- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஆடி கிருத்திகையில் பாட வேண்டிய முருகன் பாடல்

ஆடி கிருத்திகையில் பாட வேண்டிய முருகன் பாடல்

- Advertisement -

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பலவிதமான நாட்கள் இருக்கின்றன. அதிலும் ஒரு சில நாட்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய அற்புதமான நாட்களாக திகழ்கிறது. அப்படிப்பட்ட அற்புதமான நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் ஆடி மாதத்தில் வரக்கூடிய கிருத்திகை. கிருத்திகை நட்சத்திரமே ஆடி மாதத்தில் இரண்டு முறை வந்தது என்றும் அதில் அனைத்து முருக ஆலயங்களிலும் ஆடிக்கிருத்தியாக கொண்டாட கூடியது ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி தான் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த நாளில் நம்மால் ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக விரதம் இருக்க முடியவில்லை அல்லது வழிபாடு செய்ய இயலவில்லை என்று மன வருத்தத்துடன் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களும் எந்த பாடலை பாடி முருகப்பெருமானை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆடி கிருத்திகை முருகன் பாடல்

முருகப்பெருமானை எந்த நெய்வேத்தியத்தை வைத்து, எந்த மலர்களை சாற்றி, எப்படி விரதம் இருந்து வழிபாடு செய்தாலும் முருகப்பெருமானுக்குரிய பாடல்களை பாடி வழிபாடு செய்யும்பொழுது அவரின் அருளை மிகவும் எளிதில் சுலபமாக பெற்றுவிட முடியும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அவருடைய பக்தர்கள் பலரும் அவரை பாட்டின் தலைவனாக வைத்து பாடல்கள் எழுதி வைத்து சென்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த ஒரு பாடலாக தான் இந்த பாடல் திகழ்கிறது.

- Advertisement -

காலையிலிருந்து முருகப்பெருமானை நினைத்து விரதம் இருக்க இயலாதவர்களாக இருந்தாலும் சரி, வழிபாடு செய்ய இயலாதவர்களாக இருந்தாலும் சரி, இந்த பாடலை முருகப்பெருமானை முழுமனதோடு நினைத்து ஒரே ஒரு முறை பாடினால் போதும். முருகனின் அருளை பரிபூரணமாக பெற்று விட முடியும். இந்த பாடலை வடக்கு திசை பார்த்தவாரு அமர்ந்து கொண்டு படிப்பது என்பது மிகவும் சிறப்பு. இந்த பாடலை பாடுவதற்கு முன்பாக தீபம் ஏற்ற வேண்டும் என்று எந்த நிபந்தனையும் கிடையாது. மேலும் இந்த பாடலை இன்று இரவுக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் கூறி வழிபாடு மேற்கொள்ளலாம்.

பாடல் வரிகள்

” ஓம் நமோ சுப்ரமண்யா
சகல லோக ரக்க்ஷா சுப்ரமண்யா
அருள்கொடுக்கும் ஆறுமுக வேலவா !
பரம புருஷா ! பாவநாசன !
பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை,
திருத்தணிகை, குன்றுத்துறை,
பழமுதிர்சோலை வாசா !
ஓம் நமோ சுப்ரமண்ய சகலலோக ரக்க்ஷா சுப்ரமண்யா… “

- Advertisement -

சகல உலகங்களையும் இரட்சித்து காக்கும் முருகனே எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீக்க கூடியவனே என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் அறுபடை வீடுகளையும் இந்த பாடலில் கூறி அறுபடை வீடுகளில் வீற்றிருக்கக் கூடிய முருகனை வழிபாடு செய்யும் விதமாக இந்த பாடல் அமைந்துள்ளது.

இதையும் படிக்கலாமே: அதிகம் சம்பாதிக்க வழி

முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு முருகப்பெருமானுக்குரிய கிருத்திகை நட்சத்திரமும் ஆடி மாதமும் சேர்ந்து வரக்கூடிய இந்த அற்புதமான நாளை தவிர விடாமல் பயன்படுத்த விரைவில் முருகனின் அருளை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்