுமாக இருக்கின்ற ஒரு ஆன்மீகமயமான மாதமாகும். இந்த மாதத்தில் வரும் “ஆடி செவ்வாய் கிழமைகள்” சிறப்பான தினங்களாகும். இந்த ஆடி செவ்வாய் விரதம் இருப்பது மற்றும் வழிபாட்டு முறைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

Amman

ஆடி செவ்வாய் விரதம்

ஆடி மாத செவ்வாய் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து விட வேண்டும். பின்பு வீட்டையோ அல்லது பூஜையறையையோ மட்டுமாவது நீரால் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பூஜையறையில் உள்ள அத்தனை இறைவனின் படங்களுக்கும் பூக்களை சமர்ப்பிக்க வேண்டும். ஏதேனும் பழங்கள் மற்றும் பாலை நீங்கள் வணங்கும் இறைவனுக்கு நிவேதனம் வைக்க வேண்டும். இதை செய்த பின் இரண்டு குத்துவிளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி, இரு குத்துவிளக்குகளையும் இரு புறமும் வைத்து விட்டு சாம்பிராணி கொளுத்தி, அந்த புகையை பூஜையறை மற்றும் வீடு முழுவதும் பரவச் செய்ய வேண்டும்.

இப்போது உங்கள் பரம்பரையின் குல தெய்வத்தை வணங்கிய பின்பு இந்த ஆடி செவ்வாயில் நீங்கள் வழிபட இருக்கும் இறைவனை வேண்டி அன்றைய தினம் முழுதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருப்பது நீங்கள் வணங்கும் இறைவனின் ஆசிகளை பெற்று தரும். இந்த தினத்தில் உண்ணா விரதம் இருப்பது உடலுக்கும், மனதுக்கும் நன்மையை தரும் என்றாலும் முழு தினமும் உண்ணா நோன்பு இருக்க முடியாதவர்கள், இந்த தினத்தில் பழங்கள் மற்றும் பாலை உணவாக கொள்ளலாம். இந்த பால், பழங்களையும் உண்ணாமல் சாதாரண உணவுகளை உண்ண வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், இந்த செவ்வாய் கிழமை காலை இறைவழிபாட்டை முடித்த பின்பு உண்ண தொடங்கலாம்.

ஆடி செவ்வாய் வழிபாடு

ஆடி மாத செவ்வாய் கிழமைகள் அனைத்துமே இறை வழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நன்னாளாகும். செவ்வாய் கிழமை என்பது நவ கோள்களில் “செவ்வாய்” கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும் இந்த செவ்வாய் கிழமை முருகப்பெருமான் மற்றும் எந்த ஒரு பெண் தெய்வத்தையும் விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற கிழமையாகும்.

amman

- Advertisement -

நீங்கள் இக்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு விரதமிருக்க விரும்பினால் அந்த முருக பெருமானுக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களை பாடி வணங்கி, பின்பு அருகிலுள்ள முருகப்பெருமான் கோவிலுக்கோ அல்லது சந்நிதிக்கோ சென்று வணங்க வேண்டும். இந்த ஆடி செவ்வாய்களில் இப்படி விரதமிருந்து வழிபடுவதால் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் கொண்டவர்களுக்கு அந்த தோஷத்தின் கேடான பலன்கள் நீங்கும். இந்த ஆடி செவ்வாய்களில் அம்மனுக்கு விரதமிருப்பவர்கள் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றிய பின் அம்மனுக்குரிய மந்திரங்களை கூறி வணங்கி, பிறகு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும். இதனால் எல்லோரையும் காக்கும் தாயான அம்மனின் மனம் குளிர்ந்து நமக்கு ஆரோக்கியம் மேம்படும், திருமணம் புத்திர பேறு தாமதம் நீங்கும். கடன்கள் தீரும். மற்றும் எல்லா வித வளங்களும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
தண்ணீருக்கும் வீட்டில் உள்ள செல்வத்திற்கும் என்ன தொடர்ப்பு தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் மந்திரங்களை பெற எங்களோடு இணைந்திருங்கள்.

English overview:
Here we discussed few things about Aadi chevvai viratham and Aadi chevvai vazhipadu benefits in Tamil.